”நாளைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், கோயில்கள், தேவாலயங்கள் மீதுகூடக் கை வைப்பீர்கள் இல்லையா?” தி இந்துவில் ஷிர்க் மாநாடு குறித்து எழுதப்பட்ட கட்டுரையை முன்வைத்து விவாதம்

அண்மையில் தவ்ஜித் ஜமாத் அமைப்பு ஹிர்க் ஒழிப்பு மாநாடு நடத்தியது. இது குறித்து ‘இந்துத்துவம் அடிப்படைவாதம் என்றால், வஹாபியிஸத்துக்கு என்ன பெயர்?’ என்ற பெயரில் தி இந்து தமிழில் நடுப்பக்க கட்டுரை வெளியாகியிருக்கிறது. அதில் உள்ள கருத்துக்களை ஒட்டி சமூக வலைத்தளத்தில் விவாதம் எழுந்துள்ளது.
எழுத்தாளர் ஃபிர்தவுஸ் ராஜகுமாரன்:

வஹாபியிசத்தையும் , இந்துத்துவத்தையும் ஒரே மாதிரியாக பாவித்து மிக பீதியை ஊட்டும் வண்ணம்
மிகைப்படுத்தியே சமஸ் கட்டுரை வடித்திருக்கிறார் .!

இங்கே வஹாபியர்கள் என்று சொல்லப்படுகின்ற இயக்கத்தினர் இஸ்லாமியர்களிடம் இருக்கும் ஒரு சில மூட நம்பிக்கை செயல்களைத்தான் கண்டிக்கிறார்களே – ஒழிக்க வேண்டும் என்கிறார்களே தவிர, ஹிந்துத்வா போன்று
இந்துக்களிடையே செய்யும் ஜாதிய ஏற்றத் தாழ்வுகளை , பாகுபாடுகளை புகுத்துவதில்லை -அதை வழியுறுத்துவதுமில்லை.

மேலும் ஹிந்துத்துவ பாசிசம் போன்று மனிதர்களை பிளவு படுத்தி வெறுப்பு அரசியல் செய்யவில்லை,
ஹிந்துத்துவா போன்று மக்கள் மத்தியில் வன்முறையை தூண்டும் அடாவடித்தனமான நஞ்சை விதைக்கும் செயல்களை செய்வதில்லை ..

ஆட்சி அதிகாரத்தை வஹாபிய முஸ்லிம்கள் கைப்பற்றி விடுவதைப் போலசமஸ் இவ்வளவு பயம் கொள்ளத் தேவை இல்லை .

ஒரு வேளை ஷிர்க் ஒழிப்பு மாநாடு அவரை இவ்வளவு பீதி கொள்ள வைத்து விட்டதோ ..?

இந்துத்துவ கோணத்தில் இதை எழுதுவதற்கு பதில் சமஸ் இதை இன்னும் கொஞ்சம் வேறு கோணத்தில் எழுதியிருக்கலாம் ..

ஜாஃபர் சாதிக்:
எந்த ஒரு இஸ்லாமிய அமைப்பும் ஹிந்துக்களுக்கு எதிரானது அல்ல,ஆனால் ஹிந்துத்துவா அதன் ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் இஸ்லாமியர்களை கண்டித்தும் அவர்களுக்கு எதிராகவுமே இருக்கிறது,உண்மை இப்படி இருக்கையில் ஹிந்துத்துவாவோடு வஹாபிஸத்தை ஒப்பிட்டிருப்பது உள்நோக்கம் கொண்டது,மேலும் இது விஷயமாக அவர் ஆய்வு செய்யும்போது பீர்முஹம்மது என்று ஒரு கம்யூனிச எழுத்தாளர் இருக்கார் அவர்கிட்ட ஆலோசனை கேட்டுருப்பாரோ என்ற சந்தேகம் எழுகிறது,ஏன்னா இதுபோலவே பீர் முஹம்மதுவும் வஹாபிசத்தை விமர்சனம் செய்துருக்கார்.
இபின் சுல்தான்:

தலைப்பே தவறு! என்று தான் சொல்ல வேண்டும். சொந்த மதத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ளுவதற்கும் தன் மதம் மட்டுமே இந்த நாட்டில் இருக்க வேண்டும் பிறரை விரட்டவோ அழிக்கவோ செய்ய வேண்டும் என்ற கொள்கையையும் ஒப்பிட்டுக் கேள்வி எழுப்புவது என்ன நியாயம்?!!!!

மூடநம்பிக்கைக் குறித்து பேசும்போது, தர்காவை இடிப்பது என்ற வாசகத்தை வலிந்து இழுத்து வந்து மையப் படுத்தி கட்டுரை எழுத வேண்டிய அவசியம் என்ன?!

