தெலுங்கர் பேராசிரியர் அருணன் எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ…

செவ்வாய்கிழமை தந்தி டிவியில் ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சியில் சீமானின் பேச்சுக்கு சிலர் தமிழ் தேசியம் முலாம் பூசுகின்றனர். அவர்கள் பேராசிரியர் அருணனை தெலுங்கர் என்ற முகமூடி அணிவிக்கின்றனர். தெலுங்கரானபேரா. அருணன்  எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ…

 1. தமிழரின் தத்துவ மரபு (2 பாகங்கள்)

 2. காலந்தோறும் பிராமணியம் (8 பாகங்கள்)

 3. தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் – இரு நூற்றாண்டு வரலாறு

 4. மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை!

 5. கடவுளின் கதை (5 பாகங்கள்)

 6. யுகங்களின் தத்துவம்

பேராசிரியர் அருணன் ஐந்து தொகுதிகளாக பகுத்து எழுதியுள்ள ‘கடவுளின் கதை’ என்கிற நூல் இன்றைய காலகட்டத்தின் தேவையை நிறைவு செய்யும் வரவு என உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். கடவுள்தான் மனிதர்களைப் படைத்தார் என்கிற நம்பிக்கைக்கு மாறாக மனிதனின் ஆகச்சிறந்த படைப்பே கடவுள் என்று நிறுவுவது நாத்திகமல்ல, அறிவியல். நாத்திகம் அறிவியலின் துணைகொண்டு கடவுளை மறுத்ததேயொழிய அதை அழிக்கவில்லை. உண்மையில் கடவுள் தன் பக்தர்களைக்கண்டுதான் நடுநடுங்க வேண்டிய அவலத்திற்கு ஆளானது என்பதை அங்கதம் பொங்கும் நடையில் சொல்லிப்போகும் இந்நூல் கடவுளின் கதை தவிர்க்க முடியாதபடி அறிவியலின் கதையாகவும் இருப்பதை மறுக்கமுடியாத ஆய்வுத்தரவுகளுடன் முன்வைக்கிறது.

– எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா

கடவுளின் கதை  2,000 பக்கங்களுடன் 5 தொகுதிகளாக வந்துள்ள இந்த நூல், கடவுள்கள் தோன்றிய கதையை உலக வரலாற்றோடு சேர்த்துச் சொல்கிறது. கடவுள் உருவானபோதே முற்போக்குச் சிந்தனைகளும் கூடவே மூடநம்பிக்கை விஷயங்களும் சேர்ந்தே வளர்கிற போக்கை நுட்பமாக எழுதியுள்ளார் அருணன். தமிழிலக்கியத்தில் மார்க்ஸிய வரலாற்றுப் பார்வையோடு விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்ட மிக முக்கியமான நூல் இது.

– எழுத்தாளர் தேனி.சீருடையான்

காலந்தோறும் பிராமணியம் அருணன் எழுதிய மிக முக்கியமான நூல். சங்ககாலம் தொடங்கி சோழர் காலம், ஆங்கிலேய ஆட்சி காலம், இன்றைய நிலை வரை,  எப்படி பிராமணியம் காலந்தோறும் அரசை ஆள்பவர்களுடன் ஒட்டி உறவாடியது / உறவாடுகிறது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் விளக்கி இருப்பார். அவசியம் சேகரிப்பில் இருக்க வேண்டும் பொக்கிஷம்.

அருணன் எழுதிய புத்தகங்கள் இங்கே கிடைக்கும்

வசந்தம் வெளியீட்டகம்,
69/24ஏ, அனுமார் கோவில் படித்துறை,
சிம்மக்கல், மதுரை – 625 001.
தொலைப்பேசி: 0452-2621997

10 thoughts on “தெலுங்கர் பேராசிரியர் அருணன் எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ…

 1. சீமான் சரியான பதில்தான். கொடுக்கப்பட்ட நேர த்தில் பேச அனுமதிக்கா மல் நாய் மாதிரி குறுக்கே வந்து குறைத்தா அந்த நாயே என்ன செய்ய வே ண்டும் தடவி கொடுக்கவா இல்லை ங்கோத்த கல்ல விட்டு அடிக்கவா. லூசு அருணா கேள்விக்கு விடை தெரியாவிட்டால் பேய் மாதிரி கத்தினா இவன் பேராசிரியரா த்தூ.

