நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய தகவல் தொடர்புகளை தன்னுடைய நிறுவனத்தின் மூலமாகவே செய்வார் என்றும் நிகில் முருகன் இனி தன்னுடைய தகவல் தொடர்பு அதிகாரியாக நீடிக்க மாட்டார் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் சர்வ அதிகாரம் படைத்தவராக வலம் வந்த நிகில் முருகன் ஏன் இந்த நிலைக்கு தள்ளப்பட்டார் என்று சினிமா நிருபர்களிடம் விசரித்ததில் கிடைத்த சில தகவல்களை இங்கு பகிர்ந்துள்ளோம்.
*தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்த ஒரு பெண்ணிடம் நிகில் முருகன் தவறாக நடந்திருக்கிறார் என்றும், அந்த புகார் பி.ஆர்.ஒ கவுன்சிலுக்கு போனதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த புகார் ரஜினி மற்றும் கமலிடம் கொண்டு போகபட்டதாகவும், “உங்கள் இருவரின் பெயரையும் நிகில் முருகன் தவறாக பயன்படுத்துகிறார்” என்றும் சுட்டிக்காட்டப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
*இந்த தகவல் வெளியானதும், சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட பெண்கள், நிகில் முருகன் மீது காவல்துறையில் புகார் அளிக்கத் தயாரானதாகவும் கூறப்படுகிறது.
*இதைஅடுத்து, கடந்த டிசம்பர் மாதமே, பல ஊடக நிறுவனங்களிலும் – கமலின் பி.ஆர்.ஒ.வாக நிகில் பணியாற்றவில்லை என்றும் அறிவித்திருக்கிறார்கள்.ஆனாலும் இன்னமும் பல இடங்களில் தற்போதும் கமலின் ஆஸ்தான பி.ஆர்.ஒ.வாக நிகில் முருகன் – பார்க்கப்படுவதால் கமல் ஹாசனின் தரப்பில் இருந்து, அவருடைய ஊடக ஆலோசகர் ஷைலஜா குப்தா இந்த வெளிப்படையான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
*இதற்கு முன்னதாகவே நிகில் முருகன் மீது பத்திரிக்கையாளர்கள் பலர் கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. நடிகர்களை, தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, ஒற்றை அதிகாரமாக நிகில் மாறியதாக குற்றம்சாட்டப்படுகிறது.
*ஒரு பிரபல வார பத்திரிகையின் பிரபல சினிமா நிருபர், இயக்குனர் ஷங்கருடன் நேரடியாக பேட்டி எடுத்து அலுவலகம் வந்துவிட்டார். சில நிமிடங்களில் அவருக்கு ஷங்கரிடம் இருந்து தொலைபேசி வந்திருக்கிறது. “நீங்கள் நிகிலிடம் அனுமதி வாங்கவில்லையா என்று”?.அனுமதி வாங்கிவிட்டு பின், அந்த கட்டுரையை வெளியிடுங்கள் என்றும் சொன்னதாக தகவல் உண்டு. அந்தளவிற்கு இயக்குனர்களையும், நடிகர்களையும் நிகில் ஆட்டி வைத்து கொண்டிருந்தார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
*திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்து வாரிசுகள் திரைப்படைத்துறையில் இருப்பதால், திமுக ஆட்சியின் போது, அவர்களை கைக்குள் போட்டுக்கொண்டு, ஒரு குறுநில மன்னர் போல நிகில் உலா வந்ததும் தங்களுக்கு கண்கூடாக தெரிந்த விஷயம் என்று சினிமா பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
*கமல் என்ற ஆயுதத்தை கையில் வைத்துக் கொண்டு, அளவுக்கு அதிகமாக ஆட்டம் ஆடிய நிகிலுக்கு, தற்போது கமல் மூலமாகவே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.