1977-ஆம் ஆண்டில் எமர்ஜென்ஸிக்குப் பிறகு, நடந்த தேர்தலில் இந்திரா காந்தி தோற்றார். அந்தக் காலக்கட்டத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் மாணவர் சங்கத் தலைவராக இருந்தவர், சீதாராம் யெச்சூரி (இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர்). எமர்ஜென்ஸிக்கு எதிராக போராடிய காரணத்தால் சில காலம் தலைமறைவாக இருந்து, கைதாகி சிறையில் இருந்தவர்.
எமர்ஜென்ஸி விலக்கிக் கொள்ளப்பட்டப் பிறகு, இந்திரா காந்தி தேர்தலில் தோல்வியுற்ற பிறகும் அவர் ஜேஎன்யூவின் வேந்தர் பதவியில் இருந்து விலகாமல் இருப்பதைக் கண்டித்து அப்போதைய மாணவர் சங்கத் தலைவர் சீதாராம் யெச்சூரி தலைமையில் கிட்டத்தட்ட 500 மாணவர்கள், பல்கலைக் கழகத்தில் இருந்து பேரணியாகச் சென்று, இந்திரா காந்தியின் வீட்டு முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்திரா காந்திக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தினைப் பார்த்து அவர்களுடைய கோரிக்கை என்ன என்பதை வீட்டிலிருந்து வந்து கேட்டார் இந்திரா காந்தி. அப்போது, சீதாராம் யெச்சூரி கோரிக்கைகளைப் படித்தார். முதன்மையான கோரிக்கை இந்திரா காந்தி வேந்தர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்பது. கோரிக்கைகளின் ஊடே, எமர்ஜென்ஸி காலத்தில் போலீஸின் அராஜங்களை சுட்டிக்காட்டினார் யெச்சூரி. அமைதியாக எல்லாவற்றையும் கேட்ட இந்திரா, வீடு திரும்பினார்.
அடுத்த நாள் காலை தன்னுடைய பதவியிலிருந்து விலகினார்.
சீதாராம் யெச்சூரி தலைமையிலான இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற பகத் சிங் ஆய்வாளரும் ஜேஎன்யூ முன்னாள் பேராசிரியருமான சமன் லால் பகிர்ந்து கொண்ட தகவல் இது.

மோடி அரசு பதவியேற்ற பிறகு இந்தியாவில் அரங்கேறிக்கொண்டிருக்கும் சகிப்பின்மை சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னுடைய அரசு விருதை திருப்பி அளித்த சமன் லால், ஜேஎன்யூ மாணவர்களுக்கு எதிரான தேச விரோத வழக்குகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேலும் ஒரு அரசு விருதை திரும்ப ஒப்படைத்திருக்கிறார்.
அவரைChaman Lal Jnu இங்கே பின் தொடரலாம்.