”பற நாயே”! ஸ்விட்சர்லாந்து போனாலும் விடாத சாதித்திமிர்; எழுத்தாளர் ரவிக்குமாரை வன்மத்துடன் பேசிய இலங்கை தமிழர்

அண்மையில் இலங்கை யாழ் பல்கலைக்கழகம் ஆடைக்கட்டுப்பாடு விதித்திருந்தது. இது குறித்து உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். எழுத்தாளர் ரவிக்குமார்  தன்னுடைய முகநூலில் ‘இந்துமயமாகும் யாழ் பல்கலைக்கழகம்’ என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தார்.

“இலங்கையில் தமிழர் பகுதியில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற யாழ்ப்பாண பல்கலைக்கழக ( University of Jaffna ) நிர்வாகம் வகுப்புக்கு வரும் மாணவர்களுக்கான புதிய விதிகளை அறிவித்துள்ளது.

1. மாணவர்கள் வகுப்புகளுக்கு ஜீன்ஸ் பேண்ட், டி ஷர்ட் அணிந்து வரக்கூடாது

2. வெள்ளிக்கிழமைதோறும் மாணவிகள் சேலை அணிந்துவரவேண்டும்

3. மாணவர்கள் தாடியுடன் வகுப்புக்கு வரக்கூடாது

17.02.2016 அன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் ஒருபோதும் இத்தகைய நடைமுறைகள் அங்கு பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை.

தமிழ்நாட்டு அரசியல் தலைவர் ஒருவர் ஜீன்ஸ் அணிவதையும் டி ஷர்ட் போடுவதையும் தலித் இளைஞர்களின் அடையாளமாகக் குறிப்பிட்டுப் பேசியதை நாம் மறந்திருக்க முடியாது. ஒருவேளை யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகமும் அதே கருத்தைக்கொண்டிருக்கிறதா எனத் தெரியவில்லை. வெள்ளிக்கிழமைகளில் மாணவிகள் அனைவரும் சேலை அணியவேண்டும், மாணவர்கள் தாடி வளர்க்கக்கூடாது என்ற விதிகள் அது பல்கலைக்கழகம்தானா என்ற ஐயத்தை நமக்கு எழுப்புகின்றன.

இந்த விதிமுறைகள் நிச்சயம் பேரினவாத ஆட்சியாளர்களால் திணிக்கப்படுபவை அல்ல. ‘தமிழ்ச் சான்றோர்கள்’தான் இதைச் செய்கிறார்கள்.

யாழ்ப்பாண சமூகம் 19 ஆம் நூற்றாண்டை நோக்கி இழுத்துச் செல்லப்படுகிறதோ என்ற ஐயம் அங்கு மீண்டும் முழுவீச்சுடன் சாதிய பாகுபாடுகள் உயிர்ப்பிக்கப்பட்டபோதே எனக்கு எழுந்தது. பஞ்சம மக்களுக்கு சிறிதளவு உரிமையும் கொடுக்காத சாதித் தமிழர்கள் இப்போது தமது சாதி உணர்வுகளுக்கு முட்டுக்கொடுக்க மதத்தை இழுத்து வருகிறார்கள். இதை ஜனநாயக உணர்வுள்ளோர் ஏற்க மாட்டார்கள் என நம்புகிறேன்.

பதுங்கு குழிகளிலிருந்து எழுந்துவரும் இந்தமாதிரியான பிற்போக்குத்தனங்களை ஒழித்துக்கட்டாமல் சமத்துவத்துக்கான குரலை இனி எழுப்பமுடியாது என்பதை ஈழத் தமிழர்கள் உரத்து முழங்கவேண்டும்” என்ற ரவிக்குமாரின் கருத்துக்கு சுப்பையா ரத்தினம் என்பவர் எதிர்வினையாற்றினார். அதற்கு ரவிக்குமார் பதிலளித்தார். இரு கட்டத்தில் சுப்பையா ரத்தினம் சாதிய வன்மத்துடன் ‘பற நாயே’ என்று பின்னூட்டம் இட்டார். சுப்பையா ரத்தினம், இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்தில் வாழும் தமிழர். அவர் பத்திரிகையாளர் என்ற விவரமும் தெரியவந்திருக்கிறது.

