வி. சபேசன்

2009இல் ஈழத் தமிழகளின் விடுதலைப் போர் மோசமாக தோற்கடிக்கப்பட்டது. தமிழினம் பேரழிவுக்கு உள்ளானது.
இது பலரை ஒருவித மனப்பிறள்வுக்கு உள்ளாக்கியது. இந்த மனப்பிறள்வு தமிழர்களை நிதானமான முறையில் சிந்தித்து, எதிர்கால திட்டங்களை வகுக்க முடியாதபடி செய்தது.
இந்த மனப்பிறள்வுக்கு உள்ளாகியவர்களில் சீமான் முக்கியமானவர். ஒரு நேரத்தில் அவரிடம் இருந்த தமிழினப் பற்றை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அவருடைய மனப்பிறள்வு அவரை ஒரு மோசமான நிலையை நோக்கி கொண்டு சென்றது.
சீமான் உண்மையில் ஒரு பயந்தாங்கொள்ளி. ஒரு கோழை. ஆனால் வீரன் மாதிரிக் காட்டிக் கொள்வார். அவரைப் பின்பற்றுகின்ற தமிழர்களின் நிலையும் இதுதான்.
இந்தியாவும், மேற்குலக வல்லரசுகளும் இணைந்து போரை நடத்தின. தமிழர்களை அழித்தன. இத்தகையை வல்லரசுகளை எதிர்க்கக்கூடிய வீரம் தலைவர் பிரபாகரனுக்குப் பின் யாருக்கும் வரவில்லை.
ஆகவே அவர்கள் தம்மால் எதிர்க்கக்கூடியவர்களை தேடினார்கள் அல்லது உருவாக்கினார்கள். அதே வேளை உண்மையான எதிரிகளிடம் சரணடைந்தார்கள்.
இந்திய வல்லாதிக்கத்தை எதிர்த்திருக்க வேண்டிய சீமான், அதற்கு அச்சப்பட்டு, தமிழ்நாட்டில் பலவீனமான நிலையில் இருந்த திமுகவையும், காங்கிரஸையும் எதிர்த்தார்.
யாரோ ஒருவரை எதிர்ப்பதன் ஊடாக தான் தமிழினத்திற்காக போராடுவதாக சுயஇன்பம் கண்டார்.
இந்திய அரசியலின் இயல்புக்கு ஏற்ப, திமுகவை எதிர்த்ததால் அதிமுகவை ஆதரிக்கவும், காங்கிரஸை எதிர்த்ததால் பாஜகவை ஆதரிக்கவும் சீமான் தலைப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக தமிழினத்தின் முதல் விரோத சக்தியான பார்ப்பனியத்திடம் தன்னை அடகு வைத்தார். அப்படியே அவர்களின் நலனுக்காக செயற்படுகின்ற கையாளாக சீமான் மாறினார்.
முடிவில் அதிக மனப்பிறளவுக்கு உள்ளான சீமான் சம்பந்தமே இல்லாதவர்களை எல்லாம் கைகாட்டி, இவர்களால்தான் வீழ்ந்தோம்’ என்று பிதற்றத் தொடங்கினார்.
புலிகளுக்கு அடைக்கலமும் ஆதரவும் கொடுத்த, தமிழை பேச்சாகவும் மூச்சாகவும் கொண்டுள்ள வைகோவைக் கூட ‘எதிரி’ என்று சொன்னார். தமிழர்களுடன் கலந்து விட்ட பழந்தமிழ்க் குடிகளை ‘வந்தேறிகள்’ என்று சொன்னார்.
தமிழர்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை எல்லாம் வேற்றினத்தவர்கள் என்றார். அவர்கள் படையெடுத்து வந்து தமிழர்களை அடக்கி ஆள்வது போன்று சித்தரித்தார்.
உண்மையில் சீமான் குறி வைத்தது தமிழ் நாட்டில் உள்ள ஈழத் தமிழ் ஆதரவு சக்திகளைத்தான். தமிழர்கள் விடுதலை அடைய வேண்டும் என்பதில் திராவிட இயக்கங்கள் கோட்பாட்டுரீதியில் உறுதியாக இருந்தார்கள்.
