அமைச்சர் ரமணா நீக்கம்: சமூக வலைத்தளங்கள் விவாதிக்கும் குற்றமும் தண்டனையும்

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ரமணா, அமைச்சர் பதவியிலிருந்து அதிமுக கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் ரமணா, தன் மனைவியிடன் இருக்கும் படங்கள் வெளியாகி அதிகமாகப் பகிரப்பட்டன. அதன் அடிப்படையில் கட்சி மேலிடம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. இந்நிலையில் ரமணாவின் நீக்கம் குறித்து சமூக வலைத்தளங்களில் மக்கள் பகிர்ந்திருக்கும் கருத்து…
Saraa Subramaniam

ஓர் அமைச்சர் தன் மனைவியுடன் தனிமையில் இருக்கும்போது எடுக்கப்பட்ட இரு புகைப்படங்களை கசியவிட்டு வைரல் ஆக்கியதன் பின்னணி தொடர்பாக சைபர்-கிரைம் மூலம் விசாரிப்பதுதான் முறை. அதுவும், அந்தப் படங்கள் ஆபாசம் என்ற வரையறைக்குள் வருவதாக எனக்குப் படவில்லை. அந்தப் படங்களால் எழுந்த சர்ச்சை காரணமாக அமைச்சர் பதவியும் கட்சிப் பதவியும் பறிக்கப்பட்டது என்றால், வாட்ஸ்ஆப் காலத்தில் இதைப்போல ஒரு மொக்கையான ஆட்சி – கட்சி நிர்வாகம் வேறேதும் இல்லை!

சந்தோஷமாப்பா.. திருப்தியாப்பா.. ஒருத்தன் குடும்பப் படத்தை இப்படி பகிரங்கப்படுத்தி கடைசீல வேலைக்கே உலை வைச்சுட்டீங்களேப்பா.. இனி வர்ற தேர்தல்ல சீட்டுகூட கிடைக்காது. பாவம்..

இப்படி எல்லாம் நடக்கும்னு தெரிஞ்சி தான் யா எங்க மோடி பொண்டாட்டி கூட போட்டோவே எடுக்கல…

ஆகவே மாண்புமிகு இதயதெய்வம் தங்கத் தாரகை அம்மா அவர்கள் மனம் கனிந்து பா.ஜ.க வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை கூறிக்கொண்டு..

A minister has put up a romantic pic with his wife on social media and why the hell it should become a reason for sacking him out?What kind of hypocrisy is this?

***ரமணாவின் நீக்கம் என்பதை நேற்றே எதிர்பார்த்தேன். ஓர் அமைச்சர் என்கிற தகுதியை அவர் காப்பாற்ற தகுதி அற்றவர்.

ஓர் அமைச்சர் என்பவர் இப்படி ஓர் அருவருப்பான புகைப்படத்தை எடுத்து ரசிக்கும் அளவுக்கு கீழான செயலை செய்துவிட்டார். என்பதே வருத்தத்திற்கு உரியது..

மேலும் இதே குற்றச்சாட்டுக்கு உட்பட்டே சென்ற முறை தனது பதவியை இழந்தவர்..அதற்கு பின்னரும் அவர் மாறிடவே இல்லை எனலாம்.

தனி நபர் என்கிற ஆசாபாசங்கள் வேறு..ஓர் மாநிலத்தின் அமைச்சர் என்கிறபோது அதன் தகுதி வேறு..

தவறு செய்தார்..தண்டனையை ஏற்கத்தான் வேண்டும்..எவ்வளவுதான் முட்டுக்கொடுப்பது இவர்களின் செயல்களுக்கு? பொறுப்பற்ற செயலுக்கு தக்க தண்டனை சரிதான்..

வாட்சாப்’பால் அழிவை சந்தித்தவர்கள் பட்டியலில் மீண்டும் ஒருவர்…

ரோஜா பூமாலை ஸ்பெஷல்..
முன்னாள் அமைச்சர் ‘ரமணா’…

இரண்டு நாளாக சமூக வலை தளங்களில் தமிழக அமைச்சரின் காதல் கொண்டாட்ட படங்களை பார்க்கிறேன் இது போல படங்களை வெளியிடுவது அவ்வளவு நாகரிகமாக தெரியல!
அவர் அமைச்சர் அவ்வளவு தான் அவரது துறை ரீதியா ஊழல், அல்லது மக்கள் பணியில் பின்னடைவு இவற்றை பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சிக்கலாம், அல்லது வன் புணர்ச்சியில் (கற்பழிப்பு) ஈடுபட்டிருந்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக நாமும் கட்டாயமாக குரல் கொடுக்கலாம், போராடலாம்
ஆனால் அதிமுக காரர் என்பதால் மட்டுமே இச்செயலை நாம் செய்வது ஏற்புடையதா? தனிபட்ட ஒருவருக்கு ஆசாபாச உணர்வுகள் இருக்க கூடாதா? அடுத்தவரின் அந்தரங்களை அலசுவது முறையா?
ஒருவர் இருமண தாரத்துடன் வாழ்வது புதிதல்ல! அவரும் சராசரி மனிதனே, மாறாக முற்றும் துறந்த முனிவர் அல்ல!! பிரேமானாந்தா, தேவநாதன், யோகாசன சாமியார் மத போதகர்கள் போன்றவர் அல்ல.

அந்த ரோஜா இதழ்கள் எவனூட்டு காசுல வாங்குனது

‪#‎அடிமை‬ ‪#‎நீக்கம்‬ ‪#‎வந்தா_என்ன_வராட்டி_என்ன‬

ஆட்சியே முடியப்போவுது இனி நீக்கினால் என்ன, நீக்காவிட்டால் என்ன!

அமைச்சர் ரமணா மைண்ட் வாய்ஸ்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.