ரவிக்குமாருக்கும் ரத்தினத்துக்கு நடந்த உரையாடல் இதோ…

Suppaiah Ratnam தமிழ்நாட்டை போல் தமிழை மறந்து தமிழ் பண்பாட்டை மறந்து செல்வதை போல அன்றி யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தமிழ் பண்பாட்டை காக்க எடுத்திருக்கும் நடவடிக்கை பாராட்டத்தக்கது. இதில் தமிழை ஒழுங்காக பேச தமிழ் பண்பாட்டை பேணாத தமிழ்நாட்டு காரர்கள் இது பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை. தமிழ்நாட்டு காரன் உங்கள் வேலையை நீங்கள் பார்த்துக்கொண்டிருங்கள். ஈழத்தமிழர்களின் விடயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள்.
Ravi Kumar இதை நீங்கள் ஏதோ ஒரு அயல்நாட்டில் இருந்துகொண்டு பேசுவது வியப்பளிக்கிறது. உம்மைப் போன்றோர் இருக்கும் எந்த நாடும் உருப்படாது
Ravi Kumar எங்கள் நாட்டு பிரச்சனையில் ஐநா மூக்கை நுழைக்கக்கூடாது என்றுதான் சிங்களவன் சொல்கிறான். அதே குரலை துரைரட்னம் எதிரொலிக்கிறார்.
Suppaiah Ratnam சேரன். தமிழ்நாட்டு காரர்களால் எங்களுக்கு எந்த விடிவும் கிடைத்ததில்லை. அழிவைத்தவிர. யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தமிழர் பண்பாடு தொடர்பாக எடுக்கும் நடவடிக்கைகளில் விமர்சனம் செய்ய தமிழ்நாட்டுகாரர்களுக்கு எந்த அருகதையும் கிடையாது. ஈழத்தமிழர்கள் அதை பார்த்துக்கொள்வார்கள்.
Ravi Kumar ஈழத் தமிழ்ச் சமூகம் Cheran Rudhramoorthy போன்றவர்களைத்தான் நம்பியிருக்கிறது
Suppaiah Ratnam ஈழத்தமிழர்களை அழித்த தமிழ்நாட்டு ரவிக்குமார் போன்ற நாய்களே பொத்தடா வாயை
Suppaiah Ratnam என்னைப்பற்றி கதைக்க என்னடா அருகதை இருக்கு உனக்கு. பற நாயே.
Cheran Rudhramoorthy தாடியை மழிக்க வேண்டும் என்பது விடோரியன் காலத்து விழுமியம். தாடியிலும் சேலையிலும்தான் தமிழ்ப் பண்பாடு தங்கி இருக்கிறது என நான் நம்பவில்லை. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ஏன் ஆண்களுக்கு வேட்டியை அல்லது கோவணத்தைப் பரிந்துரைக்கவில்லை? பெண்கள் மட்டும்தானா கலாசாரக் காவிகள்?

Ravi Kumar இந்த நபர் இந்தியாவில் இல்லை என்ற துணிவில் பேசுகிறார்.

Suppaiah Ratnam சேரன் அதைப்பற்றி யாழ்ப்பாண சமூகம் முடிவெடக்கட்டும். அதை விமர்சனம் செய்ய தமிழ்நாட்டு காரனுக்கு உரிமை கிடையாது. ஈழத்தமிழர்களை அழித்தது போதும். ஈழத்தமிழர்கள் தங்கள் விடயங்களில் சுயமாக முடிவெடுப்பார்கள்.
Cheran Rudhramoorthy துரைரத்தினம், நீங்கள் பொறுப்புடன், நாகரிகமாக எழுத வேண்டும். சாதியைச் சுட்டி எழுவது மிகுந்த கண்டனத்திற்குரியது. ஒரு பொறுப்புள்ள பத்திரிகையாளராக இருந்தீர்கள் என்பதற்காகக்த்தான் நான் உங்கள் குறிப்புக்குப் பதில் எழுதினேன். நீங்கள் ரவிக்குமாரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அதுதான் முறை.

Suppaiah Ratnam ரவிக்குமார் என்ற நபர் எந்த அடிப்படையை வைத்து நான் சிங்களவர்களின் குரலை பிரதிபலிப்பதாக கூறுவார். இவர்கள் எல்லாம் எங்களை அழித்தவர்கள். எதற்காக இவர்களிடம் மன்னிப்புக்கோர வேண்டும்.

