பாஜக தலைமையில் மத்தியில் அமைத்திருக்கும் ஆட்சி இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியாவின் மதச்சார்பின்னைக்கு விடப்பட்ட மிகப்பெரும் சவாலாக உள்ளது. இதை நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி 2014-ஆம் ஆண்டு அமைந்த ஒவ்வொரு கணத்திலும் இந்தியர் உணரவே செய்கிறார்கள். ஆனால், வெகுஜென ஊடகங்கள், பாஜக அரசை- அவர்கள் முன்னெடுக்கும் மத அரசியலை கண்டும் காணாதது போல் செல்கின்றனர். ஆனால், இந்தியாவில் அதிக விற்பனையாகும் நாளிதழ்களில் ஒன்றான தி டெலிகிராப், துணிவோடு பாஜகவின் முகத்திரையை, அவர்களுடைய பொய்களை கட்டவிழ்க்கிறது. அதற்கு உதாரணங்களாக டெலிகிராப் நாளிதழின் சில முகப்புப் பக்கங்கள் உங்கள் பார்வைக்கு…