செவ்வாய்கிழமை தந்தி டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் ‘விஜயகாந்துக்கு மவுசு- வாக்கு வங்கியா? காலச்சூழலா?’ என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் பேராசிரியர் அருணன்(மக்கள் நலக் கூட்டணி), வானதி ஸ்ரீனிவாசன்(பாஜக), சரவணன்(திமுக), சீமான்(நாம் தமிழர் கட்சி) ஆகியோர் கலந்துகொண்டனர். ரங்கராஜ் பாண்டே இந்த நிகழ்ச்சியை நெறியாள்கை செய்தார்.
நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் அதிமுக அகற்றுவதை முக்கியமான வேலை என்று சொல்லும் மக்கள் நலக் கூட்டணியின் முடிவை சொன்னார் பேரா. அருணன். அதற்கு சீமான் இதெல்லாம் ஒரு வேலையா? அவர்களோடுதானே மாறிமாறி கூட்டணியில் இருந்தீர்கள். பகுத்தறிவு பாதையில் போன பயணம் சினிமா பக்கம் திரும்புது என்று பாடிய கம்யூனிஸ்டுகள், இப்போது ஒரு சினிமாக்காரர் பின்னால் போகிறார்கள் என விமர்சனம் வைத்தார். அதற்கு அருணனும் விளக்க அளித்துக்கொண்டிருந்தார்.
பிறகு, “மக்கள் நலக் கூட்டணியை விட அதிக வாக்குகளை நாங்கள் பெறுவோம். குறைவாகப் பெற்றால் நாம் தமிழர் கட்சியைக் கலைத்துவிட்டு, கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துவிடுகிறேன்” என்று சீமான் பேசினார். அதற்கு அருணன் விளக்கம் கொடுத்தார், இடைமறித்த சீமான், “நீங்கள்லாம் கம்யூனிஸ்டா, கம்யூனிஸ்டா என்று திரும்பத் திரும்ப கேட்டார். உங்களுக்கு கொள்கை இல்லை. தத்துவம் இல்லை, நோக்கம் இல்லை என்றும் பேசினார்.
கோபமடைந்த அருணன், பெரியாரைப் பற்றி தவறாகப் பேசிய நீங்கள், கொள்கை கூட்டணிக் குறித்து பேசக்கூடாது என்று சொல்லவே இடைமறிக்க முற்பட்டு முடியாமல் போன சீமான், “ஏய், சும்மா லூசு மாதிரி பேசிக்கிட்டு இருக்காதய்யா” என அநாகரிகமான முறையில் பேசினார்.
இதற்கு கண்டனம் தெரிவிக்காத நிகழ்ச்சி நெறியாளர் பாண்டே, சீமானின் செயலை நியாயப்படுத்திப் பேசினார். வானதி ஸ்ரீனிவாசன் இறுதியில் பேரா.அருணனை அமைதியாக இருக்கும்படி சொன்னார்.
வீடியோ இணைப்பு இங்கே…
Reblogged this on தேன்கூடு.
LikeLike
PANDEY&HARI IVARKAL IRUVARUM CIRCUS KOMAALIKAL.MUTHUKELUMPILLATHA KOZHIKAL.JAALRA ADIKKUM NERIYAALARKAL
LikeLike
அருணனும் பதிலுக்கு சீமானை ‘நீதான்டா லூசு’ என்று 2 முறை கூறிவிட்டார். கணக்கு சரியாப் போச்சு!
LikeLike
Educated and historical frontline respectable politicians like Professor Arunan must avoid to discuss politics with illiterates fourth class fellows and the same media wd pande.
LikeLike
முழு வீடியோ பாருங்கள்… சீமான் பேச்சு முழு மரியாதையுடனும், பண்பாடுடனும் இருந்தது… அவர் பேச அனுமதிக்கப்படவில்லை … கோபமாகிவிட்டார்..
LikeLike
i have seen the full video, Seeman was talking in full respect, and a quality speech. but Mr Aruna started talking non-sence, i was thinking what foolish he is talking … Seeman told
LikeLike
முழ காணொளியை பார்த்துவிட்டு பேசவும்,
சீமானை குறை சொல்லுபவர்கள் ஏன் பேராசிரியர் அருணன் அவர்கள் குறை சொல்லவில்லை. உங்களுடைய தத்துவம் என்ன என்று சொல்லுங்கள் என்றதற்கு தமிழ் இனவெறியன் என்று சொன்னார் அதற்காக யாரும் பேசவில்லை நல்ல நோக்கத்திற்காக தமிழன் தான் தமிழ் நாட்டை ஆழவேண்டும் என்று சொல்லி அதற்காக பாடுபடும் சீமானை பார்த்து தமிழ் இனவெறியன் என்று சொன்ன அருணன் அவர்களை கண்டிக்காதது ஏன்?
LikeLike
mr. pande
LikeLike
pande neengalam thoguppalana, jalra adikkira neenga thesa virothi seemanukku atharavaka sirippu vera. kevala janthaka erukkathe unmaiyana thokupalanaga iru.
LikeLike