Ravi Kumar இவர் ஒரு பத்திரிகையாளரா?

Ravi Kumar Ramasamy Thurairatnam
உம்மைப்போன்ற சாதிவெறி பிடித்தவர்கள் ஈழத் தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு.
Suppaiah Ratnam இந்தியன்கள் தான் ஈழத்தமிழர்களுக்கு சாபக்கேடு. இந்தியனால் தான் ஈழத்தமிழர்கள் அழிவை சந்தித்தார்கள். இந்தியன் அழிந்தால்தான் ஈழத்தமிழர்களுக்கு விடிவு

Ravi Kumarஇந்த நபரின் வசையால் நான் நிலைகுலையமாட்டேன். ஈழத் தமிழர் பிரச்சனை குறித்த எனது நிலைப்பாடும் செயல்பாடுகளும் எனது மனித உரிமைச் செயல்பாடுகளின் தொடர்ச்சியாக இருப்பவை. அந்தப் பிரச்சனையின் நியாயத்தை ஒரு அற்ப வசையின் அடிப்படையில் நிராகரிக்க மாட்டேன்.

ஈழத் தமிழ்ச் சமூகத்தை அரிக்கும் இத்தகையவர்களின் புற்றுநோய்க் கருத்துகள் ஒழிக்கப்படவேண்டும்.

மத அடிப்படைவாதம் எப்படி சர்வதேச அச்சுறுத்தலாக உள்ளதோ அப்படித்தான் இந்த சாதி அடிப்படைவாதமும் பார்க்கப்படவேண்டும்.

ஈழத்தில் உள்ள பஞ்சம மக்களுக்கு சமத்துவத்தைக் கோரும் பிரச்சாரம் முன்னிலும் தீவிரமாக முன்னெடுக்கப்படவேண்டும் என்பதையே இது உணர்த்துகிறது.

ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கும் ஒரு நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கும் இந்த நபர் அந்த நாட்டின் விழுமியங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளார் என்பதையும் கவனிக்கவேண்டும்.

இந்த விவாதத்தைப் பொதுவெளிக்கு எடுத்துச் செல்லுமாறு நண்பர்களைக் கோருகிறேன்.

இந்நிலையில் ஆடைக்கட்டுப்பாடு உத்தரவை யாழ் பல்கலைக்கழகம் திரும்பப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மன்னிக்கவும் முதல் பதிவில் பத்திரிகையாளர் சுப்பையா ரத்தினத்தின் படத்துக்குப் பதிலாக பத்திரிகையாளர் ரவி அருணாச்சலத்தின் படம் தவறுதலாக பதிவேற்றப்பட்டது. தற்சமயம் அந்தப்படம் நீக்கப்பட்டிருக்கிறது.

13 thoughts on “”பற நாயே”! ஸ்விட்சர்லாந்து போனாலும் விடாத சாதித்திமிர்; எழுத்தாளர் ரவிக்குமாரை வன்மத்துடன் பேசிய இலங்கை தமிழர்

 1. கடந்த 60 வருடங்களில் பறையர் வரலாற்றை உலகம் முழுவதும் கொண்டு சென்றிருந்தால் இப்படியான நிலை வந்திருக்காது!!! மாறாக பறையன் என்றால் இழிவானவன் என்ற பிரச்சாரத்தின் பலன் தான் இது!!!

  அந்த நபரை குறை கூறுவது என்பது முட்டாள்தனமான செயல்!!!

  Like

 2. சுப்பையாரத்தினம் போன்றவர்கள்
  ஈழத் தமிழரல்லர்.ஈனத்தமிழர்.
  பழந்தொல் தமிழ்க்குடியான பறையர்இனக்குழு வரலாறூறு எழுதப்பட
  வேண்டும்.
  எனைப் போன்று ஆதிக்கசாதியில் பிறந்
  தவர்களின் சாதீய உணர்வைத் தீய்த்தது
  மார்க்சீயக் கல்வியும் தொழிற்சங்க நடவடிக்கையும்தான்.
  வர்க்க அடிப்படையிலான பார்வைதான்
  வேண்டுமே தவிர இனரீதியிலான சிந்தனையும் பார்வையும் இத்தகையவர்
  களை எதிர்கொள்ள உதவாது.மாறாக சிங்கள இனவாதத்துக்குப் பதிலாக இந்து
  சாதீயவாதத்தையே தூக்கிப்பிடிக்க உதவும் என்பதே என் உறுதியான கருத்து.

