சரக்கடிப்பவர்களுக்கு சகிப்புத்தன்மை ; சாதாரண மனிதனுக்கு ரொட்டி : ஆர்.எஸ்.எஸ். அனுதாபி அனுபம் கேர் தத்துவம்…

சகிப்புதன்மையின்மை பற்றிய தேசிய கருத்தரங்கு ஒன்றை “தி டெலிகிராப்’ பத்திரிகை கொல்கத்தாவில் ஏற்பாடு செய்திருந்தது. அதில் பி.ஜே.பி  எம்.பி கிரண் கேரின் கணவரும், பிரபல ஹிந்தி நடிகருமான அனுபம் கேர் கலந்து கொண்டு பேசினார்.

ஆர்.எஸ்.எஸ்.அனுதாபியான அனுபம் கேர், அந்த கூட்டத்தில் தன்னுடைய கருத்தாக வெளிப்படுத்திய விஷயங்களில் “ஷாம்பெயின் வைத்திருப்பவர்கள்தான் சகிப்புத்தன்மையின்மை பற்றி பேசுவதாக” குறிப்பிட்டார். “தெருவில் உலவும் சாதாரண மனிதனிடம் கேட்டால், அவன் ரொட்டித் துண்டை பற்றி மட்டும்தான் பேசுவான்” என்பது போன்ற தத்துவங்கள் இடம் பெற்றிருந்தன.

“அமெரிக்காவில் வசிக்கும் வசதியானவர்களும், ஷாம்பெயின் அருந்தும் பிரபலமானவர்களும் மட்டுமே, இந்தியாவில் சகிப்புத்தன்மையினை பரப்பி வருவதாக பரப்புரை செய்து கொண்டிருக்கிறார்கள்” என்றும், “தெருவில் நடமாடும் இந்திய நாட்டு குடிமகனோ அவனுடைய இரண்டு வேளை உணவை உறுதி செய்துகொள்வது குறித்துதான் பேசிக்கொண்டிருப்பதாகவும்” அனுபம் கேர் குறிப்பிட்டார்.

எமர்ஜென்சி கொண்டு வந்த காங்கிரஸ் ஆட்சியில், யாருமே சகிப்புதன்மையினை பற்றி பேசாத சூழலில், பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தவுடன், சகிப்புத்தன்மை பற்றி பேசுவது அரசியல் காரணம் மட்டுமே என்றும் கேர் தெரிவித்தார்.

சூப்பர் பவர் பாரதீய ஜனதா ஆட்சியிலும் கூட, சாதரணமான மக்கள், அவர்களின் இரண்டு வேளை உணவுக்காக போராடி கொண்டிருக்கிறார்கள் என்பதை அனுபம் கேர் உறுதி படுத்துகிறாரா ? என்று மட்டுமே, அனுபம் கேரின் பேச்சை கேட்டால், நமக்கு யோசிக்கத்தோன்றுகிறது

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.