அழகிய பெரியவன்

பயணத்திட்டமின்றி, ஒரு தோள்பையை மாட்டிக்கொண்டு, வெளியூர் நிகழ்ச்சிகளுக்குப் புறப்பட்டுவிடுவது ஆர்வமூட்டும் அனுபவங்களைத் தரக்கூடிய ஒன்று. சென்ற வாரம் லாட்லி விருது தேர்வு கூட்டத்துக்கு அப்படி புறப்பட்டு சென்னை வந்தபோது அ.மார்க்சை ஒரு உணவகத்தில் சந்தித்தேன். எனக்கு அவரை சந்தித்து பல காலங்கள் ஆகியிருந்தது. அடையாறு பேருந்துப் பணிமனை நிறுத்தத்தில் இறங்கி இடதுபுறம் இருந்த உணவகத்தில் நுழைந்ததும் நண்பர் விஜயனோடு காபிகுடித்துவிட்டு அமர்ந்திருந்த அவரை என்னால் பார்க்க முடிந்தது. ஆர்வத்தோடு இருவரும் நலம் விசாரித்துக் கொண்டோம்.
லாட்லி விருது தேர்வு கூட்டத்தில் ச.தமிழ்ச்செல்வன், பிரளயன், கவின்மலர் ஆகியோரையும் சந்தித்தேன். அன்று ஒரே மகிழ்ச்சிதான். கூட்டம் கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ் அலுவலகத்தில் நடந்தது. அது ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகம். கிருஷ்ணசாமி, தியாகபூமி திரைபடத்தை எடுத்த பழம்பெரும் இயக்குநர்கே.சுப்பிரமணியத்தின் மகன். கூட்டத்தின் இறுதியில் கிருஷ்ணசாமி, தன் நிறுவனத்தின் பொன்விழா ஆவணப்படத்தைப் போட்டுக்காட்டினார். இன்டுஸ்வேலிடு இந்திராகாந்தி போன்ற பிரசித்தி பெற்ற ஆவணப்படங்களின் அறிமுகம் அதில் இருந்தது.
லாட்லி தன்னார்வஅமைப்பு. ஒவ்வோராண்டும் பெண்ணியம் சார்ந்த சிறந்த செய்திக்கட்டுரைகள், புலனாய்வு செய்திகள், விளம்பரங்கள், வானொலி மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு அவர்கள் விருது வழங்கிய சில விளம்பரங்கள் சிறப்பானவை. அவற்றுள் ஹேவல்ஸ், டாட்டாடீ, பாரத் மேட்ரிமோனி, ரைமண்ட்ஸ் ஆகியவற்றுக்கு வந்த விளம்பரங்களை சொல்லலாம்.
ரின் வெளியிடும் விளம்பரங்களை பார்க்க மகிழ்ச்சியாய் இருக்கிறது. ”இன்னும் ரெண்டு சக்கரம்தான் பாக்கி அங்கிள்”, ”ஆமாம். முதல்முறைதான். கடைசிமுறையல்ல” போன்ற வசனங்கள் அடித்தட்டு, நடுத்தட்டு மக்களின் மனவெழுச்சியை சொல்பவை.
சில விளம்பரங்கள் பார்த்ததுமே எரிச்சலை ஊட்டுகின்றன. சிந்தால் சோப்புக்கு வரும் விளம்பரத்தில் சோப்பை வாங்கச் சொல்லும் பெண் மருத்துவரின் பெயரோடு சாதி ஒட்டிக்கொண்டிருக்கிறது.(சோப்பால் சாதியழுக்கை போக்க முடியவில்லை!) சோப்பை எல்லோரும்தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதற்கு விளம்பரம் தருகிறவர்கள் மட்டும் ஏன் சிவப்பானவர்களாகவும், மேல்தட்டு சாதியினராகவுமே இருக்கிறார்கள்? இப்போது சில சேனல்களில் காட்டப்படும் சாதி திருமண விளம்பரம் மிக வெளிப்படையாக சாதி உணர்வைத் தூண்டுகிறது. சாதி ஒரு வணிகப் பொருளாகிவிட்டது. எப்படியெல்லாம் அது உருவெடுக்கிறது பாருங்கள்!
அழகிய பெரியவன், எழுத்தாளர்.
அமாவசைக்கும் ஐருக்கும் என்ன சம்பந்தம் என்று பழையகூற்று உண்மயாகிக்கொண்டுவருகிறது? இப்போது பட்டி தொட்டிகளிலெல்லாம் ஐயங்கார் பேக்கரி பலகைதெரிகிறது. ஆச்சிமசாலாவிற்ம் நம்மாத்துச்சாம்பாருக்கும் என்ன தொடர்பு? வியாபரம் செய்பவர்கள் உயசாதிபேரைச்சொல்லி பணம்பன்னினால் உயசாதியாய் அதிகாரம் செய்தவர்கள், இன்று அரசுவேலைவேண்டும் என்பதற்க்காக மிகப்பிற்பட்ட வகுப்பில் சேர்க்கச்சொல்லி போராடுகிறார்கள்? ஐயங்கார் பேக்கரி பலகைகளைஎதிர்க்காத ஐங்கார் சாதியர், ஐயங்கார் மாட்டுக்கறிகடை என்று பலகை வைத்தால் எதிர்ப்பார்களா? இல்லையா? மறுபக்கம் பறையன் பேக்கரி, குடும்பன் பேக்கரி என்றுவைத்தால் மக்கள் எப்பைம்போல் வருவார்களா?
LikeLike