திராவிடம் என்பது இந்தியத்திற்கும், பார்ப்பனியத்திற்கும் எதிரானது. தமிழர்களுக்கு ஆதரவானது. ஈழத் தமிழர்கள் விடுதலை அடைய வேண்டும் என்னும் நோக்கத்தைக் கொண்டது.
2009 இன் பின்னர் தமிழ்நாட்டு இளைஞர்கள் திராவிட இயக்கங்களின் பின்னால் அணிவகுத்தால் அது இந்தியத்திற்கு சிக்கலாகி விடும். ஈழத் தமிழர் பிரச்சனையை ஏதோ ஒரு வகையில் தீர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடும்.
ஆகவே இது தமிழ்நாட்டிலும் ‘இயக்க மோதல்களை’ உருவாக்கியது. தனது கையாள் சீமான் மூலம் திராவிட இயக்கங்களுக்கு எதிராக தமிழ்நாட்டு இளைஞர்களை தூண்ட முற்பட்டது.
சீமான் மூலம் தமிழ்நாட்டில் ஈழத் தமிழ் ஆதரவு சக்திகள் பலம்பெறுவது தடுக்கப்பட்டது. இளைஞர்கள் பல குழுக்களாக பிரிகின்ற நிலை உருவானது. இந்தியத்திற்கு வரவேண்டிய எதிர்ப்பு திராவிடம் நோக்கி திசை திருப்பப்பட்டது.
இன்றைக்கு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான செயற்பாடுகளில் இருந்து பலர் ஒதுங்கி விட்டார்கள். மற்றவர்கள் தமக்குள் கருத்து மோதல்களில் பொழுதைக் கழிக்கிறார்கள். துடிப்பு மிக்க ஒரு தொகை இளைஞர் கூட்டம் வீணாய் போய் விட்டது.
சீமானுக்கு ஏற்பட்ட மனப்பிறள்வு காலப் போக்கில் அவரை இந்துத்துவ பார்ப்பனியத்தின் கையாளாக மாற்றியது. அவர் குணமாகின்ற கட்டத்தை தாண்டி விட்டார்.
வேறு வழியில்லை. ஒரு காலத்தில் எம்மோடு இருந்தவர் என்றாலும் கூட, இன்றைக்கு எதிரியின் நோக்கங்களுக்கு துணை போகின்றவராக மாறி விட்ட சீமானை எதிர்க்கத்தான் வேண்டும்.
நல்ல பதிவு ஆனால், கொஞ்சமாவது உண்மை இருந்திருக்கலாம்.
LikeLike
நல்லா கதை கட்டுறீங்க… எல்லாவற்றையும் விட “தமிழர்கள் விடுதலை அடைய வேண்டும் என்பதில் திராவிட இயக்கங்கள் கோட்பாட்டுரீதியில் உறுதியாக இருந்தார்கள்” என்று சொன்னீங்களே அதுதான் சூப்பர்… ஒரு வகையில பார்த்தா இந்த மண்ணிலிருந்து தமிழர்கள் அதுவும் ஈழத்தமிழர்கள் விடுதலை அடையனும்னு உறுதியா நின்றார்கள்னு சொல்லியிருந்தீங்கன்னா இன்னும் நல்லா இருந்திருக்கும்….. அப்புறமா “புலிகளுக்கு அடைக்கலமும் ஆதரவும் கொடுத்த, தமிழை பேச்சாகவும் மூச்சாகவும் கொண்டுள்ள வைகோ” னு சொல்லி நல்லா காமெடி தான் பண்ணுறீங்க…. வாழ்த்துகள்…
LikeLike
புலிகளுக்கு ஆதரவும் அடைக்கலமும் கொடுத்தால் தான் வைகோ தம்பி ரவி தடாவிலும் வைகோ போடவிலும் சிறையில் இருந்தார்கள் என்பது உலகுக்கே தெரியும் .. வைகோ தமிழை பேச்சாகவும் மூச்சகவும் கொண்டிருக்கிறார் என்பது சிறு பிள்ளைக்கும் தமிழகத்தில் தெரியும்.. உண்மையை தெரிந்துகொண்டு எழுதவும்.. சீமான் நிறம் மாறுவதில் கில்லாடி இதை இந்த கட்டுரை வெளிக்கொண்டு வந்திருகிறது
LikeLike
இந்தமாதிரி பதிவு போட்டு பிளைப்புநடத்துவதற்கு பதிலா உங்கள் வீட்டுப்பெண்களை விட்டு ஏதாவது தொழில் சொய்யலாம்
LikeLike
100% correct status……fraud dod seeman..
