“பெருங்கனவோடு எழுந்த ஒரு மாபெரும் இயக்கம் ஒரு குடும்பத்தின் வாசலில் வீழ்த்தப்பட்ட துயரம்!”

யோ. திருவள்ளுவர்

தமிழக அரசியலிலிருந்து அதிமுக அகற்றப்படுவதை திமுகவும், திமுக அகற்றப்படுவதை அதிமுகவும் விரும்பாது. ஏனெனில் அவையிரண்டும் மணல், கிரானைட், மண், நிலம் கொள்ளை முதல் ஊழல், மதுஆலைகள், டாஸ்மாக், அணு உலைகள், கெயில், மீத்தேன், ஒப்பந்தம் கொள்ளைகள் ஆகிய அனைத்திலும் இருகட்சிகளுக்கும் அவ்வளவு ஒற்றுமை.

மற்றொரு அணி அல்லது கட்சி தமிழக அரசியலில் பலம்பெறுவதை இரண்டு கட்சிகளும் விரும்பாது. மாற்று ஒன்று உருவானால் இருகட்சிகளின் கொள்கைகளுக்கும் முடிவு வந்துவிடுமல்லவா. அப்படி மாற்று அணி அல்லது கட்சி உருவாக்க நடைபெறும் முயற்சிகளை தகர்க்க அனைத்து பலத்தையும், தந்திரங்களையும் தொடர்ந்து இருகட்சிகளும் பயன்படுத்துகின்றன.

அப்படியான தந்திரங்களில் ஒன்று மற்ற கட்சித்தலைமைகளை வசைபாடுவதும், களங்கம் கற்பிப்பதும். அதே தலைமைகள் தங்களோடு கூட்டணிக்கு வந்தால் கொண்டாடுவதும் அல்லாவிடில் அடிப்பொடிகளை தூண்டி களங்கம் ஏற்படுத்துவதுமாக திமுக செய்து வருகிற தந்திரம் இணையத்தின் காலத்தில் எடுபடுமா? தங்களது கட்சித்தலைமையின் போலித்தனங்களையும், நேர்மையற்ற செயல்களையும், ஊழல்களையும், கட்சியை தனது குடும்பத்தின் தனிச்சொத்தாக மாற்றிய கயமைத்தனத்தையும் கேள்வியெழுப்பும் துணிச்சலும், இல்லாதவர்கள் சுயமரியதைக்கு புறம்பாக தனக்கும் கும்பலில் பதவி தேடுகிற மனநிலையினை இப்பிரச்சாரங்களில் வெளிப்படுத்துகின்றனர்.

எந்த கட்சியிலும் இத்தகையவர்களின் பெருக்கம் அக்கட்சியையே அழித்துவிடும். உட்கட்சியில் கேள்வி, காரசாரமான விவாதம், கருத்தும் அதற்கு மாற்றுக்கருத்தும் இல்லாமல் போவது கட்சியை தீராத நோய் பிடித்துள்ளது என்பதற்கு அறிகுறி. சப்ளாக்கட்டைகளால் கட்சியைத் தின்று ஏப்பம்விட முடியுமே தவிர மக்களுக்கான அரசியலை வளர்த்தெடுக்க முடியாது. அதிமுக அத்தகைய ஒரு நிலையை அதன் துவக்கம் முதலே அடைந்துவிட்டது. ஜெயலலிதா காலத்தில் அதிமுக வசூல்வேட்டையை மட்டும் உயிர்ப்போடு வைத்து மற்ற அனைத்திலும் உறைநிலைக்கு சென்றுவிட்டது. திமுக சப்ளாக்கட்டைகளால் நிரம்பியுள்ளது. முன்னரெல்லாம் கருணாநிதி கூட்டணி முடிவெடுத்தாலும் கட்சியில் தனது சகாக்களுடன் பெயரளவில் கூட்டம் கூட்டி ஆலோசனை நடத்துவதாக காட்டிக்கொள்வதுண்டு. ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், அன்பழகன் ஆகிய பலரும் கருத்துச்சொல்லும் வாய்ப்பிருந்தது. இன்று? ஸ்டாலினும், கனிமோழியும் மட்டும் அருகிருக்க கருணாநிதி டில்லி வருகையாளர்களை சந்திக்கிறார். சந்திப்பு முடிந்ததும் கோபாலபுரம் வாசலில் அறிவிப்பும் வெளியாகிறது.

பெருங்கனவோடு எழுந்த ஒரு மாபெரும் இயக்கம் ஒரு குடும்பத்தின் வாசலில் வீழ்த்தப்பட்ட துயரமிக்க கதையிது. தேர்தல் வெற்றி தோல்வியைக் காட்டிலும் மிகப்பெரிய இழப்பிது. ஒருகட்சியினரே அக்கட்சியை அழித்தொழிக்கிற கதையிது. திமுகவின் வீழ்ச்சி அதன் தலைமையிடம் மட்டுமல்ல பொறுப்பற்ற தொண்டர்களிடமும், சப்ளாக்கட்டைகளிடமும் தானுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.