ஜுனியர் விகடன் சாதியத்துடன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் படத்தை வெளியிட்டதாக கண்டனம் கிளம்பியுள்ளது. எம் எல் ஏக்களின் செயல்பாடுகள் குறித்து தொடர் வெளியாகிறது. இதில் மு.க. ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி குறித்து சமீபத்திய இதழில் கட்டுரை வெளியானது. மு.க. ஸ்டாலின் தானே தனக்கு சிகையலங்காரம் செய்துகொள்வது போன்று வரையப்பட்டு பிரசுரமானது. இதற்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம் எழுந்துள்ளது. சிலர் கடுமையான சொற்களை பயன்படுத்தி விமர்சனம் செய்திருந்தனர். அவர்களைத் தவிர்த்துவிட்டு Ashok Thamizhan என்பவரது முகநூல் பதிவை பகிர்கிறோம்..
“தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் அவர் முடியை அவரே வெட்டி கொள்வது போல படம் வெளியிட்டு இருக்கும் விகடன் இதழின் சாதிய போக்கு கண்டிக்கத்தக்கது .
விகடனின் இந்த பதிவிற்கும் , சில சாதி தலைவர்கள் வெட்டுவோம் , குத்துவோம் , ஆண்ட சாதி , என்று பேசுவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை .
ஜெயலலிதாவை மடிசார் கட்டிய பெண் போல விகடன் படம் வரைந்து கேலி செய்யுமா ??
# கண்டிக்கிறோம்”.
மறைந்திருக்கும் மனு தர்மம்.
LikeLike