ஜான்சன்&ஜான்சன் டால்கம் பவுடரில் கேன்சர் காரணிகள்:மனித உயிரை மதிக்காத கார்ப்பரேட் பேராசையை வெளிக்கொண்டு வந்த வழக்கு !!!

அமெரிக்காவின் அலபாமாவில் வசித்து வந்த plaintiff Jacqueline Fox என்ற பெண்மணி, கடந்த சில வருடங்களுக்கு முன் மிசோரி நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். 

அதில், கடந்த 35 வருடங்களாக ஜான்சன்&ஜான்சன் பேபி பவுடர் மற்றும்  Shower to Shower  பவுடரை அந்தரங்க சுகாதாரதிற்காக உபயோகபடுத்தி வந்ததாகவும், அதன் காரணமாக தனக்கு கருப்பை கேன்சர் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.

கருப்பை கேன்சர் இருப்பதாக 2013-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காலத்திற்கு முன்பாகவே, கடந்த ஆண்டு  Jacqueline   காலமானார். இதையடுத்து, அவருடைய மகன் ஜேக்கி பாக்ஸ் வழக்கை தொடர்ந்து நடத்தினர்.

இந்த வழக்கில் திங்கள் (22.02.14)  மாலை வழங்கப்பட்ட தீர்ப்பில், “ஜான்சன்&ஜான்சன்  நிறுவனம் தவறு செய்திருப்பது மட்டுமல்லாமல், அவற்றை பொதுமக்களுக்கு தெரிவிக்காமல் அலட்சியமாக இருந்தது, தவறை மறைத்து  சதித்திட்டம்  தீட்டியது மற்றும் மோசடி செய்துள்ளது” என்று கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து Jacqueline வழக்கறிஞர் Ted G. Meadows கூறுகையில் “*ஜான்சன்ஸ்&ஜான்சன்ஸ் நிறுவன பவுடர்களில் கலந்திருக்கும் டால்க்(Talc) கேன்சரை உருவாக்கும்  என்பது அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பே தெரியும்.

*பத்தாண்டுகளுக்கு முன் தெரியும் என்பது நிச்சயம்.

*ஆனால்,  விற்பனையை மட்டுமே கருத்தில் கொண்டு, அதை பற்றிய உண்மையை மக்களிடமிருந்து அவர்கள் மறைத்து விட்டனர்.

*அதை பற்றிய ஒரு எச்சரிக்கையை கூட, ஜான்சன்ஸ்&ஜான்சன்ஸ் நிறுவன தயாரிப்புகளில் வெளியிட அவர்கள் தயாராக இல்லை. தெரிந்தே இந்த விவகாரத்தை, அந்நிறுவனத்தினர் மறைத்திருக்கிறார்கள்.

*டால்க் பற்றிய அந்நிறுவன டாக்குமன்ட்களை படித்தால், பீதியூட்டும், ஆத்திரமூட்டும் வகையிலான விஷயங்களும், கார்பரேட் பேராசைகளும், மனித உயிரின் மீதான அவர்களின் அலட்சியமும் தெரிய வருகிறது” என்றும், தெரிவித்துள்ளார்.

மேலும், இதை முன்வைத்தே தான் வாதிட்டதாகவும், Jacqueline போன்ற அற்புதமான பெண்மணி நீண்டநாள் வாழ்ந்திருக்க வேண்டியவர் என்றும், இருப்பினும் அவருடைய வழக்கில் நீதி பெற்றுத்தந்ததை மிகப்பெரும் கவுரமாகவும், மகிழ்ச்சியாகவும் கருதுவதாக  வழக்கறிஞர் Ted G. Meadows குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின்போது  Jacqueline வழக்கறிஞர் Ted G. Meadows தரப்பில்   1977 -ம் ஆண்டு ஜான்சன் & ஜான்சன் நிறுவனதிற்குள் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் அளிக்கப்பட்ட குறிப்பை, முக்கிய ஆதாரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

அதில்  “அந்தரங்க சுகாதரதிற்க்காக பயன்படுத்தப்படும் டால்க் மூலம் கருப்பை கேன்சர் வராது என்று யாராவது நம்புவார்களேயானால், அது சிகரட் குடித்தால் கேன்சர் வராது என்று நம்புவதற்கு சமமானது” என்று கூறப்பட்டிருந்தது  குறிப்பிடத்தக்கது.

கார்பரேட் நிறுவனங்களுக்கான ஊடகமான ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தகவலின்படி “வழக்கை விசாரித்த நீதிபதிகளான foreman, Krista Smith ஆகியோர், வழக்கறிஞர் Ted G. Meadowsன் வாதத்தை ஏற்று கொண்டதாகவும், ஜான்சன்&ஜான்சன் நிறுவனத்தின் டாக்குமென்ட்களே அந்நிறுவனத்தின் தவறுகளுக்கு உறுதியான சான்றாக இருந்ததாக நீதிபதிகள் நம்பியதாகவும்” குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்தே, ஜான்சன்&ஜான்சன் டால்க் பயன்படுத்தியதால் கருப்பை கேன்சர் வந்து பலியான ஜாக்குலின் குடும்பத்திற்கு ஐநூறு கோடி ரூபாய் நிவாரணம் அளிக்க Missouri நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் மீது , அதன் டால்க்களில் கேன்சரை உருவாக்கும் கெமிக்கல் பொருட்கள் இருப்பதாக,  சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான வழக்குகள் அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அது மட்டுமல்லாமல், “Johnson’s No More Tears baby shampoo“வில் கூட மிகுந்த நச்சு பொருட்கள் கலந்திருப்பதாக அமெரிக்க நுவர்வோர் அமைப்புகள் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன.

அமெரிக்காவில் 2009-ம் ஆண்டு, பல்வேறு அமைப்புகள் சேர்ந்து “பாதுகாப்பான அழகுசாதன பொருட்களுக்கான” விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்றை தொடங்கினார்கள். அந்த பிரச்சாரத்தின் மூலம், ஜான்சன் & ஜான்சன் நிறுவன தயாரிப்புகள் பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன் மட்டுமல்லாமல், அந்த பொருட்களை புறக்கணிக்குமாறும் மக்களிடம் வலியுறுத்தினார்கள். இதனால் கடும் நெருக்கடிக்கு ஆளான ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் ,  தங்களுடைய நிறுவனத்தின் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் , dioxane மற்றும் formaldehyde-டை, இனிமேல் பயன்படுத்த போவதில்லை என்று 2012-ம் ஆண்டு தெரிவித்தது. 

dioxane மற்றும் formaldehyde இரண்டுமே மனித உடலில் கேன்சரை உருவாக்குபவை என்பது குறிப்பிடத்தக்கது.

*********

இந்தியாவில், மும்பையில் உள்ள ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட,  குழந்தைகள் பவுடரில்  நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்கள் இருப்பதாக புகார் எழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 2007ம் ஆண்டு, அந்நிறுவனத்தின் மீது  வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில் குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் பவுடரை நச்சுத்தன்மை வாய்ந்த எதிலீன் ஆக்சடை கொண்டு ஸ்டெரிலைஸ் செய்யப்படுவதால் பவுடரில் நச்சுத்தன்மை கொண்ட பொருட்கள் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மும்பை முலுந்தில் உள்ள ஜான்சன் அன்ட் ஜான்சன் ஆலையில்,  அழகுசாதன பொருட்கள் தயாரிக்கும் உரிமத்தை, 2013-ம் ஆண்டு உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

 **********
Inputs from Reuters.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.