“இயற்கை உபாதை” என்று கூறுவது தவறா?: ஆபாச தாக்குதல் புகாரை கையிலெடுத்த ஸ்மிருதி இரானி !!!

ஜே.என்.யூ விவகாரம் குறித்து லோக்சபாவில்   ஆவேசமாக பேசி, பத்திரிக்கைகளில், இணையங்களில் பாராட்டு பெற்ற ஸ்மிருதி இரானி, ராஜ்யசபாவில்  அந்தளவு ஆவேசத்தை காண்பிக்க முடியாமல் நேற்று (25.02.16)அவஸ்தைக்கு ஆளாகினர். இரானியின் குற்றச்சாட்டுக்களுக்கு, உடனுக்குடன் கம்யூனிஸ்ட்,  காங்கிரஸ்  உறுப்பினர்கள்  பதில் அளித்ததால், அமைச்சர் தடுமாறினார்.

அத்துடன் மட்டுமல்லாமல், அவையில் நாகரீகங்கள் தெரியாமல், அநாகரீகமாக இரானி நடந்துகொல்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.

இந்நிலையில், “மகிசாசுரனை ஆதரித்து” ஜேஎன்யூ மாணவர்கள் நடத்திய போராட்டம் குறித்து லோக்சபாவில்  கூறிய அதே புகார்களை ராஜ்யசபாவில் முன் வைக்க  தொடங்கினார் ஸ்மிருதி இரானி. அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான, சீதாராம் யெச்சூரி தனது இருக்கையில் இருந்து எழுந்து, வெளியே கிளம்ப எத்தனித்தார்.

அதனை கவனித்த, (விவாதத்திற்கு விளக்கம் அளித்து கொண்டிருந்த) அமைச்சர்  ஸ்மிருதி இரானி, “சீதாராம்ஜி, எழுந்துவிட்டீர்களா ? அமருங்கள். மேற்கு வங்கம் பற்றித்தான் பேச போகிறேன்” என்று கிண்டலடித்தார்.

4.JPG

இதற்க்கு பதில் அளித்த சீதாராம் யெச்சூரி, “இயற்கை உபாதை என்பது தேச விரோதமாகாது” என்று பதில் அளித்தார். (Natures call is not anti indian madam)

இதற்கு, மறு பதில் அளித்த ஸ்மிருதி இரானி ” இயற்கை  அழைத்ததா ? அல்லது இல்லம் அழைத்ததா என்று  எனக்கு எப்படி தெரியும்?” என்று கூறினார்.  (How would i presume to know whether its Natures call or Madams call )

1

இதற்கு மீண்டும் பதில் அளித்த யெச்சூரி “இதை எப்படி விளக்க முடியும்” என்று கேள்வி எழுப்பினார்.

இதனால் ஆத்திரமடைந்த ஸ்மிருதி இரானி “ஒரு பெண்ணிடம் நடத்தப்படும் சிறந்த விவாதம். Bravo” என்றார்.

இதனால் எரிச்சலடைந்த எச்சூரி “யார் விவாதத்தில் ஈடுபட்டது’ என்றார்.  அதற்குள்ளாக அருகிலிருந்த எம்.பி.க்கள், இவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தியதை தொடர்ந்து , அவையில் விவாதம் தொடர்ந்தது.

2

இருப்பினும், எச்சூரியிடம் கேள்வி கேட்டுவிட்டு, அதற்கு பின், ஆபாச தாக்குதல் என்று ஸ்மிருதி இரானி கூறுவது சிறுபிள்ளைத்தனம் என்று இணையங்களில் கண்டனம் எழுந்துள்ளது.

இந்த விடியோவில் 35 -வது நிமிடத்தில் இருந்து குறிப்பிட்ட விவாதத்தை பார்க்கலாம்.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.