  Like

 2. தலீத் நாயே என்று நாம் தமிழர் வேட்பாளர் சொல்கிறார்
  ஒரு பேராசிரியரை நாயே என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சொல்கிறார்.
  சூப்பர் நாகரீகம் !!

  Like

  1. தலீத் நாயே என்று திட்டவில்லை. இழிசாதி தலீதே என்று கேட்டார். தலீத் என்பது நம் சாதியை இழிவு படுத்தும் சொல் என்று சொல்ல முற்ப்பட்டார் என்பதே உண்மை. தலீத் என்ற மராட்டிய சொல் எப்படி ஆதி தமிழனுக்கு பெயராக மாறியது என்பதன் கோபமே அந்த சொல்.

   Like

   1. தலித் பெயரை ஆதித் தமிழன் என்று மாற்றிவிட்டால், உங்கள் நாடார், தேவர், கவுண்டர், வன்னியர் மற்றும் இதர சூத்திர ஜாதிகளுக்கும், நீங்கள் ஆதித்தமிழர் என சொல்லப்படும் ஜாதியற்ற மக்களுக்கும் இடையே பெண் கொடுத்தல் வாங்கல் மாப்பிள்ளை எடுப்பு தொடுப்பு எல்லாம் நடக்குமா? பிள்ளை இல்லாதவன் சாணி சட்டியை மோந்த கதையடா இந்த சீமான் எனும் சிரிப்பு நடிகன் “நாம் தமிழர்” என சொல்வது? அறிவற்றவன் வாயில் இருந்து பொய்யும் புளுகும் கேடுகெட்ட வார்த்தைகள் மட்டுமே வரும் எனபதற்கு சீமான் எனும் சின்னப்பயல் ஒரு சாட்சி! சீமான் ஏதாவது ஒரு மனநல மருத்துவமனையில் சேர்ந்து உதவி பெறுவது அவருக்கும் அவரின் தம்பிகளுக்கும் நல்லது!

    Like

 3. முழ காணொளியை பார்த்துவிட்டு பேசவும்,
  சீமானை குறை சொல்லுபவர்கள் ஏன் பேராசிரியர் அருணன் அவர்கள் குறை சொல்லவில்லை. உங்களுடைய தத்துவம் என்ன என்று சொல்லுங்கள் என்றதற்கு தமிழ் இனவெறியன் என்று சொன்னார் அதற்காக யாரும் பேசவில்லை நல்ல நோக்கத்திற்காக தமிழன் தான் தமிழ் நாட்டை ஆழவேண்டும் என்று சொல்லி அதற்காக பாடுபடும் சீமானை பார்த்து தமிழ் இனவெறியன் என்று சொன்ன அருணன் அவர்களை கண்டிக்காதது ஏன்?

  Like

  1. Seeman behaved like a conduct disordered adolescent. Seema’s stupidity is visualized and he was not ready to listen to others’ criticism. Pande again proved his perversion and he wanted Seeman to verbally abuse Prof. Arunan. Seeman is a kind of rejected piece of outdated Tamilist bullshit. Tamils are now international community and they mostly speak any foreign language rather than Tamil.

   Like

 4. பேராசிரியர் அருணன் தெலுங்கர் இல்லை. அவரது தாய்மொழி, தந்தைமொழி எல்லாம் தமிழே. ஒரு விஷயத்தைச் சொல்லுமுன் அதை சரியாக அறிந்தே சொல்லவேண்டும்.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.