கோவை டயர் ஆலையில் கொதிகலன் வெடித்து விபத்து:6 தொழிலாளர்கள் பலி; ஆலை நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு உடனே ஜாமீனில் விடுவிப்பு

கோவை அருகே டயர் உருக்கு ஆலையில் கொதிகலன் வெடித்ததில் தீக்காயம் அடைந்த 6 தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.கோவை மாவட்டம், செட்டிபாளையம் – கள்ளப்பாளையம் சாலையில், ஓரட்டுக்குப்பை என்ற இடத்தில் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த பா.செந்தில் என்பவருக்குச் சொந்தமான ஸ்ரீநாகலட்சுமி பைரோலிசிஸ் கம்பெனி இயங்கி வந்துள்ளது. பழைய டயர்களை துண்டு துண்டாக வெட்டி கொதிகலனில் வைத்து உருக்கி பைரோலிசிஸ் என்ற ஆயிலை வெளியே எடுக்கும் பணி இங்கு நடந்து வந்துள்ளது. தார்ச்சாலை போடுவதற்கும், இரும்பு உருக்குக்கு எரிபொருளாகவும் பயன்படுவது பைரோலிசிஸ் ஆயில் ஆகும்.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இந்த ஆலை இயங்கி வந்துள்ளது. ஆலையின் மேலாளர், மேற்பார்வையாளர் உட்பட 10 பேர் இங்கு பணிபுரிந்துள்ளனர். இவர்களில் 8 பேர் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.இந்நிலையில், கடந்த 11-ஆம் தேதி கொதிகலனுக்கு மிக அருகில், மேற்குவங்க மாநிலம் அல்புரிதர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோ.சரோஜ் (23), அ.தருண் (20), அ.குணால் (19), சு.பிர்ஜூன் (20), சி.ப்ரீத்தம் (25), தே.விகாஸ் (19) ஆகியோர் பணியில் இருந்துள்ளனர். அப்போது, காலை 11 மணியளவில் கொதிகலன் வெடித்து ஒரு கதவின் வழியாக சூடான அனல்காற்று, தீப்பிழம்பு, புகையுடன் கூடிய கரி ஆகியவை வெளியேறி பணியில் இருந்த தொழிலாளிகள் மீது பட்டுள்ளது. இதில், அந்த இடத்திலேயே 6 பேரின் உடல்களும் கருகின. இதையடுத்து, அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. அவர்கள் அனைவரும் நூறு சதவீதம் தீக்காயம் அடைந்துள்ளதாகவும், 6 பேரும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தீக்காயம் அடைந்த தொழிலாளர்களிடம் கோவை 2-வது குற்றவியல் நடுவர் ராஜ்குமார் வாக்குமூலம் பெற்றுள்ளார். சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் போலீசாரும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். ஆலைக்கான உரிமம் முறையாக பெறப்பட்டுள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்துள்ளனர்.

அதனடிப்படையில், பாதுகாப்பு குறைவாக அஜாக்கிரதையாக ஆலையை இயக்கி, மற்றவர்களுக்கு கொடுங்காயங்கள் ஏற்படுத்தியதாக 285 மற்றும் 337 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆலையின் உரிமையாளர் செந்தில், அவரது தந்தை பாலகுரு, மேற்பார்வையாளர் கௌதம் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.இதனிடையே கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 4 பேர் வெள்ளிக்கிழமையன்று இரவு இறந்தனர். சனிக்கிழமையன்று மாலை ஏனைய 2 பேரும் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீக்கதிர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.