கன்னய்யா குமாரை ஜாமீனில் விடுவித்த நீதிபதி பிரபா ராணி, மாணவர் சமூகம் நோய் தொற்றுக்கு ஆளாகாமல் இருக்க தீவிர தொற்று தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதை முன்னிறுத்தி ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த ஜேஎன்யூ மாணவர்கள் பெருந்திரள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். வியாழன் அன்று மதியம் நடந்த இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முகப்புப் படத்தில் உள்ளனர்.
படங்கள்: Su Nand