வர மறுத்த மாணவியை கயிறு கட்டி இழுத்துச்சென்ற போலீஸ்: சென்னையில் நடந்த போராட்டத்தில் அதிர்ச்சி…

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தலைவர் கண்ணையா குமார் கைது செய்யப்பட்டதை எதிர்த்து புரட்சிகர இளைஞர் கழகம் (RYA), அகில இந்திய மாணவர் கழக(AISA)த்தினர் , நுங்கம்பாக்கத்தில் உள்ள (மத்திய அரசு அலுவலகங்கள் நிறைந்திருக்கும்) சாஸ்திரி பாவனை முற்றுகையிட்டனர். 

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியை, போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து போகும் காட்சிகளும், அதற்க்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

1.jpg

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியை கைது செய்ய பெண் போலீசார் இல்லாததால், உதவி கமிஷனர் மற்றும் எஸ்.ஐ ஆகியோர் கயிறு கட்டி இழுத்து செல்கின்றனர்.

**

2.jpg

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை, கயிறு கட்டி இழுத்து செல்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், மகளிர் போலீசை அழைத்து, அந்த பெண்ணை தூக்கிச்செல்ல உத்தரவிடுகின்றனர். ஆனால், அவருக்கு தூக்கி செல்லத்தெரியவில்லை.

**

3.jpg

தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்ட அந்த இளம் பெண்ணை, எப்படி தூக்க வேண்டுமென்று, மகளிர் போலீஸ்க்கு , உதவி கமிஷனர் செய்து காட்டுகிறார்.

**

4.jpg

உதவி கமிஷனர் செய்து காட்டிய பிறகும், அந்த பெண்ணை தூக்குவதற்கு மகளிர் போலீஸ் திணறியதால், “இது கூட செய்யத் தெரியலையாமா?” என்று மகளிர் போலீசை திட்டுகிறார் உதவி கமிஷனர்.

**

5

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, மகளிர் எஸ்.ஐ வரவழைக்கப்பட்டு, அந்த மாணவியை குண்டுகட்டாக தூக்கி செல்கின்றனர்.

**

புகைப்படங்கள் நன்றி: தினகரன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.