பிரபல ‘வித்யாஷ்ரம’ பள்ளிகளில் தேசிய கீதம் பாடப் படுவதில்லை; நீதிமன்றத்துக்குப் போன ‘அவாள்’களின் நாட்டுப்பற்று!

நாட்டுப்பற்றை தனக்கே உரியதாக முழங்கிக் கொண்டிருக்கும் ஆர். எஸ். எஸ்., பாஜகவின் கொள்கைகளை பள்ளிகளில் புகுத்திக் கொண்டிருக்கும் ஆஷ்ரம பள்ளிகளில் தேசிய கீதமே பாடப்படுவதில்லை என முன்னாள் இராணுவ வீரர் செல்வ திருமாள் உயர்நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கில் சென்னையில் மிக புகழ் பெற்ற பள்ளிகளான வேலம்மாள் வித்யாஷ்ரம், பவன்’ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம், மகரிஷி வித்யா மந்திர், டிஏவி கேர்ஸ்ஸ் சீனியர் செகண்டரி ஸ்கூல் போன்ற பள்ளிகளில் தேசிய கீதம், காலை நேர கூட்டங்களில் பாடப்படுவதில்லை என தெரிவித்திருந்தார்(அவர்கள் சமஸ்கிருத மந்திரங்களை சொல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது). தமிழக அரசு பள்ளிகள் மற்றும் மத்திய அரசின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் மட்டும் தேசிய கீதம் பாடப்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல், அனைத்து பள்ளிகளிலும் தேசிய கீதம் பாடுவது கட்டாயம் என அறிவுறுத்தியுள்ளார்.

ஆங்கில ஊடகங்கள் அனைத்தும் தனியார் பள்ளிகளில் தேசிய கீதம் பாடுவது கட்டாயம் என செய்தி வெளியிட்டன. தமிழ் ஊடகங்கள், தனியார் ஊடகங்கள் என்பதை தலைப்பில் சொல்லாமல், தேசிய கீதம் பாடும் அரசு பள்ளிகளையும் சேர்த்து பொதுமைப் படுத்தி, ‘அனைத்து பள்ளிகளிலும் தேசிய கீதம்’ கட்டாயம் என செய்தி வெளியிட்டிருக்கின்றன.  தனியார் பள்ளிகளின் பெயர்களை வசதியாக தவிர்த்து விட்டனர்.

பத்திரிகையாளர் சாய்நாத் சொன்ன வாக்கியம்தான் நினைவுக்கு வருகிறது, “ஊடகங்கள் விளம்பரங்களுக்கு விலை போய்விட்டன!”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.