#தலித்முதல்வர் விவாதம்: சுபவீயின் கேள்வி புறக்கணிக்கக்கூடியதா?

மதிவண்ணன்

மதிவண்ணன்
மதிவண்ணன்

பத்திரிக்கையாள நண்பரொருவர் தலித் முதல்வர் ஆக வேண்டும் என்கிற விவாதத்தில் உங்கள் கருத்து என்ன எனக் கேடடார்;. அவரிடம்; சொன்னதும் சொல்ல நினைத்ததுமான சில கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்

தலித் முதல்வர் ஆக வேண்டும் என்கிற கருத்து எனக்கு உடன்பாடானதே. இன்னும் கூடுதலாக அழுத்திச் சொல்வதென்றால் ஒடுக்குமுறையில் உச்சபட்சத்தை அனுபவிக்கின்றதும் உற்பத்தியில் உடல் உழைப்பில் நற்பண்புகளில் முதன்மை இடத்தை வகிப்பதுமான அருந்ததியர் வகுப்பில் ஒருவர் முதல்வர் ஆவது கருத்தியல் ரீதியில் பொருத்தமான ஒன்று.

நடைமுறையில் இப்போது இந்த விவாதம் எழுந்ததின் அடிப்படை என்னவாக இருக்கிறது எனப் பார்த்தால் மக்கள் நலக் கூட்டணி மாநாடு தான் இதன் துவக்கம் எனக் கருதுகிறேன். இரண்டு சாத்தியங்கள் எனக்குத் தோன்றுகின்றன. மக்கள் நலக் கூட்டணி மாநாட்டில் வீசிக தொண்டர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். ஆனால் மாநாட்டு விளம்பரங்களில் மாநிலத் தலைவர்கள் என்கிற அடிப்படையில் திருமா, வைகோ ஆகியோருக்கு இரண்டாம் நிலையும் மத்திய தலைவர்கள் என்கிற அடிப்படையில் யெச்சூரி, சுதாகர் ரெட்டி ஆகியோருக்கு முதன்மை இடமும் அளிக்கப் பட்டிருந்தது. இதற்குப் எதிர்வினை ஆற்றும் விதமாகவும் கூட்டணிப் பங்கீட்டில் தனது முதன்மை நிலையை இப்போதே உறுதி செய்து விடும் விதமாகவும் இக்கோரிக்கை மக்கள் நலக் கூட்டணிககு விடப்படும் அறைகூவல் என்றும் பார்க்கலாம். இன்னொரு விதமாகக் கூட்டணி பேரம் வேறோர் அணிக்குப் போவதற்குத் தேவைப்படும் சூழலை அமைத்துக் கொள்ளும் நோக்கமாகவும் இருக்கலாம்.

எப்படி என்றாலும் இதில் லாபம் விசிகவுக்குத்தான்.

இந்த விவாதத்தின் போக்கில் நழுவிப் போக்கடிக்கப் படும் செய்தி குறித்தும் பார்க்க வேண்டும். இவ்விவாதத்தின் போது சுபவீ போன்றவர்கள் அருந்ததியர்களுக்குப் பிரதிநிதித்துவம் விடுதலைச் சிறுத்தைகள் அளிக்கவில்லையே என எழுப்பிய கேள்வி கிட்டத்தட்ட புறக்கணிக்கப் பட்ட நிலையில் இருக்கிறது. விசிக தரப்பில் 2001 தேர்தலின் போது ஒரு வேட்பாளர் அருந்ததியர் தரப்புக்கு அளிக்கப் பட்டது எனக் கூறப்பட்டது. 2001 இல் வாய்ப்பளிக்கப் பட்டவர் அருந்ததியப் பெண்மணி. அவர் பறையர் சாதியைச் சேர்ந்த ஒருவரை மணம் முடித்தவர். சாதி மறுப்புத் திருமணங்கள் நமக்கு உவப்பானவை தாம். நமக்கு எழும் கேள்வி. அவர் பறையரை மணம் முடிக்காமல் இருந்திருந்தால்; அவ்வாய்ப்பு வழங்கப் பட்டிருக்குமா?

2001க்குப் பிறகு விடுதலைச் சிறுத்தைகள் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்து விட்டுத் தலைமறைவு இயக்கம் நடத்தப் போய் விட்டார்களா என்ன?

