#FollowUp:“நாம் தமிழர் கட்சி இதுபோன்ற செயல்களை ஒருபோதும் அனுமதிக்காது” தலித்துகளை அவமதிக்கும் பதிவு குறித்து சீமான்

‘இழிசாதி தலித்’ என பின்னூட்டம் இட்ட நாம் தமிழர் கட்சியின் திருமங்கலம் தொகுதி வேட்பாளர் தமிழ்மணி மீது நெல்லை மாநகர ஆணையாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பாளர் முருகன் இந்தப் புகாரை அளித்திருக்கிறார்.

இந்நிலையில், இந்தப் புகார் குறித்து தி ஹிந்து (ஆ) பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “புகார் உண்மையாக இருக்கும்பட்சத்தில், நாம் தமிழர் கட்சி இதுபோன்ற செயல்களை ஒருபோதும் அனுமதிக்காது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். தொடர்புடையவரை மன்னிப்புக் கேட்கவும் வைப்பேன்” என தெரிவித்துள்ளார்.

தமிழ்மணியின் பின்னூட்டங்கள் குறித்து முதலாக செய்தி வெளியிட்டது தி டைம்ஸ் தமிழ். இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு, விவாதம் ஆனது.

 

 

7 thoughts on “#FollowUp:“நாம் தமிழர் கட்சி இதுபோன்ற செயல்களை ஒருபோதும் அனுமதிக்காது” தலித்துகளை அவமதிக்கும் பதிவு குறித்து சீமான்

 1. இதெல்லாம் சீமான் வளர்த்தெடுக்கும் இழி அரசியலின் வடிவம்தான். அண்ணல் அம்பேத்கரை வட இந்தியர் என்பது, சூத்திர ஜாதிவெறியன்களை இனம் என்பது, இதெல்லாம் சீமானின் அரசியல் அறிவற்ற இழிக்கலாச்சாரம். இதைத்தான் அவரது தொண்டர்களும் கடைப்பிடிக்கிறார்கள்.

  வழக்கு கொடுத்தவுடன் இப்போது தமது வழக்கமான பாணியில் மழுப்புகிறார் சீமான். அந்த தமிழ் மணி பேசியது வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் குற்றம். எனவே அந்த நபர் தண்டிக்கப்படவேண்டும். ஆனால் அவரை மன்னிப்புக் கேட்கச் சொல்லுவதாகச் சொல்லி சட்டத்தின் நடவடிக்கையில் இருந்து அந்த ஜாதிவெறியனைக் காக்கத் துடிக்கிறார் சீமான். மேலும் அந்த நபர் மீது எவ்விதமான கட்சி நடவடிக்கை எடுக்கவுமில்லை, வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்கவும் இல்லை. எனவே இது சீமானின் இன்னுமொரு நாடகம் என்பதே உண்மை!

  Like

 2. தலித்களை இழிவு செய்யும் சீமானின் நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரத்திற்கு வந்தால் சேரிகளில் செருப்படி கிடைக்கும் .. எங்களுக்கு என்ன பெயர் வைக்கலாம், எப்படி அழைக்கலாம் என்பதெல்லாம் சினிமாகார சீமானின் எடுபிடிகள் தீர்மானிக்க கூடாது .. இனியும் தலித்களை இழிவு செய்தால் சீமானையும் , அவன் கட்சிகாரர்களையும் செருப்பால் அடிப்போம் .. தமிழ் தேசியம் , மசுரு தேசியம்னு பேசிகிட்டு தலித்களை இழிவு செய்தால் செருப்பால் அடிப்போம் ..

  Like

 3. தமிழன்னு சொல்லிகிட்டு சூது,வாது தெரியாத உலகத்தமிழர்களிடத்தில் பணம்பறிக்கும் கொள்ளைகும்பல் தலைவன் கூப்பாடு எல்லாம் திராவிட இயக்கத்தை அசைக்ககூடமுடியாது.இந்தியாவில் கல்வி,பொருளாதாரம்,தனிநபர் வருமானம்,உள்கட்டமைப்புவசதி,நகர முன்னேற்றம்,சமூகமுன்னேற்றம்,சமூகநீதிகோட்பாடுபின்பற்றல்,பள்ளி,கல்லூரி ,மருத்துவமனை வசதிவாய்ப்புகள்,போக்குவரத்து வசதிவாய்ப்புகள்,அடிப்படை வசதிவாய்ப்புகள்,ஜனநாயக உரிமை,இன்னும்பல………வேறு எந்தமாநிலத்தையும்விட தமிழகத்தில் அதிகம்.இல்லை என்று மறுக்கமுடியுமா?மடையன்களால் இந்த புல்லுருவிகள் திராவிட இயக்கத்தை குறைசொல்வது?தங்கள் பிறப்பை குறை காண்பதுபோலாகும்.திராவிட இயக்கத்தில் தயவு செய்து பார்ப்பன ஆதரவு அதிமுகவை சேர்க்கவேண்டாம்

  Like

 4. தமிழ் தேசிய வளர்ச்சியை பொருக்க முடியாமல் , அரசியல் விளையாட்டுக்களை குள்ளநரி கூட்டங்கள் செய்யத்தொடங்கி விட்டனர் , தமிழர் விழிப்புணர்வோடு அனைத்தையும் கையாளவேண்டும்

  Like

 5. இது சீமானின் அரசியல் அறிவற்ற தன்மையையும் சாதி வெறியர்களை தமிழர்கள் என்று மொழிச் சாயம் பூசுவதன் மூலம் அவரது தமிழர்-பார்ப்பனீய சிந்தனை அவரை அறியாமலே வெளிப்பட்டுவிட்டது. RSS, ராமதாஸ், சீமான் இவர்கள் மூவரும் ஒன்றுதான்.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.