தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னய்ய குமாரின் குடும்பம் பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் மஸ்லன்புர்-பிஹத் என்ற கிராமத்தில் வசிக்கிறது. மூன்று வாரங்களுக்கும் மேலாக சிறையில் இருந்த கன்னய்யாவுக்கு புதன்கிழமை ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம். இதை கன்னய்யாவின் கிராமத்தினர் கொண்டாடினர். தங்களுடைய மகிழ்ச்சியை கன்னய்யா குடும்பத்தினருடன் அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.