டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமாரின் ஜாமீன் மனு புதன்கிழமை விசாரணைக்கு வருகிறது. வழக்கறிஞர்கள் சிலர் தாக்குதல் நடத்துவோம் என அறிவித்துள்ள நிலையில் கன்னய்யா குமாருக்கு புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட், ஹெல்மெட், காவலர் சீருடை அணிந்து, நீதிமன்றம் அழைத்து வருகிறது டெல்லி போலீஸ். வழக்கறிஞர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்கவே இந்த ஏற்பாடு என சொல்கிறது டெல்லி போலீஸ்.
தாக்குதல் நடத்துவோம் என பகிரங்கமாக அறிவித்த வழக்கறிஞர்கள் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.
படம்:ஹிந்துஸ்தான் டைம்ஸ்