சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சாதிய கண்ணோட்டத்துடன் நடந்துகொள்கிறார்: தலித் நீதிபதி புகார்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மீது, சாதிய கண்ணோட்டத்துடன் நடந்துகொள்வதாக நீதிபதி சி. எஸ். கர்ணன் குற்றம்சாட்டியிருக்கிறார். நீதிபதி சி. எஸ்.கர்ணன் அளித்த கடிதத்தின் அடிப்படையில் உயர்நீதிமன்ற பதிவாளர், இந்த விவாகாரத்தை விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் அவரச மனுவை புதன்கிழமை அளித்தது. இதன் மீதான விசாரணை வரும் திங்கள் கிழமை உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது.

நீதிபதி கர்ணன் எழுதிய கடிதத்தில் தமிழ்நாடு நீதித்துறை அகாடமியின் நிர்வாகக் குழு பதவியில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்டு, உயர் சாதியைச் சேர்ந்த இளநிலை நீதிபதி ஒருவரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் நிர்வாகக் குழுவில் தலித் அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்த நீதிபதிகள் எவரும் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார். இதற்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை குற்றம்சாட்டியிருந்தார்.

இந்தக் கடிதம் தலித் மற்றும் பழங்குடியினருக்கான ஆணையத்துக்கும் முக்கியமான அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அனுப்பட்டுள்ளதாக சொல்லியிருக்கிறார் நீதிபதி கர்ணன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.