கொங்கு பகுதியில் இளவரசன், கோகுல்ராஜ் போன்ற தலித் இளைஞர்கள் ஆதிக்க சாதி பெண்களை காதலித்தார்கள் என்பதற்காக கொல்லப்பட்டார்கள். இவற்றை உதாரணமாகக் கொண்டு, கொங்கு பகுதியில் வாழும் சாதிய குழுக்களைச் சார்ந்த இளைஞர்கள், இளம் பெண்களை அவர்கள் யாருடன் பேசுகிறார்கள், யாருடன் பழகுகிறார்கள் என்று கண்காணிப்பதோடு, இந்த ஆடியோவில் பேசியுள்ளதைப் போன்று கடுமையாக மிரட்டவும் செய்கிறார்கள். இந்த ஆடியோவைக் கேட்கும்போது கொங்கு பகுதியில் சாதிய தாலிபான்களின் ஆட்சி நடக்கிறதா என்கிற கேள்வி எழுகிறது…
அரசு இதை எளிதாக விடக்கூடாது. ஜாதியத்தற்குறிகளை குண்டர் சட்டத்தில் கைதுசெய்து, அந்த பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும். இல்லையேல் இன்னொரு கோகுல்ராஜ், இன்னொரு யுவராஜ்தான்.
LikeLike