  Like

 3. அகதிகளாகப் போனாலும் சாதி அகந்தை மாறாத கேடுகெட்ட ஈனப்பிறவி. ஜெர்மனியில் ஒருநாள் முழுதும் Road Block போடுமளவு கையில் ஆயுதங்கள் ஏந்தி சாதிச்சண்டை இருகுழுக்கிடையே நடந்து ஐரோப்பா முழுதும் சந்தி சிரித்தது. “கைதிகள் கண்ட கண்டம் ” எனது ஆஸ்திரேலிய பயண நூலில் இதை பதிவு செய்துள்ளேன்.யாழ்ப்பாணத்தமிழனை திருத்தவே முடியாது
  பத்திரிகையாசிரியனாக இருந்தாலும் பரதேசியாக இருந்தாலும் “சாதிதத்திமி”ரோடுதான் அலைவான். மலேசியாவில் தாழ்த்தப்பட்டவர்களை ஒரு காலத்தில் “வேசண்ட மகனே ” என்று தான் கூப்பிடுவார்கள்.இப்பொழுது கூப்பிட்டால் முதுகில் டின்னுதான்.வீடுபோய்ச் சேரமுடியாது.

  Like

 4. முதலில் நான் ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன். திரு. ரவிகுமார் அவர்களை மிகவும் மதிக்கும் எனக்கு அவர் மீது கருது மாறுபாடு கொள்ள உரிமை உண்டு என்றே நினைக்கிறன். சாதி பெயரை சொல்லி திட்டுவது மிக அயோக்கியதனமான கேவலமான ஒன்று என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. அது கடுமையாக கண்டிக்கத்தக்கது. நான் யாழ் பல்கலை கழகத்தின் பழைய மாணவன். அதன் மாணவர் ஒன்றியத்தில் 2004 உறுப்பினராக இருந்தவன். இப்போது விடயத்துக்கு வருவோம்.

  1. யாழ் பல்கலை கழகத்தில் வெள்ளி கிழமைகளில் பெண்கள் சேலை அணிய வேண்டும் என்ற கருத்து சற்று அதிக பிரசங்கி தனமானது. உண்மைதான்.
  2. தாடியுடன் வரும் மாணவர்கள் மீது எப்போதும் விரிவுரையாளர்களுக்கு எதிர்மறை எண்ணம் ஏற்படுகிறது. ஏன்எனக்கு கூட இப்போது எனக்கு கீழ் பணியாற்றும் அரச ஊழியர்கள் தாடியுடன் வந்தால் நிச்சயமாக பிடிக்காது. மேலும் பல அரச நிறுவனங்கள் இலங்கையில் அவை சிங்களவர்களோ தமிழர்களோ தாடி வைப்பதை விரும்புவதில்லை. (தனியார் வங்கிகள் , அரச வங்கிகள், மருத்துவ பீடங்கள் போன்றவை )

  3. டெனிம் ஜீன்ஸ், த ஷர்ட் போன்றவை அணிவது இங்கு பொதுவாக எல்லா மாணவர்களும் எல்லா இன மொழி சாதி காரர்களும் தான். தமிழ் நாடு நிலைமை இங்கே பொருந்தாது. எனினும் கிழிந்த தோற்றம் கொண்ட டெனிம் ஜீன்ஸ் போன்றவற்றை முழு மாணவர்களும் போட்டு திரிவதை எப்படி சகிப்பது.

