“ஈழப் பிரச்சனைக்காகப் போராடிய தமிழ்நாட்டு மாணவர்கள் எங்கே போனார்கள்? இந்துத்துவ அடக்குமுறைக்கு எதிராக போராட வேண்டாமா?”

ஹைதராபாத் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ரோஹித் வெமூலா தற்கொலை விஷயத்திலும் ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னய்யா குமார் கைது, மேலும் ஐந்து மாணவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்ட விஷயத்திலும் தமிழக பெரும்பான்மை மாணவ சமூகம் போராடவில்லை. இடதுசாரி மாணவ அமைப்புகள், இஸ்லாமிய மாணவ அமைப்புகள் மட்டுமே போராடிக் கொண்டிருக்கின்றன.

ஈழப் பிரச்சினைக்காக லயோலா கல்லூரி, சென்னை பல்கலைக் கழக மாணவர்கள் போராடினர். ஆனால் மாணவர் சமூகத்தின் கருத்து சுதந்திரத்துக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் இந்துத்துவ அடக்குமுறைக்கு எதிராக ஏன் இவர்கள் போராடவில்லை?  இவை போராட்டத்துக்கு உரிய விஷயங்களாகப் படவில்லையா என்ற கேள்வியை முன்வைக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்களுள் ஒருவரான  ரவிக்குமார்,

“ஈழப் பிரச்சனைக்காகப் போராடிய தமிழ்நாட்டு மாணவர்கள் எங்கே போனார்கள்?” ஹைதராபாத், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகங்களின் மாணவர்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள தாக்குதலுக்கு எதிராக அவர்கள் போராடவேண்டாமா?”

ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராக வெகுண்டு எழுந்த மாணவர்கள், ஹைதரபாத்-ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர்களுக்காக ஒரு குரலைக்கூட உயர்த்த முன்வரவில்லை. செலக்டிவ் அம்னீஷியாவுக்கு யார் காரணம்? போராட்டங்களை பின்னால் இருந்து இயக்கிய பேராசிரியர்களா? நிறுவனங்களா? இந்துத்துவா எதிர்ப்பு என்றால் ஏன் இவர்கள் வாயை இறுக மூடிக்கொள்கிறார்கள்?

சென்னை ஐஐடியில் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் தடை செய்யப்பட்டபோதும் இந்த ‘மாணவர்கள்’ போராட வரவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது!

 

2 thoughts on ““ஈழப் பிரச்சனைக்காகப் போராடிய தமிழ்நாட்டு மாணவர்கள் எங்கே போனார்கள்? இந்துத்துவ அடக்குமுறைக்கு எதிராக போராட வேண்டாமா?”

  1. Hindutuva means all hindus included? don’t mention hindutuva . This students has too much subject for debating. Absal grue he was a terrorist. why student are choosing such kind of topic. We are living India. We have lots and lots of topic for debating. This country under students with student nothing so students must take care our country and tell to others.

    Like

  2. அது எப்படி வருவாங்க.. தமிழ் நாட்டில இருக்கிற ஆதி தமிழனுக்கு ஜாதி ஹிந்துவால பிரச்சனை நா கூட அவங்களுக்கு கண்ணு தெரியாது. இதுல எப்படி வருவாங்க.. ஏற்கனவே ஒருத்தர் பிராமணரும் தமிழர் தான்னு சொல்ல அரம்பிசிடாப்ள

    ஜாதிய அடக்குமுறையின் மூலமே ஹிந்துத்வா… ஜாதியை தூக்கி பிடிக்கும் தமிழ் தேசியவாதிக்கு ஹிந்துத்துவ சக்திகள் எங்கே என்ன பண்ணினா அவனுக்கு என்னனு இருப்பாங்க..

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.