நந்தன் ஸ்ரீதரன்

இந்துத்துவவாதிகளின் ஊதுகுழலாக சேனல்கள் செயல்படுவது ஒன்றும் புதிதல்ல.. அதற்காக இப்படியா பொய்யையும் புரட்டையும் அள்ளி விடுவார்கள்..?
மற்ற சேனல்களில் வரும் மகாபாரதத்தைவிட விஜய் டிவியின் மகாபாரதம்தான் பெரிய கவனத்தைப் பெற்றது. அதே போல இப்போது சீதையின் ராமன் என்று ஒரு புராண புருடாவை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள்..
அதனால் நமக்கென்ன..?
இருக்கிறது..
இதில் ஒரு காட்சியில் அஸ்வமேதயாகத்தின் முடிவு வருகிறது. யாகத்தின் முடிவில் அந்த குதிரையை பலியிட்டு வேள்வித் தீயில் இடுவது என்பது பலப்பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் ஆரியப் பழக்கம்.. ராமன் என்றில்லாமல் பிற்கால மன்னர்களும் பின்பற்றிய பழக்கம் அது.. அது குறித்த எந்த குற்றவுணர்வும் அப்போது இல்லை.. அது நிறுத்தப்பட்டதற்கான எந்த சான்றுகளும் இல்லை..
ஆனால் சீதையின் ராமனில் அஸ்வமேதயாக குதிரையை வேள்வியில் பலியிடக் கூடாது என்று ராமன் வாதாடுகிறார்.. ராமராஜ்யத்தில் பலி கூடாது என்று வாதாடுகிறார்.. பௌத்தத்தில் இருந்து கொல்லாமையை களவாண்டு கொண்ட நொண்ணைகள் பவுத்தத்துக்கு பல்லாயிரம் வருடங்கள் முன்பு இருந்த வழக்கத்தில் பொய்யைத் திணிக்கிறார்கள்.. பார்க்கின்ற மக்களுக்கு குதிரை என்பது மாடு என்றே தெரிய வைக்க பாடு படுகிறார்கள்.. அதற்கு சான்றாக ஒரு சமஸ்கிருத மந்திரத்தையும் சொல்கிறார்கள். அதன் அர்த்தத்தையும் சொல்கிறார்கள். அந்த மந்திரத்துக்கும் கொல்லாமைக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை..
இப்படியாகத்தான் இந்த இந்துத்துவா ஃபிராடு பேர்வழிகள் பொதுசனக் கருத்துகளை கட்டமைக்கிறார்கள்.. ஒரு சாதாரண சீரியலில் வரும் ஒரு காட்சிதானே என்று நாமும் மௌனமாகக் கடந்து போகிறோம்..
வரலாற்றைப் புரட்டு செய்ததற்காக விசய் டிவியை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..
வேறென்ன செய்து தொலைய..?
நந்தன் ஸ்ரீதரன், எழுத்தாளர்; வசனகர்த்தா.
விஜய் டிவியின் அலப்பறைகளை பகடி செய்யும் இந்த வீடியோவைப் பாருங்கள்…