மீரா கதிரவன்

சிறப்புக்காட்சியில் விசாரணை பார்க்க வாய்த்தது. தொடர்ச்சியாக கருத்துரிமை நசுக்கப்பட்டும் “கொல்லப்பட்டும்”வருகிற இன்றைய சூழலில்.. புரையோடிப்போன அதிகார மையத்திற்கு எதிராக மிக காத்திரமாக ஒலிக்கும் விசாரனையின் குரல் முக்கியமானது.கொண்டாடப் பட வேண்டியது!
கதைப்பாத்திரங்களின் உருவாக்கம், அதற்கான நடிகர்களின் தேர்வு என எல்லா வகையிலும் ஒரு முழுமையான சினிமா அனுபவத்தை தருவதில் வெற்றிமாறன் ஜெயித்திருக்கிறார்.அவருடைய சினிமா வாழ்க்கையிலும் தமிழ் சினிமா வரலாற்றிலும் விசாரணை மிக முக்கியமான படம்.
அறிவுத் திருட்டு ஒரு கலாச்சாரமாகிக் கொண்டிருக்கும் சூழலில் லாக்கப் நாவலை எழுதிய சந்திரகுமாரை கௌரவப்படுத்தியிருப்பதன் மூலமாக வெற்றிமாறன் தன்னை ஒரு பண்பட்ட, நாகரிகமான கலைஞன் என்பதை நிருபித்திருக்கிறார்.
விசாரணை தவற விடக்கூடாத அனுபவம். படத்தில் பங்காற்றிய அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!
மீரா கதிரவன், திரைப்பட இயக்குநர். இவரைப் பிந்தொடர