தேச துரோக குற்றச்சாட்டில் கைதான மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமாரு 6 மாத இடைக்கால பிணை வழங்கிய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிரதீபா ராணி, ஹிந்தி படத்தின் பாடல் ஒன்றை தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார். அவர் சுட்டிக்காட்டிய பாடல் உபகார்’ படத்தில் இடம்பெற்ற தேசப்பற்றை வலியுறுத்தும் பாடல். அவர் மேற்கோள் காட்டிய வரிகள் இவைதான்.
Rang hara Hari Singh Nalve se
Rang laal hai Lal Bahadur se
Rang bana basanti Bhagat Singh
Rang aman ka veer Jawahar se.
Mere Desh ki Dharti sona ugle
ugle heere moti, mere desh ki dharti
இந்தப் பாடலுக்கான பொருள்..
“தேசியக் கொடியில் இருக்கும் பச்சை நிறம் ஹரி சிங் நல்வே(சீக்கிய போராளி)யிடமிருந்தும், லால் பகதூர் சாஸ்திரியிடமிருந்து வெண்மையும் காவி பகத் சிங்கிடமிருந்தும் அமைதியின் நிறம் ஜவஹர்லால் நேருவிடமிருந்தும் வந்தது. என் தாய் திருமண், தங்கத்தைக் கொடுத்தது, வைரங்களை, முத்துக்களையும் கொடுத்தது”
நீதிபதி பிரதீபா ராணி, தன்னுடைய உத்தரவில் “நாட்டின் பாதுகாப்புக்கு ஆச்சுறுத்தலை ஏற்படுத்தியவர்களுக்கு மாணவர்கள் சிலர் கோஷம் எழுப்பியுள்ளனர். மாணவர் சங்கத் தலைவர் கன்னய்யா குமார் தேச விரோத கோஷம் எழுப்பியதற்கு ஆதாரம் இல்லையென்றாலும் அந்த நிகழ்வுகளில் கன்னய்யா குமார் கலந்துகொண்டிருக்கிறார். மாணவர் சமூகத்தை இதுபோன்ற கிருமி தொற்றிலிருந்து காப்பாற்ற வேண்டும். சில சமயம் எடுத்துச் சொல்லலாம். சில நேரங்களில் தீவிர சிகிச்சை தேவைப்படலாம். சில நேரங்களில் அறுவை சிகிச்சைகூட தேவைப்படலாம்” என கூறியிருக்கிறார்.
அதாவது நீதிபதி தேவையில்லாத பிரச்சினைகளை விட்டுவிட்டு வைரங்களாகவும் முத்துக்களாகவும் இருக்கச் சொல்கிறார். அப்படியில்லையென்றால் தேச விரோத வழக்கு பாயும் என்பதையும் சுட்டிக்காட்டி எச்சரிக்கிறார்.
நீதி அல்ல சதி.நிறைய நீதிபதிகள்.,வானத்தில் இருந்து குதித்தது போல் கருத்து சொல்வது வினோதமே.,.
LikeLiked by 1 person