திமுகவின் ’என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ விளம்பரம்: பிரபலங்களின் கருத்து

இன்றைய காலை பத்திரிக்கைகள் அனைத்திலும் முதல் பக்கத்தில், திமுக  முழு பக்க விளம்பரம் அளித்துள்ளது. அதைப் பற்றி பத்திரிகையாளர்கள், விமர்சகர்களின் கருத்து.
Kathir Vel

FOR TAMIL NADU ONLY
———————————-
பத்திரிகையாளர்கள், பத்திரிகை ஊழியர்கள் அனைவருக்கும் மஜிதியா குழு நிர்ணயித்த ஊதியம் ஜூன் முதல் வழங்கப்படும். 2011 நவம்பர் முதல் ஊதிய உயர்வு கணக்கிடப்பட்டு, மொத்த அரியர்சும் ஜூன் மாதத்தில் ஒரே தவணையில் வழங்கப்படும்.

திமுக, அதிமுக மனசு வச்சு, தேர்தல் கமிஷனும் கண்களை மூடி ஒத்துழைத்தால் மேற்கண்ட அறிவிப்பு அனைத்து பத்திரிகை அலுவலகங்களின் நோட்டீஸ் போர்டிலும் மே மூன்றாவது வாரம் ஒட்டப்படலாம்.

Kathir Vel's photo.
Narain Rajagopalan

திமுகவிற்கான எதிரிகள் வெளியே இல்லை. உள்ளேயே இருக்கிறார்கள். காலையில் “ஸ்டிக்கர் கவர்ன்மெண்ட், என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா” என்றொரு கேவலமான முழுப்பக்க விளம்பரத்தினைப் பார்த்தேன்.

You guys are making Vijaykanth an intellectual; PWF an ideological powerhouse. Pathetic positioning.

இந்த ஜெனரஷேன இளைஞர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். அவர்கள் எதை காமெடி என ஒதுக்குவார்கள், எதை சீரியஸாக பார்ப்பார்கள் என்பது தெரியும். நாம் ஒன்றும் சிரிச்சாப் போச்சு, கலக்கப்போவது யாரு போன்றவற்றுக்கு போட்டியாளர்கள் கிடையாது. இது அரசியல், இங்கே மக்களை மெத்தனமாக எடைப் போட்டால் தூக்கி எறிவார்கள்.

அ. ராமசாமி

நிர்வாகத்தைக் கேள்விகள் கேட்கலாம். நபர்களைக் கிண்டல் செய்வது – குறிப்பாகப் பெண்ணின் இயலாமையைக் கேள்விக்குள்ளாக்கும் பெருவிளம்பரங்கள் எதிர்விளைவுகளையே உண்டாக்கும்.

Yuva Krishna
திடீர் நடுநிலையாளர்களும், முகத்தில் மரு ஒட்டிய அதிமுக அடிமைகளும், சில அப்பாவிகளும் இன்றைய திமுகவின் தேர்தல் விளம்பரம், அக்கட்சிக்கே பாதகமாகலாம் என்று அக்கறையாக விசனப்படுகிறார்கள்.

தினபூமி நாளிதழ், ‘காலச்சுவடு’ என்கிற பெயரிலும், குமுதம் ரிப்போர்ட்டர் வாரமிருமுறை இதழ், ‘செய்திகள்’ என்கிற போர்வையிலும், இன்னும் ஏராளமான நூதன வழிகளில் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கும் அதிமுக விளம்பர போஸ்டர்களை இவர்கள் கண்டதில்லை (ஏனெனில் அவற்றை யாரும் ஸ்கேன் செய்து இணையத்தில் ஏற்றியதில்லை)

விளம்பரத் துறை இயங்குவது ஒரு அடிப்படை கோட்பாட்டின் பேரில். ‘There is no such thing as bad publicity’ என்று குறிப்பிடுவார்கள். ஒன்லைனராக ஒரு குறிப்பிட்ட விஷயத்தை மக்களின் மனவோட்டத்துக்குள் அவர்கள் விரும்பியோ, விரும்பாமலோ ஏற்ற முடிவது என்பது குறிப்பிட்ட விளம்பரம் அடையக்கூடிய அசலான இலக்கு. அவ்வகையில் அதிமுக ஆட்சி என்பது ஸ்டிக்கர் ஆட்சி என்கிற கருத்துருவாக்கத்தை அதிமுகவினர் மத்தியிலேயே உருவாக்கி இருப்பதில் திமுகவினரின் இன்றைய நாளிதழ் விளம்பரங்கள் மகத்தான வெற்றியை எட்டியிருக்கின்றன.

இதற்குப் பதிலாக திமுகவின் சாதனைகள் சொல்லப்பட வேண்டும் என்கிற கருத்து புறந்தள்ளக்கூடியது அல்ல. இது launching campaign. பொதுவாக ஒரு விளம்பரத் தொடரின் முதல் முயற்சியே முத்தாய்ப்பாக எடுபட்டால்தான், அதன் தொடர்முயற்சிகள் வெகுவாக கவனிக்கப்படும். உதாரணத்துக்கு ‘புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?’. எதைப்பற்றிய விளம்பரம் என்று எந்தவித க்ளூவும் கொடுக்காத அந்த ஒரு வாசகத்துக்கு மட்டுமே பல லட்ச ரூபாய் செலவா என்று கேட்பவர்கள் செவ்வாய் கிரகத்தில் செருப்பு விற்பவர்களாகதான் இருக்க முடியும்.

