செவ்வாய் கிழமை டெல்லி பாட்டியாலா கோர்ட் வளாகத்தில் கன்னையா குமார் ஆஜர் படுத்தப்படும்போது, மாணவர்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர் என பலரும் குழுமியிருந்தனர். அப்போது சில வழக்கறிஞர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு கடுமையாகத் தாக்கினர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் பாஜக வழக்கறிஞர்கள் மட்டுமல்லாது, பாஜக எம்.எல்.ஏ. ஓ.பி.ஷர்மா, மனித உரிமை செயல்பாட்டாளரும் இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவாளருமான அமீக் ஜேமியை பாட்டியாலா கோர்ட் வாசலில் கீழே புரட்டி அடித்தார். இது ஊடகங்களில், சமூக வலைத்தளங்களில் வெளியாகி கண்டத்துக்கு உள்ளானது. ஓ.பி.ஷர்மா கைது செய்யப்பட வேண்டும் என்று பலமுனைகளிலிருந்து கோரிக்கை எழுந்தநிலையில், வியாழக்கிழமை அவர் கைது செய்யப்பட்டார்.
டெல்லி திலக் மார்க் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவரை ‘மரியாதை’யுடன் நடந்துகொண்டது போலீஸ். அடிக்கடி காஃபி, வேளாவேளைக்கு சாப்பாடு என கவனித்தனர். இதுகுறித்து டெலிகிராப் பத்திரிகையாளர் கேள்வி எழுப்பிய போது, “அவர் என்ன சாதாரண மனிதரா கவனிக்காமல் இருப்பதற்கு…”என்று பதிலளித்திருக்கிறார்கள்.
ஒப்புக்காக காலையிலிருந்து மாலைவரை காவல் நிலையத்தில் அமர வைக்கப்பட்ட ஓ.பி.ஷர்மாவுக்கு. மாலை 7 மணிக்கு ஜாமீன் கொடுத்து மரியாதையுட்ன் அனுப்பிவைத்தனர்.
மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
LikeLike