வருசநாட்டு மாப்பிள்ளை கைது; ஏன்?

தென் மாவட்டங்களில் எங்கெல்லாம் சாதிய மோதல்கள் வன்முறைகள் நடக்கிறதோ அங்கெல்லாம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அரங்கேறுகின்றன என்று பொருள் கொள்ளலாம். சாதி ஆழமாக வேறூன்றி இருக்கும் மதுரை உசிலம்பட்டி வட்டாரத்தில் பெண்சிசுக் கொலைகளும் குழந்தை திருமணங்களும் அதிகம்.
பெண் குழந்தைகள் பிறந்துவிட்டால், வரதட்சணை தர வேண்டுமே என்பதைக் காட்டிலும் வேறு சாதி ஆணுடன் போய்விடுவாளோ என்கிற பயம் இந்தப் பகுதி மக்களுக்கு இருப்பதாக கள ஆய்வில் இருக்கும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். அதேபோல்தான் 18 வயதை எட்டும் முன்பே, அதாவது பருவ எய்திய ஒருசில மாதங்களிலேயே பெண்களுக்குத் திருமணம் செய்து வைப்பதும் இந்தக் காரணத்தால்தான் என்கிறார்கள் களப்பணியாளர்கள்.

அதற்கொரு உதாரணமாகி இருக்கிறது. வருசநாட்டில் நடந்திருக்கும் இந்தச் சம்பவம். பெருமாள்பட்டியைச் சேர்ந்த ஜெகதி என்பவருக்கு, 16 வயதே நிரம்பிய இளம் பெண்ணுக்கும் புதன்கிழமை திருமணம் நடைபெறுவதாக இருந்தது. மணமகளுக்கு திருமண வயது எட்டாத நிலையில், குழந்தை திருமணம் நடைபெறுவதாக வருசநாடு ஊரக வளர்ச்சி அலுவலர் தேன்மொழி புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். அத்துடன் மணமகன் ஜெகதி, அவரின் பெற்றோர், பெண்ணின் பெற்றோர் மற்றும் திருமண மண்டப உரிமையாளர் மனோகரன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.