2011 முதல் 2016 வரையிலான ஆட்சியில், நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட் பற்றிய கட்டுரை அல்ல இது. பட்ஜெட் தாக்கலின் போது, அறிமுகபடுத்தப்பட்ட அம்மா ப்ரீஃப்கேஸ், செருப்பில்லாத தன்னடக்கம் பற்றிய கட்டுரை.
2011-2012-ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது. அந்த ஆண்டு, நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தன்னுடைய காலில் செருப்புடன் இருந்திருக்கிறார். பட்ஜெட் பேப்பர்கள் அடங்கிய ப்ரீஃப்கேஸில் முதலமைச்சர் ஜெயலலிதா படம் இடம்பெற்றது அந்த ஆண்டில்தான்.
2012-2013 -ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது. நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் அவருடைய காலில் செருப்பில்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கியது இந்த வருடம்தான். ப்ரீஃப்கேஸில் முதலமைச்சர் படம் மாறவில்லை. டிசைனும், கலரும் மட்டுமே மாறி இருக்கிறது.
2013-2014ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது. செருப்பில்லாமல் நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம். முதலமைச்சர் புகைப்படம் இடம் பெற்ற ப்ரீஃப்கேசை மறக்கவில்லை.
2014-2015ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது. வெறும் பாதமும், முதலமைச்சர் புகைப்பட ப்ரீஃப்கேசுடன் நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம்.
*2015-2016 – இந்த வருடத்தில், முதலமைச்சர் ஜெயலலிதா பெங்களுர் சிறையில் அடைக்கப்ப்ட்டிருந்ததால், இடைக்கால முதலமைச்சராக பொறுப்பு வகித்த, நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், பட்ஜெட் தாக்கல் செய்தார். அம்மா புகைப்படம் இடம் பெற்ற ப்ரீஃப்கேசை மறக்கவில்லை அவர். அது பெரும் கண்டனத்துக்கும் ஆளானது. சிறையில் இருக்கும் ஜெயலலிதாவின் அறிவுரை பெற்றுத்தான் பட்ஜெட் உரை தயாரிக்கபப்ட்டதா என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
( அந்த வருட பட்ஜெட் புகைப்படம்தான் பேனர் புகைப்படமாக வைக்கப்பட்டிருக்கிறது)
2016-2017-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நேற்று (16.02.16) தாக்கல் செய்த போது. முதலமைச்சர் “புகைபப்ட ப்ரீஃப்கேஸ் +வெறும் பாதம்” என்று சம்பிராதயத்தை மாற்றாமல், தன்னுடைய ஐந்தாவது வருட பட்ஜெட் நிகழ்வுகளை நிறைவு செய்திருக்கிறார் ஒ.பி.எஸ்.