நமக்குத் தெரிய மதிமுகதான் ஒருமுறை சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணித்தது. ஒவ்வொரு முறையும்; விசிக கணிசமான எண்ணிக்கையிலான இடங்களில் போட்டியிடத்தானே செய்தது. உள்ஒதுக்கீடு எதிர்ப்பு தொடர்பான நேர்காணல் ஒன்றில் நான் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புதான் நடத்துகிறேன். பறையர் பேரவையா நடத்துகிறேன் எனக் கேட்டார். வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் போது மட்டும் அவருக்கு அந்த செய்தி (பறையர் பேரவை தொடர்பான செய்தி) மறந்து விடுகிறது. பறையர் சாதியைச் சேர்ந்த வேட்பாளர்கள் அல்லது வளமான இடைச்சாதி வேட்பாளர்கள். நல்ல ஜனநாயகம்தான்.

மதிவண்ணன், எழுத்தாளர். இவரை பின் தொடர 

Mani Mathivannan

 

One thought on “#தலித்முதல்வர் விவாதம்: சுபவீயின் கேள்வி புறக்கணிக்கக்கூடியதா?

  1. தயவு செய்து தோழர்கள் அறிவை பயன்படுத்தி சிந்திக்கவும்,இந்தியாவின் மற்ற மாநிலங்களை விடவும் சமூகநீதி போராட்டமும்,பயணமும் எளிதாக இருக்க(உலகில் எங்கும் இல்லாத அளவிற்க்கு -ப்ளீஸ் ஃபார்வர்ட் டூ அறிவுஜீவி ?????? துரை ரவிகுமார் ) ஒரே காரணம் கோடி கருத்து வேறுபாடு இருப்பினும் அறிவுக்கடவுள் அண்ணல் அம்பேத்கராலேயே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்மைக்கடவுள் தந்தைபெரியார் அவர்களின் சூரியனின் வெப்பத்தைவிட‌ அதிக வெப்பம்கொண்ட வார்த்தைகளால் புடம் போடப்பட்ட மாநிலம் தான் தமிழகம் என்பது ஆறறிவு கொண்ட மிருகங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.அப்படிப்பட்ட தமிழகம் மீண்டும் சுயநல தாசன்களாலும்,சுயநலமணிகளாலும்,2000 ஆண்டு கனவை ஒரு மிருகத்தின் மூலம் நிறைவேற்றிக்கொண்டுள்ள ஆதிக்கசக்திகளின் ஆரியபடை தளபதியை புகழும் துரை ரவிக்குமார்.தந்தை பெரியாரை நாயுடு என்று எழுதிய கோமான் ஆவர்.ஆறாம் அறிவை பெற்றவர்கள் அவரை கண்டிக்காதது ஏன்?அறிவிலி,மூடர்களின் துணையோடு,ஆரியர்களின் ஆதரவோடு பதவியை அனுபவித்த கொள்கைகுன்று அவர். மானமும், அறிவும் மனிதனுக்கு அழகு என்று கூறிய பெரியார் பெயரை சொல்லக்கூடிய் தகுதி இல்லாதவன் கல்லூரி பேராசிரியனா? காசுக்காகவும் பதவிக்காகவும்,பேராசிரிய பதவியை துறந்தவன் அவன் பணத்துக்காக பரத்தையாகும் பெண்னை விட மோசமானவன். இவர்கள் ஜனநாயகத்தை இவர்கள் கட்சியில் ஒரு அருந்ததியினர் வேண்டாம் ஒரு தகுதியான ஆதிதிராவிட இனத்தை சேர்ந்த புதுமுகத்தை கட்சியின் பொதுசெயலாள‌ராக முன்நிருத்தி அரசியல் செய்யட்டும். இதற்கு பதில் எழுதும் ஆதாயத்தொண்டர்களை எதிர்பார்க்கும் துக்ளக். என்னடா எத்ற்காக இந்த விமர்சனம் என்று தெரியவில்லையா? அரசியல் ஆதாயம் தேடாமல் பொதுவாழ்வில் தொண்டாற்றும் சுப.வீ போன்றவர்களை விமர்சனம் செய்யும் தோழர்களுக்காக. நம் மீது நாமே தாக்குதல் நடத்தவைத்த ஓட்டுப்பொருக்கி அரசியல் பல்லாயிரம் ஆண்டுகள் வாழிய வாழியவே…

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.