உயிருக்கு போராடியவருக்கு உதவவில்லையா ஸ்மிருதி இரானி? பலியானவரின் குடும்பம் குற்றச்சாட்டு: பொய்களின் பிறப்பிடமாகிறாரா அமைச்சர்?

உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு திரும்பிய மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பயணித்த கார், யமுனா விரைவு சாலையில் நள்ளிரவில் வந்து கொண்டிருந்தது.

அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த வாகனங்கள் திடீரென ஒன்றன் பின் ஒன்று மோதி விபத்தில் சிக்கின. இதில் போலீஸார் சென்ற பாதுகாப்பு வாகனம், அதன்பின் சென்ற ஸ்மிருதி இரானியின் கார்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

breaking_news_0.png

இந்த விபத்தில், ஸ்மிருதியுடன் சென்ற அவருடைய பாதுகாப்பு வாகனம் மோதியதில், சாலையில் இரு சக்கர  வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஆக்ராவி சேர்ந்த மருத்துவர் ரமேஷ் நகர் என்பவர் பலியானார்.

இதனிடையே , கார்கள் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவரை காப்பாற்ற முயன்றதாகவும், அவரை மருத்துவமனையில் அனுமதித்து விட்டதாகவும் ஸ்மிருதி இரானி ட்வீட் செய்திருந்தார்.

 

Capture.JPG

ஆனால், பலியான டாக்டர் ரமேஷ் நகருடன், பைக்கில் பயணித்த அவருடைய 12 வயது மகள் சண்டிலி நகர், அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கருத்தை திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.

sandilismritisaccidenrvictim.png

ஸ்மிருதியின் பாதுகாப்பு வாகனம் மோதியதால், படுகாயமடைந்து சாலையில் விழுந்து கிடந்த தன்னுடைய தந்தையை காப்பாற்றுமாறு ஸ்மிருதி மற்றும் அவருடன் சென்றவர்களிடம் தான் கெஞ்சியதாகவும், ஆனால் அவர்கள் மறுத்து விட்டதாகவும் அந்த சிறு பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

படுகாயங்களுடன் தன்னுடைய தந்தை பலமணி நேரம் சாலையிலயே கிடந்ததாகவும், உரிய நேரத்தில் உதவி கிடைத்திருந்தால் அவர் உயிர் பிழைத்திருப்பார் என்றும் சண்டிலி நகர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.