தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே பரப்புரையை தொடங்கிய மக்கள் நலக் கூட்டணி, வாக்குகளைப் பிரிக்குமா? வெற்றிக் கனியை பறிக்குமா? என்ற தலைப்பில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்படப் பேசு நிகழ்ச்சி புதன்கிழமை ஒளிப்பரப்பானது. இந்த நிகழ்ச்சியில் திமுக சார்பில் மனுஷ்ய புத்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து திருப்பூர் சுப்பராயன், முஸ்லீம் கட்சியிலிருந்து ஷேக் தாவூத், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து ஆளூர் ஷாநவாஸ், பத்திரிகையாளர் ப.கோலப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை மு. குணசேகரன் நெறியாள்கை செய்தார்.
இந்த விவாதத்தின் ஒரு கட்டத்தில் மனுஷ்யபுத்திரன் கடுமையான விமர்சனங்களை உடன் பேசியவர்கள் மீது வைத்தார். வீடியோ இணைப்பு கீழே…
நேர்படப் பேசு நிகழ்ச்சியில் மனுஷ்யபுத்திரனின் எதிர்வினை குறித்து சமூக ஊடகங்களில் விவாதம் எழுந்துள்ளது. அதன் தொகுப்பு கீழே…
கிருஷ்.ராமதாஸ்
மனுஷ்யப் புத்திரன், தமிழன் பிரசன்னா, அப்பாவு இவர்களெல்லாம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு கட்டுப் படுவதில்லை. காட்டுக் கூச்சல் கத்தி மற்றவர்கள் விவாதத்தை தடுப்பதில் தான் குறியாக இருக்கின்றார்கள். இதில் இன்னும் ஒரு படி மேலே போய் சபை நாகரீகம் கொஞ்சம் கூட இல்லாமல் எப்போதும் சிரித்துக் கொண்டே தமிழன் பிரசன்னா இருப்பது எரிச்சலை ஏற்படுத்துகிறது.
நேற்று புதிய தலை முறை விவாத்ததில் ஒரு கருத்தை ஆளூர் நவாஸ் கூற ஆரம்பிக்கின்றார். அவரைப் பேசவிடாமல் மனுஷ்யபுத்திரன் செய்கை மிகவும் மோசமானது. அவர் பேசி முடித்தவுடன் மறுத்து பேச வேண்டியது தானே முறையாகும். இவரையெல்லாம் ஏன் கூப்பிடுகின்றார்கள் என்று நான் நினைக்கும் போதே ஆளூர் நவாஸ், மனுஷ்யபுத்திரனை அழைப்பதாக இருந்தால் எங்களையெல்லாம் நீங்கள் அழைக்க வேண்டியதில்லை என்று குணசேகரனிடம் நேரடியாகவே கூறினார்.
மனுஷ்யபுத்திரனை நினைக்கும் போது – கொடுமை, கொடுமைன்னு கோவிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடுமை ஜிங், ஜிங்குன்னு ஆடுச்சாம் என்ற பழ மொழி தான் நினைவில் வருகிறது.இவர்களின் செயல்பாடுகளை திமுக பரிசீலிக்க வேண்டும். இவர்கள் வாதத்தால் ஆதரவு பெருகுவதற்கு 1% கூட வாய்ப்பில்லை. வழக்கறிஞர் கண்ணதாசன் அருமையாக தன் தரப்பு கருத்துகளை தெரிவிக்கின்றார்.
இதேபோல் தான் முன்பு தமிழிசை சவுந்தரராஜன் செய்து கொண்டிருந்தார். இப்போது அவரை யாரும் அழைப்பது இல்லை. பாஜக வின் வானதி சீனுவாசன், சேகர், நாராயணன், அதிமுக வின் மாஃபா.பாண்டியராஜன், ஆவடி குமார், தமிழரசன், திமுக வின் பரந்தாமன் போன்றவர்களின் விவாதங்களை பாராட்டலாம். இந்த நிலைமை புதிய தலை முறையில் மட்டும் இல்லை. தந்தி டிவியிலும் இதே நிலைதான்.
மனுஷ்யபுத்திரன் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம். விவாதம் என்பது கருத்து சார்ந்தாதாக இருக்க வேண்டும். குழாயடி சண்டையாக இருக்கக் கூடாது. பல நேரங்களில் நேயர்களுக்கு எரிச்சலூட்டுவதாக இருக்கின்றது என்பது தான் நிதர்சனம்.
தொலைக்காட்சி விவாதங்களில் மனுஷ்யபுத்திரன் ஆவிவந்திறங்கியது போல கத்துவதைப் பார்த்தால் விரைவில் அமானுஷ்யபுத்திரன், சமூக ஆர்வலர் என்றுதான் பெயரட்டை போடவேண்டியிருக்கும் போல.
மனுஷ் நேற்று பேசும்போது எனக்கு ஆச்சர்யம்.. ஹெச்.ராஜா, கல்யாண ராமன் போன்றோர் பேசுவதை போன்ற உணர்வு. வருத்தமளிக்கிறது மனுஷ்.. தேர்தலுக்காக உங்கள் நிலை இப்படி ஆகியிருக்கக் கூடாது.
தோழரே நீங்கள் மனுசனில்லாத புத்திரனை காய்ச்சி எடுங்கள் அதில் ஒரு சதவிகிதம் கூட தவறு இல்லை ஆனால் கொள்ளிக்கட்டைகளான பாரதியஜனதா,ஆர் எஸ் எஸ்,ன் ஊதுகுழல் அல்ல ராக்கெட் போன்ற அழிவின் உச்சங்களான ஆரிய மந்திகளை பாராட்டுவது மனித இனத்தின் அழிவை பாராட்டுவதற்க்குசமம்.திமுக நிச்சயம் எதிர்க்கபடவேண்டிய சனநாயக மறுப்பு இயக்கம் தான் ஆனால் மனிதனை எதிர்க்க பன்றிகளுடன் நட்பு பாராட்டவேண்டாம் தோழா அன்புசகோதரனாகவும்,ஆரிய எதிர்ப்பாளனாகவும் கேட்கிறேன்.
LikeLike
மனுஷ்யபுத்திரன், அரசியலுக்கு வரும்வரை ஒரு நல்ல சமுக சிந்தனையாளராக இருந்தார், ஆனால் திமுக கட்சியில் சேர்ந்தவுடன் தன்னை அந்த கட்சியி அடிவருடியாக மாற்றிக்கொண்டார். சுருங்க கூறின் அவர் தன் தனித்துவத்தை திமுக விற்கு விற்றுவிட்டார் என்றே சொல்லலாம்
LikeLike