க்ரியா தற்காலத் தமிழ் அகராதியை வெள்ளிக்கிழமை (19/02/2016)முதல் android app வடிவில் பெறலாம். App வடிவிலான அகராதி பயன்பாட்டுக்கு எளிதாக இருக்கும் வகையில் பல வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆங்கில வழித் தேடல்: சொல்லுக்கான பொருளை ஆங்கிலச் சொற்களின் மூலமும் தேடலாம். வகை வழித் தேடல்: தனியொரு சொல்லாக மட்டுமின்றி, இலக்கண வகை, வழக்குக் குறிப்பு மற்றும் துறைவாரியாகவும் தேடலாம். எடுத்துக்காட்டாக, இலக்கணச் சொற்களைத் தேடும்போது, துணைவினை என்று பதிவிட்டால் தமிழில் உள்ள 52 துணைவினைகளையும் பெறலாம். ஒவ்வொரு துணை வினையையும் தனித்தனியாகச் சொடுக்கி அவற்றின் பயன்பாட்டைத் தெரிந்துகொள்ளலாம்.
வழக்குக் குறிப்பில் அருகிவரும் வழக்கு, இஸ்லாமிய வழக்கு, இலங்கை வழக்கு, வட்டார வழக்கு, உயர் வழக்கு என்று வழக்குச் சொற்கள் தனித்தனியாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல், இசை, கணிதம், இயற்பியல், வேதியியல், மருத்துவம் என்று துறைவாரியாகவும் சொற்களைத் தேடலாம்.
இந்த crea tamildictionary app வெறும் சொற்களுக்கான அர்த்தத்தைத் தரும் அகராதியாக மட்டுமின்றி அச்சு அகராதியில் இருப்பதுபோலவே, அகராதியை எப்படி பயன்படுத்துவது என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Android phoneகளில் தமிழ் விசைப்பலகையை(keyboard) பதிவிறக்கம் செய்துகொள்வதற்காக google indic keyboard link கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
Crea tamildictionary app பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
crea tamildictionary app பதிவிறக்கம் செய்த பிறகு அகராதியை 10முறை இலவசமாகப் பயன்படுத்தலாம். நிரந்தரப் பயன்பாட்டுக்கு Rs.199/- (நூற்று தொண்ணூற்று ஒன்பது மட்டும்) ரூபாயை கிரெடிட், டெபிட் கார்டு (credit card, debit card, net banking, wallet) மூலமாகவோ, க்ரியா வங்கிக்கணக்கில் பணம் செலுத்தியோ அல்லது M.O. அனுப்பியோ android செயலி வடிவிலான க்ரியா தமிழ் அகராதியைப் பெறலாம்.
தொடர்புக்கு
க்ரியா,
எண்: 2/25, 17வது கிழக்குத் தெரு,
காமராஜர் நகர், திருவான்மியூர்,
சென்னை-41.
Phone: 72999 05950
Email: creapublishers@gmail.com
Website: www.crea.in
Gokul
LikeLike
jsahjksa
LikeLike