LikeLike
100% correct status
LikeLike
ஏண்டா நாலு வார்த்தை படிச்சிட்டா நாய் என்ன வேணா எழுதுவியா திராவிட இயக்கங்கள் ஈழ ஆதரவு இயக்கங்கள் அப்புறம் ஏண்டா வெண்ணெய்களா போர் சூழலில் வாய் மூடி இருந்தீர்கள்! சீமான் முருகனை முப்பாட்டானுதானே சொன்னாரு அவர் எப்ப இந்துதுவா சக்தியா மாறினார் ஆரியத்தை எதிர்க்க வந்த நாய்கள் பார்பனிய ஜெயலலிதாவை ஆட்சியில் அமர வைத்தவன் எவன் ? வந்தேறினு சீமான் சொல்கிறார் சரி அப்புறம் மயிருக்கு வந்தேறி மொழி பேசுகிறீர் ? வைகோ ஆதரவு கொடுத்தாரு அப்புறம் எதுக்கு புலிகளிடம் தொடர்புடையவருக்கு என் கட்சியில் இடம் இல்லை என்றார் ? இப்படி ஓராயிரம் கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இருக்காது ?
LikeLike
மலையாளி எம்.ஜி.ஆர்.பணம் குடுத்து உதவலேன்னா விடுதலைப்புலிகள் இவ்வளவு வளர்ச்சி பெற்றிருக்க முடியுமா!
எம்.ஜி.ஆர்.ஆட்சியில் விடுதலைப்புலிகள் தமிழகத்தில் ஆயுதபயிற்ச்சி எடுத்ததெல்லாம் போலிப்போராளி சீமானுக்கு தெரியுமா.இதுவெல்லாம் திராவிடத்தால் வளர்க்கப்பட்டதுதான் விடுதலைப்புலிகள்.
நல்ல பதிவு சீமான் இன்னும் தமிழ் தேசியமே கற்றுக்கொள்ளவில்லை முதலிள் அதைகற்க்கட்டும் பிறகு தமிழ் ஈழத்தை வடிவமைக்கலாம்!
LikeLike
இறுதிக்கட்ட போர் நடந்த போது தமிழகத்தில் பார்பனிய ஆட்சியமும், மத்தியில் பாஜக இந்துத்துவா ஆட்சியும் நடந்துச்சி அதனாலதான் ஈழத்தமிழர்களை கப்பாத்த முடியாம போச்சின்னு சொன்லிருந்திங்கனா இன்னும் நல்லாருந்துருக்கும்.
உலகமே அறியும் திராவிட கட்சியின் நாடகத்தை
மே 18ம் தேதி நாளிதழின் முதல் பக்கத்தில் “விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார்” என்ற செய்தியின் அடுத்த செய்தியே “திமுக மத்திய அமைச்சரவையில் பதவி குறித்து முக்கிய ஆலோசனை” த்தூ… நல்ல இருக்குடா நீங்க வெளக்கு புடிக்கறது.
ஆனா ஒன்னு உலகத்துலயே ஏர் கூலர், மெத்தை, கட்டிக்கிட்டது, வச்சிக்கிட்டது, ஒட்டிக்கிட்டத வெச்சி உண்ணாவிரதம் இருந்த பெருமை திராவிட கட்சிக்குதான் உண்டு அதையும் காலைல சாப்பிட்டுட்டு ஆரம்பிச்சி, மதியம் சாப்பாட்டு டயத்துக்குள்ள நாடகத்த முடிச்சிங்க பாருங்க அப்பவே உங்க திராவிடம் பல்லிலிக்க ஆரம்பிச்சிடுச்சி.
LikeLike