சமஸ் தன கட்டுரையில் “காந்தி சொன்னார், “நான் ஒரு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவன், யூதனும்கூட.” இந்திய மதச்சார்பின்மைக்கான இலக்கணம் இதுவென்றால், இந்துத்துவம், இஸ்லாமியத்துவம், கிறிஸ்துவத்துவம், யூதத்துவம் என எந்த வடிவில் வந்தாலும் மத அடிப்படைவாதம் எதிர்க்கப்பட வேண்டும். அதுதான் மத அடிப்படைவாத எதிர்ப்புக்கான இலக்கணம், இல்லையா? ” எனக் கேட்கிறார்.

மதச்சார்பின்மைக்கும், மதஅடிப்படை வாதத்திற்கும் இடத்திற்கு இடம், இலக்கணத்தை மாற்றி மாற்றி பேசி இன்று பலரும் அரசியல் செய்கிறார்கள். எல்லா மதத்தையும் ஏற்றுக் கொண்டு வாழ்வது அல்ல மதச்சார்பின்மை. எல்லா மதத்தையும் அவரவர் பின்பற்ற அனுமதிப்பதோடு தன் மதத்தை தான் சுதந்திரமாகப் பின்பற்றுதலே மதச்சார்பின்மை. ( Live And Let Live)

இந்துத்துவ பாசிசக் கொள்கை தனிமைப் படுத்தப் பட்டு நிற்கும் இன்றைய சூழலில் எல்லா மதத்திலும் அப்படிப்பட்ட அடிப்படை வாதம் இருக்கத்தான் செய்கிறது என்று வாதிடுவது போல் உள்ளது இந்த கேள்வியும் கட்டுரையின் போக்கும்..

நீங்கள் மேற்கோள்காட்டிய கோவிலை முஸ்லிம்கள் சுத்தம் செய்த படம் நெட்டில் உலா வந்தது உண்மைதான். அந்த சுத்தீகரிப்புப் பணியில் ஈடுபட்ட சகோதரர்கள் நீங்கள் “வகாபியிசம்” என வகைப் படுத்தும் ‘தவ்ஹீத்’ கொள்கை உறுதி கொண்டவர்கள் தானே…?! என்ன ஒரு முரண்பாடு!

அப்படியிருக்கும் போது ‘தவ்ஹீத்’ (ஏகத்துவம்) கொள்கை உள்ளவர்களை வரலாற்றிலும் நடப்பிலும் உள்ள வன்முறையாளர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவது நியாயமா?

இஸ்லாத்தின் கொள்கையே ஓரிறைக் கொள்கைதான். அதில் வழிபிரண்டிருந்த சமூகத்தை சீர்திருத்தும் பணிக்கு தமிழகத்தில் 30 ஆண்டு கால வரலாறு உள்ளது. இதுவரை எங்கேனும் ஏதேனும் தர்கா இடிக்கப் பட்டோ, சேதப் படுத்தப் பட்டோ வரலாறு உண்டா?! பின்பு ஏன் பாசிசத்துடன் சீர்திருத்த வாதிகளை ஒப்பிடுகிறீர்கள்?!

சவூதி அரசாங்கத்தின் மீது மனித உரிமை பார்வையில் உங்களுக்கு ஆயிரம் விமர்சனம் இருக்கலாம். அதற்காக ஏகத்துவம் எனும் ஓரிறைக் கொள்கையை பினற்றுபவர்களை வரலாற்றுக் காட்டுமிராண்டித் தனங்களுடன் சேர்த்து வகைப்படுத்துவது எந்த வகையிலும் பொருந்தாத ஒப்புமை.

உலகத்தில் மதச்சார்பின்மை யை முதலில் கடைபிடித்த ஆட்சி இஸ்லாமிய ஆட்சி தான். அதற்குக் காரணமே கொள்கை வேறு, ஆன்மிகம் வேறு, அரசு வேறு என்று இல்லாதது தான். தன்னுடைய ஆட்சியில் இஸ்லாம் அல்லாதவர்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்று கொள்கை விளக்கம் தந்ததன் மூலம், இஸ்லாமிய ஆட்சியில் பிற மதத்தவர்களுக்கு அங்கீகாரம் தந்த ஒரே மார்க்கம் இஸ்லாம். அதை அறியாதவர்கள் அல்ல ஓரிறைக் கொள்கை உடையவர்கள்.