பாசிட்டிவ்வாக செய்யப்படும் விளம்பரங்களின் வெற்றி சதவிகிதம் மிகவும் குறைவுதான். 1996-2001 ஆட்சிக்காலத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்தபோது, ‘தொடரட்டும் இந்த பொற்காலம்!’ என்கிற ஒன்லைனரை முன்வைத்து திமுக தோற்றதை இங்கே நினைவுகூறலாம் (அப்போது அந்த குழுவில் நானும் இருந்தேன் – MCS communications என்கிற விளம்பர நிறுவனம்)

இப்போது நடந்துக் கொண்டிருப்பது அதிமுக ஆட்சி. அதிமுக defending நிலையிலும், திமுக attacking நிலையிலும் இருக்கிறது. இந்த advantageஐ மிக சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது இன்று வெளியிடப்பட்டிருக்கும் விளம்பரம்.

விளம்பரத்தை உருவாக்கிய குழுவினருக்கு ஹேட்ஸ் ஆஃப்!

இன்று திமுக சார்பில் நாளிதழ்களில் வந்திருக்கும் முழுப்பக்க விளம்பரம் தமிழக முதல்வர் மீது வைக்கும் விமர்சனம், அவர் மக்களை நேரில் சந்திப்பதில்லை என்பதே. அந்த விமர்சனம் பொய் அல்லது மிகை என்றால் தரவுகளை முன்வைத்து மறுக்கலாம். ஆனால் அதிமுக அடிமைகளுக்கு அதெல்லாம் எப்படித் தெரியும். உடனடியாக கருணாநிதியை சட்டசபையில் பாத்திருக்கியா என்று கேட்கிறார்கள்? அதை சாதாரணமாக கேட்டால் பரவாயில்லை. வழக்கம் போல் நடிகைகள் கல்யாணத்துல பாத்திருப்ப, சட்டசபையில் பாத்திருக்கியா என்று கேட்டு தங்கள் ஆபாச மனநிலையை வெளிப்படுத்துகிறார்கள். வீட்டுக்கு வந்து அழைக்கப்படும் திருமணங்களுக்கு செல்லாமல் இருப்பதுதான் அசிங்கம். செல்வதில் எந்தத் தவறும் இல்லை.

தவிர நடிகையின் திருமணத்துக்கு செல்வது பற்றிய விமர்சனத்தில் நடிகைகள் மற்றும் சினிமா குறித்த ஏளன மனநிலையும் நடிகைகள் என்றாலே ஒழுக்கமற்ற இழிபிறவிகள் என்ற அவதூறும் இருப்பதை கவனிக்க வேண்டும். தவிர கருணாநிதி சட்டசபைக்கு வரவில்லை என்றோ அவரது தொகுதிக்குச் சென்று பார்க்கவில்லை என்றோ கேள்வி கேட்கும்/விமர்சிக்கும் தார்மீக (இந்த வார்த்தை எல்லாம் அதிமுகவுக்கு மிக அதிகம்தான்… என்ன செய்வது) உரிமை மக்களுக்கு இருக்கிறதே தவிர ஆளும் அதிமுகவுக்கு இல்லை.

அவையில் தனது சக்கர நாற்காலியை வைக்க சிறப்பு வசதி செய்துதரப்பட வேண்டும் என்ற கருணாநிதியின் கோரிக்கையை நிராகரித்தது இன்றைய அரசு. அதோடு கருணாநிதி சக்கர நாற்காலியில் வருவதைச் சுட்டி அவரைத் ’தள்ளுவண்டி’ என்று சட்டசபை விவாதத்திலேயே கிண்டலடிக்கும், நாகரீக சிகரங்களை (!!!!) அமைச்சர்களாகக் கொண்ட கட்சி அதிமுக. இதையெல்லாம் அதிமுக அடிமைகளிடம் பேசி ஒரு பயனும் இல்லை என்று தெரியும். திமுக விளம்பரத்தையும் அதிமுகவின் எதிரிவினையாக சமூக வலைதளங்களில் உலாவும் கேள்விகளையும் ஒன்றாக இணைத்து இருவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதுபோல் சித்தரிக்கும் மீம்களை உருவாக்கும்/பகிரும்/லைக்கிடும் நடுநிலையாளர்கள் இவற்றைச் சிந்திக்க வேண்டுகிறேன்.

பி.கு:. திமுக ஆபாசத்தை. வசைகளைக் கையாளவதே இல்லை என்று நான் சொல்லவில்லை. இன்றைய விஷயத்தில் திமுகவையும அதிமுகவையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கக்கூடாது என்பதுதான் என் வாதம்.

Bharathi Anand

அடுக்குமொழி மேடைப் பேச்சுக்கள், ஆழமான அறிக்கைகள், இயல்பான பிரச்சாரங்கள் என இத்தனை ஆண்டு காலமாக தனக்கென ஓர் அடையாளத்தை வைத்திருந்த திமுகவின் இன்றைய விளம்பரத்தைப் பார்க்கும் போது அக்கட்சி தன்னைத் தானே தரம் தாழ்த்திக் கொண்டதோ எனத் தோன்றுகிறது. திமுகவினருக்கே வார்த்தை பஞ்சமா? சினிமா பஞ்ச் டயலாக்கை தழுவி பிரச்சாரம் தேவையா?!
“வரணும் பழைய கலைஞர் கருணாநிதி வரணும்…”

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.