“ஜனநாயகத்தின் நான்காவது தூண் விலை போகுது; ஆனந்த விகடனும் தி இந்துவும்தான் உதாரணங்கள்” ராமதாஸ் கடும் தாக்கு

பாமக நிறுவனர் ராமதாஸ், சென்னை தி. நகரின் நடந்த பாமக நிர்வாகிகள் கூட்டத்துக்குப் பிறகு, பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஊடகங்கள் அனைத்தும் திமுக ஆதரவு ஊடகங்களாக மாறிவிட்டன; ஜனநாயகத்தின் நான்காவது தூண் விலை போகிறது என குற்றம்சாட்டினார். அப்போது நிருபர்கள், “ஜனநாயகம் விலை போய்விட்டதாக எதை வைத்துச் சொல்கிறீர்கள்” எனக் கேட்டனர். அதற்கு,

“ஜனநாயகத்தின் நான்காவது தூண் விலை போகுது, அடிச்சி. அடிச்சி அடிச்சி சொல்றேன். ஆனந்தவிகடன் குழுமம், தி ஹிந்து அதுக்கு உதாரணங்கள்” என்றார்.

அதற்கு ஆதாரம் என்ன? என்று மீண்டும் நிருபர் கேட்டார்

“ஹிந்து பத்திரிகை பத்தி  தர்றேன். இன்னும் நாலைந்து நாட்கள்ல ஆதாரம் தர்றேன். முன்னெல்லாம் ஹிந்துல ஒரு செய்தி வந்துன்னா கெஜட்டுல வந்தது போல. ஆனா இப்ப.. கோலப்பன்னு ஒருத்தர் இருக்காரு. அவரு ரொம்ப மாறிட்டாரு. இன்னொருத்தர் இருக்காரு. இவங்க தேடிப்பிடிச்சி..அந்த அசிங்கத்தை என் வாயால எப்படி சொல்றது? எனக்கே வாய்க் கூசுது” என்று பத்திரிகையாளர் பெயர் குறிப்பிட்டு கடுமையாகப் பேசினார்.

வீடியோ இணைப்பு இங்கே..

 

One thought on ““ஜனநாயகத்தின் நான்காவது தூண் விலை போகுது; ஆனந்த விகடனும் தி இந்துவும்தான் உதாரணங்கள்” ராமதாஸ் கடும் தாக்கு

  1. ஊடக நிறுவனங்கள் மீதான விமர்சனங்களை, ஊடகத்தவரிந் பணியாளர்கள் மீதானவையாகக் கருதமுடியுமா?

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.