உள்ளாடையை துவைக்காவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை?!! : பெண் உதவியாளருக்கு சார்பு நீதிபதி நோட்டீஸ்…

சத்திய மங்கலத்தில், சார்பு நீதிமன்றத்தில்  அலுவலக உதவியாளராக பணிபுரியும் வசந்தி என்பவருக்கு,  இரண்டு நாட்களுக்கு முன், சார்பு நீதிபதியிடம் இருந்து ஒரு ஆவேச நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதில் “சார்பு நீதிபதி வீட்டில் துவைப்பதற்கு போடப்படும் துணிகளை சரிவர துவைக்காமல் இருப்பதாகவும், குறிப்பாக உள்ளாடைகளை அருவருப்படைந்து தூக்கி வீசி விடுவதாகவும், இது குறித்து நீதிபதியும் அவரது மனைவியும் கேள்வி கேட்டால் எதிர்த்து பேசுவதாகவும்” குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

அது மட்டுமல்லாமல், இப்படி குற்றம் இழைத்திருப்பதற்காக , வசந்தி மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டும், அந்த நோட்டீசில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

2.jpg

இந்த நோட்டீசையும், சத்தியமங்களை சார்பு நீதிபதியே , கையெழுத்திட்டு, பெறுநர் முகவரியுடன் அனுப்பி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நோட்டீசை பெற்றுக்கொண்டதாக வசந்தியும் பதில் கையெழுத்திட்டுள்ளார் என்பதும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

இந்நிலையில், இந்த நோட்டீஸிற்கு பதில் அளித்துள்ள வசந்தி, “தான் இனிமேல் இப்படிப்பட்ட புகார்கள் வராத அளவிற்கு ஒழுங்காக பணியாற்றுவேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

2.jpg

உள்ளாடை துவைக்க மறுத்த வசந்திக்கு, தற்போது விளக்கம் அளித்துள்ள வசந்திக்கு, அப்படி என்ன தண்டனை அளிக்க போகிறார் இந்த நீதிபதி என்பதுதான், தற்போதைய ஒரே கேள்வியாக இருக்கிறது.

Inputs from  Shankar A

 

One thought on “உள்ளாடையை துவைக்காவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை?!! : பெண் உதவியாளருக்கு சார்பு நீதிபதி நோட்டீஸ்…

  1. என்னடா நடக்குது அதும் பெரியார்
    மண்ணில் ? ஜட்டி துவைப்பது
    அலுவலக உதவியாளரின்
    வேலையா?

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.