’பணம் இருந்தால் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்துவிடலாம்’ என்று கூறி புலம்பெயர் தமிழர்களிடம் சீமான் வசூல் வேட்டை செய்வதாக இலங்கையைச் சேர்ந்த களப்பணியாளர் அருணா சுதர்சன் தெரிவித்துள்ளார்.
தனது முகநூலில் அருணா சுதர்சன் ,
“இரண்டு நாட்களுக்கு முன்பு பாரிசில் இருந்து என் தோழியின் சகோதரர் பேசினார். சீமானுக்கு பெரிய அளவில் செல்வாக்கு இருக்கிறதாமே…. ஆட்சியைப் பிடித்து விடுவாரா? என்று கேட்டார். அவர் பேசி முடித்ததும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
ஒரு தொகுதியில் கூட சீமானால் வெற்றி பெற முடியாது என்றேன். அப்படியா என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டவரிடம்…. ஒரு தொகுதியில் ஆயிரம் வாக்குகளைக்கூட அவர் கட்சியால் வாங்க முடியாது என்றேன். அடுத்து அவர் கூறியதுதான் என்னை அருவெறுக்கச் செய்தது.
பணம் மட்டும் இருந்தால் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று ஒரு திட்டமிட்ட பொய்ப்பிரசாரத்தை சீமான் தரப்பு புலம்பெயர் ஈழத்தமிழர்கள் மத்தியில் பரப்பி பெரும் வசூல் வேட்டையில் இறங்கி இருக்கிறது.
ஈழ உறவுகளே…. எச்சரிக்கை! சீமானின் ஆவேச வார்த்தைகளை நம்பிவிடாதீர்கள். உங்கள் விடுதலை உங்கள் கையில் தான். தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களால் தமிழீழ விடுதலையைப் பெற்றுத்தந்துவிட முடியாது. சீமான் போன்ற போலி தமிழ்த்தேசியம் பேசுபவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.
அருணா கதிரேசனின் கருத்தை ஏற்று மக்கள் கண்காணிப்பகம் தொடர்பான வாக்கியங்கள் நீக்கப்பட்டன. பதிவி 3-3-2016 அன்று மேம்படுத்தப்பட்டது.
முகநூலில சீமான் குறித்து நான் எழுதியிருந்த பதிவினை The Times Tamil இல் வெளியிட்டிருந்தமைக்கு நன்றி. அது எனது சொந்த கருத்தாகும். அந்தக் கருத்திற்கும் நான் பணிபுரியும் மக்கள் கண்காணிப்பகத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. மக்கள் கண்காணிப்பகத்தின் பெயரை அந்தப் பதிவில் தாங்கள் தேவையில்லாமல் இணைத்திருப்பதை நான் வன்மையாக ஆட்சேபிக்கிறேன். என் உணர்வுக்கு மதிப்பளித்து நீக்குவீர்கள் என நம்புகிறேன். தங்கள் பதிவிலிருந்து மக்கள் கண்காணிப்பகத்தின் பெயரை
LikeLike
தங்களின் சனநாயக மாண்புக்கு நன்றி!
LikeLike