மதுரையில் உள்ள இலங்கைகள் அகதிகள் முகாமில் வசித்த ரவீந்திரன்(48) தினக்கூலி வேலை செய்துவருகிறார். 26 வருடங்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து வந்தவர் இவர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அகதிகள் முகாமில் கணக்கெடும் பணியைச் செய்த வருவாய் துறை அதிகாரி ராஜேந்திரன், ரவீந்திரன் சரியான நேரத்திற்கு வரவில்லை என்ற காரணம் கூறி, கடுமையாகத் திட்டி ‘கரண்டு கம்பத்தில் ஏறி சாவு’ என்று திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த ரவீந்திரன் அப்படியே தற்கொலை செய்தார்.
அவர் உயர் அழுத்த மின்கம்பத்தில் ஏறியது தற்கொலை செய்துகொண்டது ஊடகங்களில் வெளியானது. ஆனால், மதுரை மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் விஜேந்திர பிதாரி, ”போஸ்ட்மார்டம் செய்த பிறகுதான் எப்படி இறந்தார் என சொல்லமுடியும்” என்று ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.
இவனுக்கும் குடும்பம், பிள்ளைகள் என்று இருக்கும்தானே…?
LikeLike