நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி வருகிறது. புதன்கிழமை ரோஹித் வெமுலாவின் தற்கொலையை ஒட்டி நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதிக்கும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கும் கடுமையான வாக்குவாதம் எழுந்தது.
மாயாவதி பேசும்போது, “தலித் மாணவர் ஒருவர் பல்கலை தற்கொலை செய்து கொள்வது இது முதல்முறை அல்ல; குறிப்பாக அம்பேத்கரின் கொள்கைகளை முன்னெடுக்கும் ரோஹித் வெமூலா போன்ற மாணவர்களை ஆர். எஸ். எஸ். போன்ற அமைப்புகள் விரும்புவதில்லை. அவர்களை அழிக்க நினைக்கின்றன.
தலித் மாணவர்கள் தொடர்ந்து குறிவைக்கப்படுகிறார்கள். ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் நீக்கப்பட வேண்டும், வெமுலா தற்கொலையில் தொடர்புள்ள மத்திய அமைச்சர்கள் பதவி விலக வேண்டும். விசாரணைக் குழுவில் தலித் உறுப்பினர் இருக்க வேண்டும் என நான் கோரிக்கை வைத்திருக்கிறேன். இவற்றின் மீதான நடவடிக்கை என்னவென்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்” என்று பேசினார்.
அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஸ்மிருதி இரானி,
“ரோஹித் வெமுலா சர்ச்சை குறித்து அரசு உடனடியாக பேசத் தயாராக இருக்கிறது. அரசியல் ஆதாயத்திற்காக பலர் இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கின்றனர். குழந்தையை அரசியல் கருவியாக பயன்படுத்தியது யார்? குழந்தையை பெற்றெடுக்கும் தாயே அவனைக் கொல்ல மாட்டாள்.
கல்விக்கூடங்கள் காவிமயமாவதை நிரூபித்தால் நான் பதவி விலகத் தயார்” என்று காரசாரமாக பேசினார்.
இதை வைத்து, கொல்கத்தாவில் இருந்து வெளியாகும் டெலிகிராப், ஸ்மிருதி இராணியின் படத்தை முகப்பில் போட்டு “ஆண்டி நேஷனல்” என பகடி செய்துள்ளது.
ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகியுள்ள #AuntyNational
https://twitter.com/hussain_aadil/status/702702104763191297
https://twitter.com/iChirpyhead/status/702701927084204032
https://twitter.com/S_S_04/status/702701428440076290
https://twitter.com/whatnationwants/status/702699558204116992