வெள்ளிக்கிழமை சென்னை வந்த மு. க. அழகிரியை நிருபர்கள் விடாமல் துரத்தி செய்தி சேகரித்தனர். அப்போது ஒரு நிருபர் “ஊர் முழுக்க உங்க போஸ்டரா இருக்கே” என்றதற்கு “நான் பிரபலமாக இருக்கறதால சிட்டி ஃபுல்லா இருக்கு” என்று தெரிவித்தார். இதைக் கேட்ட நிருபர்கள் பலர் சிரித்தனர்.
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தங்களது ஆதரவாளர்கள் திமுகவில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அழகிரி, தன்னுடைய ஆதரவாளர்கள் யாரும் நீக்கப்படவில்லை என்றும், அப்படி நீக்கப்பட வேண்டுமென்றால் லட்சம் பேரை நீக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
வீடியோ: நியுஸ் 7 தமிழ்