தமிழ்நாடு சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கும் வலது கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா, தமிழகத்தின் அடித்தட்டு மக்களுக்கும் அதிக பரிச்சயமானவர். தமிழ்நாட்டின் அத்தனை முக்கிய பிரச்சனைகளுக்கும், பாராளுமன்றத்தில் உரத்து ஒலிக்கும் ஒரு சில குரல்களில் டி.ராஜாவின் குரலும் முக்கியமான ஒன்று.
அவரின் மகள் அபராஜிதா ராஜாவின் பெயர்தான், கடந்த இரண்டு நாட்களாக டெல்லி பத்திரிக்கைகளில் முக்கிய இடம் பிடித்துள்ளது.
“புலிக்கு பிறந்தது” என்ற சொல்லுக்கு சிறிதும் பிழை இல்லாமல் வளர்ந்த பெண்ணான அபராஜிதா, ஐந்தாண்டுகளுக்கு முன், அதாவது தன்னுடைய இளங்கலை இரண்டாமாண்டு படிப்பின்போதே, டெல்லி பல்கலை தேர்தலில் போட்டியிட்டவர்.
“மாணவர் தேர்தலில் போட்டி என்பது எனக்கு ஆச்சர்யமான விஷயமில்லை . அரசியல் என்பது என்னுடைய ரத்தித்திலேயே இருக்கிறது. அரசியல்தான் என்னுடைய களம் என்பதால், அது குறித்து வளர் பருவத்திலயே, தேடி தேடி படித்து வருகிறேன்” என்று தன்னுடய 18 வயதில், அபராஜிதா அளித்த பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.
அபராஜிதா , ஏன் டெல்லி பத்திரிக்கைகளில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறார்… என்ற கேள்வி இப்போது எழுகிறதா ?
*ஜவஹர்லால் நேரு பல்கலையில் மேல்படிப்பு படித்து வரும் அபராஜிதா ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான AISF-யின் தலைவர்களில் ஒருவர்.
*2001-ம் ஆண்டு , பார்லிமென்டை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் மூன்றாவது நினைவு நாளை முன்னிட்டு, கடந்த 9-ம் தேதி பல்கலையின் மாணவர் தலைவர் கன்னையா குமார் தலைமையில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கூடி இருக்கிறார்கள்.
*அப்போது அப்சல் குருவுக்கு ஆதரவாகவும், தேசவிரோத கோஷங்களையும் எழுப்பியதாகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இளைஞர் பிரிவான ABVP போராட்டத்தில் ஈடுபட்டது.
*இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, தேசத்திற்கு எதிராக கோஷமிட்டதாக, தமிழக எம்.பி. டி.ராஜாவின் மகள் அபராஜிதா உட்பட, 10 பேரை போலீசார் தேடி வருவதாகவும், அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி விடாமல் இருக்க விமான நிலையங்களில் எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஆங்கில, ஹிந்தி, தமிழ் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
*இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டி.ராஜா, ” ஜவஹர்லால் நேரு பல்கலையில் மாணவர்கள் தவறு எதுவும் செய்யவில்லை. அவர்களை தேச விரோதிகள் என்று கூறுவதற்கு இந்த கட்சிகள் யார் ?. என் மகள் மாணவர் இயக்கத்தில் இருக்கிறார். அவர் எந்த தேச விரோத குற்றத்திலும் ஈடுபடவில்லை. அபராஜிதாவை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். ஒரு மகளாக மட்டுமல்ல, நாட்டின் ஜனநாயக உரிமைக்காக போராடும் இந்திய குடிமகளாகவும் நினைத்து பெருமைபடுகிறேன்” என்றும் கூறியுள்ளார்.
*அபராஜிதா மீது தேச விரோத குற்றம்சாட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுமானால், அதற்கு என்ன எதிர்வினை ஆற்றவேண்டும் என்று எங்களுக்கு தெரியும்” என்றும் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
*இதனிடையே, பாரதீய ஜனதாவுடன் இணக்கமாக போகுமாறு வலியுறுத்தி, டி.ராஜா, சீதாராம் எச்சூரி உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் புகார்கள் குவிவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
*இரண்டாண்டுகளுக்கு முன், தனியார் டாகுமெண்டரி ஒன்றுக்காக அபராஜிதா அளித்த பேட்டி. அவர் எப்படிப்பட்ட பார்வை கொண்ட இளம் பெண் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.
*துர்கா போன்ற ஆவேசமான தெய்வங்களை வழிபடும் இந்துத்துவ வாதிகள், இந்திய பெண்களை அமைதியுடன் இருக்குமாறு கூறுவது ஆச்சர்யமாக இருப்பதாக இந்த பேட்டியில் அபராஜிதா கூறியுள்ளார்.
கட்டுரை எழுதியவர் ஒரு “பெரிசு” என்று நினைக்கிறேன். எனவேதான் வலது கம்யுனிஸ்ட் என்று எழுதுகிறார். அது இந்திய கம்யுனிஸ்ட். மற்றபடி கட்டுரை சிறப்பாகவே உள்ளது. வாழ்த்துக்கள்.
LikeLiked by 1 person
நான் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்தவன்.. எனக்கு ஒரு 5-6 வயது இருக்கும்போது ராஜா அவர்கள் ஒரு கம்யூனிஸ்ட் பொதுகூட்டதிற்கு வந்திருந்தார்..இது நடந்து 30 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் .. பென்சில் போன்று அப்படி ஒரு மெல்லிய தேகம்.. பொதுவுடைமை பற்றி ஒரு 2 மணி நேரம் பேசினார்.. எனக்கு பெரிதாய் ஒன்றும் புரியவில்லை என்றாலும் அப்படி ஒரு ஆளுமை.. மக்கள் கூட்டம் பொறுமையாக கேட்டது.. நிதானமானவர்.. எளிமையானவர்.. ஒரு குடிசை வீட்டில் தான் அன்று இரவு தங்கினார்.. ஓர் கோரை பாயை விரித்து போட்டு தூங்கினார்.. அப்படி வீதிக்கு வீதி தெருவுக்கு தெரு பொதுவுடைமை பேசி தான் இன்று இவ்வளவு உயரத்தில் கட்சியில் இருக்கிறார்.. புலிக்கு பிறந்தது பூனையாகுமா? வாழ்த்துக்கள் சகோதரி! தந்தையாரை விட மிக உயரத்திற்கு செல்ல வாழ்த்துக்கள்.
LikeLiked by 1 person