ஆர்.எஸ்.எஸ்சுக்கு ஆதரவு திரட்டும் தினமலர் பாணி அறிவுஜீவித்தனம்: இது சமஸின் ஷிர்க்!

வில்லவன் இராமதாஸ் 

தமிழ் இந்து கட்டுரையில் த.ந.த.ஜவின் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை விமர்சனம் செய்து சமஸ் எழுதியிருக்கிறார். அது விமர்சிக்கப்படவேண்டியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதனை பல இசுலாமியர்களே விமர்சனம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆனால் சமஸ் வார்த்தைகளில் ஒரு நுட்பமான அரை இந்துத்துவ பிரச்சாரம் இருக்கிறது. இந்த வாஹாபியிச குழுக்கள் அதிகாரம் பெற்றால் அவர்கள் கோயில்களையும் இடிப்பார்களா எனும் கேள்வி முற்றிலும் விஷமத்தனமானது. மேலும் இவர்களை லாவகமாக இந்துத்துவ தீவிரவாதிகளோடு இணைவைக்கிறார் சமஸ்.

இந்துத்துவ கும்பல் வெளிப்படையாக இசுலாமியர்களையும், கிருஸ்துவர்களையும், மதசார்பற்றவர்களையும் ஒழிக்க வேண்டும் என அறிவிக்கிறது. இவர்கள் அப்படி அறிவித்திருக்கிறார்களா?

இந்துத்துவா கும்பலுக்கு போலீஸ், நீதித்துறை, ராணுவம், ஏனைய அரசுத்துறைகள் யாவும் பெருமளவு சாதகமாக இருக்கின்றன. இப்போது அரசு அவர்கள் வசம் இருக்கிறது. குஜராத் கலவரத்தில் ஈடுபட்ட ரவுடிகள் பலர் பெருமிதமாக அதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய வீடியோக்கள் இருக்கின்றன. பால் தாக்கரே மீது சிறீகிருஸ்ணா கமிசன் குற்றம் சாட்டியிருக்கிறது, ஆனால் அவர் ரோமத்தைக்கூட அரசு எந்திரத்தால் அசைக்க முடியவில்லை.

ஆனால் ஒரு முஸ்லீம் சிக்கினால் அவன் ஜாமீன் வாங்குவதற்குள் நாக்கு தள்ளிப்போகிறது. அதிகாரத்தைக் கைப்பற்றி வெளிப்படையாக தீவிரவாதம் செய்யும் இந்துத்துவத்தையும், இஸ்லாம் மக்களிடம்கூட பெரும்பான்மை பெறாத வஹாபியிசத்தை, இந்தியாவில் அதிகாரத்தை பெற வழியே இல்லாத இவர்களை இந்துவத்தோடு ஒப்பிட்டு பொதுமக்களை அச்சுறுத்துவது ஏன்? ஏற்கனவே தீவிர இந்துத்துவ ஆதரவாளர்கள் இந்த மாநாடு குறித்த அச்சுறுத்தும் பதிவுகளை வாட்ஸ்சாப்பில் பரவவிடும் சமயத்தில் அதனை அதிநுட்பமான வடிவில் இக்கட்டுரை செய்கிறது. வெகுமக்களிடையே இந்து நாளிதழுக்கு உள்ள நம்பகத்தன்மை இதனை இன்னும் ஆபத்தான பொதுக்கருத்தாக மாற்றிவிடும்.

பொருத்தமற்ற, அராஜகமான இந்த ஒப்பீடு வஹாபியிச பூச்சாண்டி மூலம் இந்துத்துவ சக்திகளின் கொடூர முகத்தை மறைக்க முற்படுகிறது. இவர்களும் இருந்துட்டு போகட்டுமே எனும் சமரசத்தை மறைமுகமாக பரிந்துரைக்கிறது. முஸ்லீம் தீவிரவாத பூச்சாண்டி காட்டி ஆர்.எஸ்.எஸ்சுக்கு ஆதரவு திரட்டும் தினமலரின் பாணியை அறிவுஜீவித்தனமாக இக்கட்டுரை செய்கிறது.

முஸ்லீம் மக்கள் மீதான குறைந்தபட்ச கரிசனத்தை ஊடகங்களிடம் உருவாக்க நமக்கு இருபதாண்டு காலமாகியிருக்கிறது. இப்படியான படைப்புக்களை விமர்சனம் செய்யாமல் விட்டால் மீண்டும் நாம் அந்த இருண்ட காலத்துக்கு செல்ல நேரும்.

சமசின் நீண்டகால வாசகன் எனும் வகையில் அவர் அறியாமல் இதனை செய்திருப்பார் என சந்தேகத்தின் பலனை மட்டுமே அவருக்கு சாதகமாக்க்லாம். ஆனால் தெரியாமல் குத்தியதால் மட்டும் கத்தி காயப்படுத்தாமல் இருக்காது.

வில்லவன் இராமதாஸ், சமூக-அரசியல் விமர்சகர். இவருடைய வலைத்தளம் இங்கே…

One thought on “ஆர்.எஸ்.எஸ்சுக்கு ஆதரவு திரட்டும் தினமலர் பாணி அறிவுஜீவித்தனம்: இது சமஸின் ஷிர்க்!

  1. சமஸ்ஸின் கட்டுரையை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதாலும் புரிந்துகொள்வதாலும் மட்டுமே இந்த விமர்சனம் சாத்தியமாகிறது.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.