விஜயசங்கர் ராமச்சந்திரன்

நான் வாரணாசியிலிருக்கும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பிற்காகச் சென்றேன். அங்குதான் உயர்சாதியினரின் முழு ஆக்ரோஷத்தை உணர்ந்தேன். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமிடையே நிலப்பிரபுத்துவ உறவுதான் இருந்தத். சங் ஆதரவாளர் ஒருவர் என்னுடைய சாதி என்ன என்று பகிரங்கமாகக் கேட்டார்…
“முற்போக்கு இந்தி இலக்கியங்களைப் படித்தது என் சிந்தனையை விரிவாக்கியது. நான் அதிகம் படிக்கத் தொடங்கினேன். ஹரி சங்கர் பார்சாய் என்கிற எழுத்தாளரின் அங்கத நடை என் மீது தாக்கம் செலுத்தியது. இந்துத்வத்தின் போலி உலகம் சிறிய அறையில் மூச்சு முட்டுவதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது. ஆர் எஸ் எஸ் அமைப்பின் பிரச்சாரங்கள் எனக்கு கோபமேற்படுத்தின. பல்கலைக்கழகத்திலிருந்த சில பேராசிரியர்கள் மனுஸ்மிருதியிலுள்ள கருத்துக்களை பகிரங்கமாகவே ஆதரித்துப் பேசினர். இந்து ராஷ்டிரம் என்ற கருத்தாக்கமே மனிதத்தன்மையற்றதாகவும், வெறுப்புநிறைந்ததாகவும் தோன்றியது. சங் அமைப்பின் வரலாற்றை படிக்கப்படிக்க அதிலிருந்து விலகினேன்”
இப்படிக்கூறும் அசுதோஷிற்கு ஜேன்யூவில் என்ன அனுபவம்?
“ஜேன்யூவில் எந்த அரசியல் தலைவரும் தன் கருத்துக்களை நம் மீது வலிந்து திணிக்கவில்லை. அவர்கள் கருத்துக்களை வாதிட்டனர். விவாதம் செய்தனர். கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்டனர். நான் கண்ணியமாக நடத்தப்படுவதாக உணர்ந்தேன். ஜேஎன்யூவில் மாணவர் தலைவர்கள் மாணவர்களுடன் நல்ல தொடர்பிலிருந்தனர். கொள்கை சார்ந்த விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். மதவேறுபாடுகளின் அடிப்படையில் இருந்த உலகம் போலியானது என்று உணர்ந்து கொண்டேன். இங்கு ஆசிரியரகள் மாணவர்கள் சொல்வதை பொறுமையாகக் கேட்கின்றனர். கேலி செய்வதில்லை. இடதுசாரி அமைப்புகள் பகுத்தறிவுப் பூர்வமாகச் செய்யும் பிரச்சாரம் என்னை அவர்களின்பால் மேலும் ஈர்த்தது.”
சென்ற ஆண்டு AISA என்கிற இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த அசுதோஷ் ஜேன்யூ மாணவர் சங்கத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
(ஃபிரண்ட்லைனின் அடுத்த இதழிலிருந்து ஒரு துளி இங்கே. ஏறக்குறைய ஒரு ஜேஎன்யூ சிறப்பிதழாகவே தயாராகிக் கொண்டிருக்கிறது. சுமார் 50 பக்கங்களில்).
விஜயசங்கர் ராமச்சந்திரன் ஃப்ரண்ட்லைன் இதழின் ஆசிரியர்.