  4. தமிழர்களின் பாரம்பரிய உடையான சேலை மீது எல்லோருக்கும் உள்ள வெறுப்பு புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இந்த வெறுப்பை வியாக்கியானத்தை முஸ்லிம்களின் பாரம்பரிய உடையாக அவர்கள் கருதும் அபயா மீது ஏன் ஒருவரும் காட்டுவதில்லை. ஐயா, ஒலுவிலில் உள்ள தென் கிழக்கு பல்கலையில் அபயா இல்லாமல் ஒரு முஸ்லின் பெண் சேலை அணித்தோ சுடிதார் அணிந்தோ சென்றால் என்ன நடக்கும் என்பதை வந்து பாருங்கள். மிக பெரும்பாலும் அங்கு பெண்கள் முகம் மூடி இருப்பார்கள். மேலும் இந்த விடயத்தை பிரச்சினைக்கு உரியதாக மாற்றியது முஸ்லிம் மாணவர்கள். ஏன் எனில் அவர்களின் அபயாவுக்கு ஆபத்து வந்து விடும் என்று நினைத்து இந்த விடயத்தை அமைச்சு வரையும் கொண்டு சென்றார்கள். இந்த சூழ்ச்சிக்காக அவர்கள் செய்த வேலைக்கு ஈழத்தில் உள்ள தலித் மாணவர்களை சாட்சியாகுவது. தலித்துகளுக்கு செய்யும் மாபெரும் துரோகம்.

  5. சிங்களவர்கள் பண்பாட்டு அம்சங்களை தேவையான போது தங்களது பல்கலைகழகத்தில் பின்பற்றுகிறார்கள் . தென்கிழக்கு பல்கலைகழகம் முஸ்லிம்களுக்கு உரியதாகிவிட்டது. ஆனால் யாழ்ப்பான பல்கலைக்கழகம் மட்டும் தமிழர்கள் தங்கள் குறைந்த பட்ச பண்பாட்டு நடைமுறைகளை பின்பற்ற முடியாது என்று எல்லோரும் கூச்சல் போடுகிறார்கள். பண்பாடு ஆடைகளில் மட்டும் இல்லை என்பது உண்மைதான். சரி பண்பாடு ஆடையில் இல்லை, தாடியில் இல்லை, இசையில் இல்லை, நாடகத்தில் இல்லை, உணவில் இல்லை என்றால் எதி பண்பாடு பின்பற்ற வேண்டும் என்று யாரேனும் விளக்குவார்களா ? அல்லது தமிழர்கள் மட்டும் தங்கள் பண்பாட்டை பின்பற்ற கூடாது என்கிறார்களா.? பண்பாடு சாதி கறை படிந்தது என்றால் அதை போக்க பாடுபடவேண்டும் .அதை விடுத்தது தமிழர்கள் தங்கள் அடையாளத்தை இழப்பதா? சரி தமிழ் மொழி சாதி காப்பாறும் மொழி என்று பெரியார் சொன்னார். எனவே தமிழ் மொழி மூலம் கற்பது கூடாது கேவலமானது என்று நாளை சில சோபா சக்திகளும் மாக்க்சுகளும்,ரவிகுமார்களும் சொல்வார்களா ? தமிழ் மொழியை விட்டு விட்டு இங்குள்ள தமிழர்கள் சிங்களைதையும் அரபியையும் படிக்க வேண்டும் என்று சொல்வார்கள் போலும் .(ஆங்கிலமும் ஆதிக்க மொழி அல்லவா)நாளை யாழ் பல்கலை கழ நுண்கலை பீடம் மற்றும் பரமேஸ்வரன் கோவில் எல்லாவறையும் இழுத்து மூட வேண்டும் என்றும் சொல்வார்களா ? (நான் ஒன்றும் ஆத்திகன் அல்ல )

  6. எனக்கு ஒன்று விளங்கவில்லை. ஏன் தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்கள் மீது அவளவு கோவம். நிச்சயமாக இது சாதி கொடுமையால் விளைந்த ஒன்று அல்ல. அப்படி பார்த்தால் உலகின் எந்த பண்பாடும் தேறாது. வேண்டுமானால் சவூதி அராபியாவின் பண்பாடு மிக உயர்ந்தது என்று இவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.

  7. இந்த சுற்றறிக்கையை பல்கலைகழகம் வாபஸ் பெற்றது மிக பிழையான செயல். அனைத்து பேராசிரியர்களும் இணைந்து நின்று இருந்தால் என்ன செய்திருப்பார்கள். மாணவர்களின் போராட்டங்களுக்கு எவளவு காலம் அஞ்சுவது என்று கணக்கு இருக்கும். முழு போரையும் அரசு டிஸ்மிஸ் செய்யுமா? செய்யத்தான் முடியுமா ? எனக்கு இப்பொது வெளியிடங்களில் தமிழன் என்று அறிமுகம் செய்ய மிகவும் பயமாக இருக்கிறது….