இது பொக்கையான ஒரு கருத்தின் மேல் வலிந்து விளக்கம் கொடுக்கும் கட்டுரை. சமஸ் அவர்களே, நீங்கள் அச்சப்படுவது போல் இங்கே அடிப்படைவாதத்திற்கு இளைஞர்கள் பலியாகவில்லை. மாறாக அடிப்படைவாதத்திற்கும், மதசார்பின்மைக்கும் தவறான பொருள் கொடுக்கப்படுகின்றன.

உண்மைதான், நடைமுறைக்கும்,கலாச்சாரத்திர்க்கும் கொடுக்கும் முக்கியத் துவத்தை விட கொள்கைக்கு முக்கியத் துவம் கொடுக்கிறார்கள் தான், இரண்டிற்குமான இடைவெளியை நிரப்பத் தெரியாமல் தனிமைப் பட்டு போகிறார்கள் தான். ஆனால் அது நீங்கள் சொல்லுமளவு அபாயமான வீரியத்தில் இல்லை, அதில் யாருக்கும் பங்கமும் இல்லை. அதுவும் சீர்செய்யப்பட்டு களைந்து போய்விடும்.

பிறரைத் தாழ்வாகக் கருதச் சொல்லி செய்யப்பட்ட ‘புனித போதனை’ களுடன் அனைவரும் ஒருத்தாய் தந்தையின் மக்கள், சேரியானாலும் மாளிகையானாலும் இறைவனின் முன்னால் இறைநம்பிக்கையும், நற்பண்புகளையும், நற்காரியங்களையும் தவிர எதுவும் ஒருவரை ஒருவர் மிகைப் படுத்தாது என்ற ‘புனித போதனை’ யும் ஒப்பிட உங்களுக்கு எப்படி மனம் வருகிறது?! .

பிறரின் கலாச்சாரத்தை பின்பற்ற இடையூறு செய்யாமல் ஒற்றைக் கலாச்சாரம் பின்பற்றுவதில் என்ன தவறு? ஒரு கலாச்சாரத்தை பின்பற்றாமலே எப்படி பாதுகாப்பது?! நீங்கள் தானே சொல்கிறீர்கள், இந்தியாவின் தென்முனையில் வாளால் அல்ல, வணிகர்களின் நற்குணங்களால் இஸ்லாம் ஈர்க்கப்பட்டு பரவிய உண்மையை ?! அவர்கள் அந்த ஒற்றைக் கலாச்சாரத்தை பின்பற்றியதால் தானே அது சாத்தியமாயிற்று. அவ்வாறிருக்க உங்கள் வாதம் முரண் படுகிறது தானே?!

நம் கண்முன் காண்கிறோமே, இந்த தமிழ் கலாச்சாரத்தின் முக்கிய அம்சமான ‘முந்தானை’ இதைப் பின்பற்றாமல் விட்டதன் விளைவு இன்று நாம் கலாச்சாரத்தை இழந்துவிட்டோம், வடக்கு ஆள்கிறது என்றெல்லாம் சலசலக்கும் நிலை வந்துவிட்டதே. ஒரு கலாச்சாரத்தை பின்பற்றாமல் பாதுகாக்க முடியாது என்பதற்கு இது சிறு எடுத்துக் காட்டு.

உலகிற்கு சகிப்புத் தன்மையை கற்றுத் தந்த மார்க்கம் இஸ்லாம், அதை செயல்முறைப் படுத்திக் காட்டித் தந்தவர்கள் முகம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். இதை அவர்கள் மக்கா வாசிகளுடன் செய்துகொண்ட ஒருதலை பட்சமான ஒப்பந்தந்திலிருந்தும், மதினாவில் ஆட்சி செய்யும் போது யூதர்களிடம் செய்துகொண்ட ஒப்பந்தங்களிலிருந்தும் குறைந்தபட்சம் அறிந்து கொள்ளலாம்.

கொள்கைகளில், மார்க்கத்தில் பகுத்தறிவுக்கு உகந்த விஷயங்களை புறந்தள்ளிவிட்டு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட விஷயங்களில் பகுத்தறிவுக் கேள்வி எழுப்புவது காலம் காலமாக கொள்கை குழப்பவாதிகள் செய்துவரும் செயலாகும். அதை நாம் செய்துவிடாமல் பார்த்துக்கொள்வோம்.

சொந்த மார்க்கத்தில் மூடநம்பிக்கையை எதிர்த்து சீர்திருத்தம் செய்வதையும், அதற்கு எள் முனையளவும் சம்பந்தமில்லாத இந்துத்துவ பாசிசத்தையும் ஒப்பிட்டு எழுதியுள்ள உங்கள் கருத்தை நீங்கள் மீளாய்வு செய்து இன்னும் நேர்த்தியாக ஆய்வு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.