தேச விரோத வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைதான ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கன்னய்யா குமாருக்கு டெல்லி நீதிமன்றம் பிணை வழங்கியது. இதையடுத்து வியாழக்கிழமை திகார் சிறையில் இருந்து திரும்பிய கன்னய்யா, மாணவர் சங்க தலைவரை சந்தித்தார். பின்னர் ஜேஎன்யூ வளாகத்தில் தன்னை வரவேற்க காத்திருந்த மாணவர்களுடன் முழுக்கமிட்டார்.
பிறகு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். தனக்காக போராடிய மாணவர்களுக்கு நன்றி சொன்னார். நாடாளுமன்றத்தில் தீர்ப்பு சொன்னவர்களுக்கும் போலீஸுக்கும் நன்றி என்று கூறிய கன்னய்யாவுக்கு மாணவர்கள் ஆராவார கைத்தட்டல் செய்தனர்.
கன்னய்யா ஆற்றிய உரையின் சில துளிகள்…
சத்யமேவ ஜெய தே பிரதமருக்கு மட்டும் சொந்தமல்ல, எங்களுக்கும் சத்தியத்தின் மேல் நம்பிக்கை உள்ளது.
அரசியல் ஆயுதமாக தேச விரோத வழக்கு
இந்தியாவிலிருந்து நாங்கள் சுதந்திரம் கேட்கவில்லை; இந்தியாவுக்குள் சுதந்திரம் கேட்கிறோம்.
எங்களுக்கு இந்திய நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது.
நீங்கள் ஒரு ரோஹித்தை கொன்றீர்கள், ஆனால் இந்த இயக்கத்தை முடக்க முடியாது. இது பெரியது!
எங்களுக்கு தலை எழுத்தின் மேல் நம்பிக்கை இல்லை; ஆனால் ஏதோ நல்லது நடக்க இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது.
பிரதமர் மன்கி பாத் என பேசுகிறார், ஆனால் அவர் யார் பேசுவதையும் கேட்பதில்லை.
என்னைப் போல மாத வருமானம் ரூ. 3000 சம்பாதிக்கும் குடும்பத்தில் பிறந்தவர்கள், ஜேஎன்யூவில்தான் பி.எச்டி படிக்க முடியும். யாரெல்லாம் ஜேஎன்யூவுடன் இருந்தார்களோ அவர்களெல்லாம் வணங்கப் பட வேண்டியவர்கள்.
அரசை எதிர்த்தால் உங்களுக்கு எதிராக ஜோடிக்கப்பட்ட வீடியோக்கள் வெளியாகும்.
நமக்கு வறுமையில் இருந்தும் முதலாளித்துவத்தில் இருந்தும் விடுதலை வேண்டும்.
கன்னய்யாவின் முழு உரை வீடியோவில்…