  Like

 5. இந்த சாதி ஆதிக்கத் திமிர் லாவகமாக தமிழ் தேசியம் என்ற மேல்பூச்சு மூலம் மறைக்கப்பட்டாலும் அவ்வப்போது மேல்பூச்சை மீறி வெளியே வந்து பல்லைக் காட்டி விடுகிறது.

  Like

 6. புலம் பெயர் தேசங்களில் காதலித்து மணம் முடிக்கும் இளம் தலைமுறை ஒன்று வீரியமாக அதே நேரம் மௌனமாக சாதீயத்துக்கு எதிராக எழுந்து வருகின்றது .சாதி திமிர் கொண்ட எந்தப் பழசுகளாலும் இதனை நிறுத்த முடியாது. தாயகத்தில் இந்த மாற்றங்களை விரைவில் எதிர் பார்க்க முடியாத நிலையிலேயே அங்குள்ள சமூகக் கட்டமைப்புக்களும் திருமண பந்தங்களும் இருக்கின்றன. இதற்கான புரட்சிகரமான மாற்றங்களை தமிழ் சமூகம் வேண்டி நிற்கின்றது. உலக அரங்கில் நாகரீகமான சமூகமாக அப்போதுதான் தமிழ்ச்சமூகத்தால் தலை நிமிர்ந்து நிற்க முடியும்.அனைத்து வேறுபாடுகளையும் ,ஏற்றத் தாழ்வுகளையும் சாதீய திமிர்ப் பேச்சுக்களையும் அநாகரிகப் போக்குகளையும் நாம் வன்மையாக கண்டிப்போம்.

  Like

 7. தமிழீழ அழிவுக்கு காரணம் ஜாதி வெறியே:

  இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட ஒரு தமிழர் வேதனையுடன் சொன்னது: “எங்களிடம் ஜின்னாவைப் போல் ஒரு தலைவன் இருந்திருந்தால், இந்நேரம் எங்களுடைய ஈழ நாட்டில் பிள்ளை குட்டிகளுடன் நிம்மதியாக நாங்களும் வாழ்ந்திருப்போம். கூட இருந்தே குழிப்பறித்து விட்டனர் அயோக்கியர்கள்”.
  ——————

  இலங்கையில் சிங்கள வெறியனின் கற்பழிப்பு கொலை கொள்ளையில் வேட்டையாடப்படும் 40 லட்சம் ஈழத்தமிழர் அனைவருமே தமிழ்க்கிருத்துவர்தான் என்பது எத்துனை பேருக்குத் தெரியும்?. முன்னூறு வருடங்கள் ஈழத்தில் வாழ்ந்தும், அறுபது வருடங்கள் தனிமாகாணம் நடத்தியும், பதினைந்தே நாட்களுக்குள் ஈழத்தையும் அதன் தலைவர்களையும் ஒட்டுமொத்தமாக அழித்து ஈழத்தமிழனை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கி விட்டான் சிங்களன். இன்று கிழிந்த பாவாடையும் பட்டனில்லாத சட்டையும் அணிந்துகொண்டு, சிங்கள வெறியன் முன்னால் ஒரு கையால் மார்பை மறைத்துக்கொண்டு ஒரு வேளை கஞ்சிக்கு தட்டேந்தி நிற்கிறாள் உமது ஈழத்தாய். இதற்கு யார் காரணம்?

  1990ல் தமிழீழ விடுதலை வரப்போகிறதென தெரிந்ததும், ஜாதி வெறி தலைதூக்கியது. நீ தலைவனா நான் தலைவனா என தொப்புள்கொடி உறவுகள் ஒருவரையொருவர் போட்தள்ள ஆரம்பித்தனர். “ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு” என்பது போல் சிங்கள ராணுவம் சரியான தருணத்துக்கு காத்திருந்தது. நேரம் வந்தது. விடுதலைப்புலிகளை அட்ரஸ் இல்லாமல் செய்து விட்டான்.

  Like

 8. ஈழத்தின் ‘மேல்சாதி’ தமிழர்களிடம் சாதிவெறி இருக்கும் வரை ஈழம் உருப்படவே உருப்படாது !

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.