20 லட்சம் பேர் மூழுக்குப் போட்ட கும்பகோணம் மகாமகக் குளத்தில் மலக்கழிவு 28%; மூத்திரக்கழிவு 40%: ஆய்வில் தகவல்

புண்ணிய நதிகள் ஒன்று கூடிய காரணத்தால் மகாமகக் குளத்தில் முழுக்குப் போட்டால் 12 வருட பாவங்களும் பறந்தே போகும் என்ற நம்பிக்கையில் 20 லட்சம் பேர் முழுக்குப் போட்ட கும்பகோணம் மகாமகக் குளத்தின் நீரை எடுத்து மாவட்ட ஆட்சியரே பரிசோதனைக்கு அனுப்பினார். அதன் முடிவு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. அந்த நீரில் மலம், சிறுநீர் கலந்து பயங்கரமான மாசுக்கு ஆளாகியுள்ளது என்பது அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து விடுதலை நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில்,

கும்பகோணம் மகாமகம் முடிந்த பிறகு அந்தக் குளத்து நீரை ஆய்வு செய்ததில், மனித சிறுநீரில் கலந் துள்ள யூரியாவும், மலக்கழிவும் அதிக அளவுள்ளதாக ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

கடந்த சில நாள்களாக கும்பகோணத்தில் நடந்த மகாமகத் திருவிழாவில் லட்சக்கணக்கானோர் முழுக்கு போட்டனர். மகாமகம் முடிந்த பிறகு மகாமகக் குளத்து நீரை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதனை அடுத்து நீரியல் வளத்துறை, மகாமகம் நடந்த குளத்தில் இருந்து நீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியது. ஆய்வின் முடிவில் குளத்து நீர் மிக அதிக அளவு மாசடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

காவல்துறையினரின் உடல்நலம் பாதிப்பு!

குளத்தைப் பாதுகாக்கும் 25,000 காவல்துறையினரின் உடல் நலம் குறித்த ஆய்வறிக்கையில், பல காவல்துறையினருக்கு தொண்டை கரகரப்பு, மற்றும் தோல் அரிப்பு தொடர்பான வியாதிகள் தொற்றியுள்ளன என தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் குளத்து நீரில் பல மணிநேரம் நின்று மக்கள் கூட்டத்தைக் கட்டுப் படுத்தியுள்ளனர். இது குறித்து பாதுகாப்பிற்கு நின்ற காவலர் ஒருவர், குளத்து நீரில் பலமணிநேரம் நின்ற காரணத்தால் கால் அரிப்பு மற்றும் பாதங்களில் புண்கள் ஏற்பட்டுவிட்டன என்று கூறினார்.

விநாடிக்குக் குறைந்தபட்சம் 75 லிட்டர் தண்ணீர் வெளியேறும்படி ஏற்பாடுகள் செய்திருந்தாலும் குளத் தில் குளிப்பவர்களின் எண்ணிக்கை அதிமானதும், தண்ணீரின் ஓட்டம் தடைபட்டது, மேலும் குறைந்த அளவு ஆழம் கொண்ட இடத்தில் தண்ணீரின் ஓட்டம் அறவே நின்றுவிட்டதால் குளத்தின் தூய்மையைத் தொடர்ந்து நிலைநிறுத்த முடியவில்லை. மேலும் ஆடைகளில் உள்ள நிறமூட்டி வேதிப்பொருள்கள் தண்ணீரில் கலந்த காரணத்தால் நீர் அதிகமாக மாசு அடைந்துள்ளது, எனவும் தெரியவந்துள்ளது.

இ.கோலி

இ.கோலி  என்பது எசரிக்கியா கோலி என்பதன் சுருக்கமாகும் இவ்வகை பாக்டீரியாக்கள் மனிதக் குடலில் வாழ்கின்றன. இவை எண்ணிக்கையில் அதிக மாகும்பொழுது குடல்புண் மற்றும் அலர்ஜி போன்றவை ஏற்படுகிறது. முக்கியமாக ஓ157:எச்7 போன்ற பாக்டீரியாக்கள் மனிதன் உண்ணும் உணவை நச்சாக்கி மஞ்சள் காமாலை நோயைத் தோற்றுவிக்கின்றன. இத னுடைய வாழ்க்கைச் சுழற்சி மலத்தின் மூலம் வெளியேறி நீர்நிலைகளில் கலந்து பிறகு தாவரம் மற்றும் மீன் உணவு வழியாக மீண்டும் மனித குடலைச் சென்றடையும். சமைத்த உணவு உண்ணும் பழக்கம் உள்ள மனித இனங்களில் மிக அதிக அளவு இவ்வகை பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன. குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி பேதி, மற்றும் வயிற்றுக் கடுப்பு போன்ற நோய்கள் இவ்வகைப் பாக்டீரியாக்கள் குடலில் அதிகரிப்பதால் ஏற்படுகின்றன.
மனித மலக்கழிவு – மூத்திரக் கலப்பு

நீரில் இ-கோலி என்னும் பாக்டீரியாக்கள் அதிக அளவு உள்ளன. (இவ்வகை பாக்டீரியாக்கள் மனிதக் குடலில் உள்ள சளி போன்ற திரவத்தில் ஒட்டிக்கொண்டு இருக்கும்.மலம் கழிக்கும் போது இந்த பாக்டீரியாக்கள் வெளியேறி நீரில் கலந்துவிடுகின்றன). இவ்வகைப் பாக்டீரியாக்கள் 28 விழுக்காடு குளத்து நீரில் கலந்துள்ளது. மேலும் மனித சிறுநீரில் உள்ள யூரியாவின் அளவும் குளத்து நீரில் 40 விழுக்காடு அதிகமாக உள்ளது என்று தெரியவந்துள்ளது.
மாவட்ட நீரியல் துறை நிர்வாக அலுவலர் ஒருவர் கூறும்போது,

“நாங்கள் குளத்து நீரை ஓட்டத்திலேயே இருக்கும்படி பார்த்துக்கொண்டோம். ஆனால், வெளியேறும் நீரின் அளவு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே அதிகமாக இருந்தது. முக்கியமாக குளத்தின் கரைப்பகுதி மற்றும் 2 அடி ஆழமுள்ள பகுதி நீர் அப்படி தங்கிவிட்டது. இதனால் மாசுக்கள் அதிகமாகிவிட்டன. மேலும் மக்கள் தொடர்ந்து வந்து முழுக்குப் போடுவதால் மாசு மிகவும் அதிகமாகிவிட்டது” என்று கூறினார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.