அரசு வழங்கும் மானியங்கள் வசதிப்படைத்தவர்களையே சென்றடைகிறது என பொருளாதார ஆய்வறிக்கையில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதில் அரசு வழங்கும் மானியங்கள் வசதிப்படைத்தவர்களையே சென்றடைகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுசேமிப்பு, மண்ணெண்ணெய், ரயில்வே, மின்சாரம், சமையல் எரிவாயு, தங்கம், வானூர்திகளுக்கான எரிபொருள் ஆகிய ஏழு நிலைகளில் மானியம் வழங்கப்படுகிறது.
இந்த மானியங்கள் பெரும்பாலும் வசதிப்படைத்தரையே சென்றடைகிறது.
மானியங்களைப் பொருத்த வரையில், மண்ணெண்ணெயை 49 சதவீதம் பேரும், மின்சாரத்தை 84 சதவீதம் பேரும், சமையல் எரிவாயுவை 91 சதவீதம் பேரும், ரயில்வேயில் 92 சதவீதம் பேரும், பெட்ரோலில் 95 சதவீதம் பேரும், டீசலில் 98 சதவீதம் பேரும், வானூர்தி எரிவாயுவில் 100 சதவீதம் பேரும், தங்கத்தில் 98 சதவீதம் பேரும் வசதிப்படைத்தவர்களே அனுபவிக்கின்றனர்.
இதன்படி 1,03,249 கோடி ரூபாய் மானியம் வசதிப்படைத்தவர்களையே சென்றடைகிறது என பொருளாதார ஆய்வறிக்கையில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.