ஈஸ்டர்ன் மசாலா தயாரிப்பு நிறுவனம் விற்பனைக்கு விட்டுள்ள ‘பிராமின் சாம்பார்’ பொடி குறித்து சமூக ஊடகங்களில் விவாதம் எழுந்துள்ளது. சாம்பார் பொடியிலும்கூட சாதியில் பார்ப்பதா என பல கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பத்திரிகையாளர் யுவகிருஷ்ணா தன்னுடைய முகநூலில் ‘சாம்பாருக்கும் சாதி பிரிப்பது பார்ப்பனருக்கு மட்டுமே சாத்தியம்’ என பதிவிட்டிருந்தார். அதை ஒட்டி நடந்த விவாதம்…
Narasimhan TA: Sambar derived its name from Sambaaji, Maratha Brahmin who cooked for Tanjore rulers. Whats wrong?
Vishnu Ram: The word Sambar (old Tamil:Champaar – சாம்பார்) stems from Tamil word Champaaram (சம்பாரம்) meaning spicy condiments. Chambaram kootu (சம்பாரங்கூட்டு) and chambaram podi (சம்பாரப்பொடி) means curry powder.[citation needed]
A Tamil inscription of 1530 CE, evidences the use of the word champaaram, in the sense of meaning a dish of rice accompanying other rice dishes or spice ingredients with which a dish of vegetable rice is cooked:
“அமுதுபடி கறியமுது பல சம்பாரம் நெய்யமுதுள்ப்பட தளிகை ஒன்றுக்கு பணம் ஒன்றாக”
TRavi Chandran: ஈஸ்டன் கம்பனிக்காரனின் பித்தலாட்டத்திற்கு பிராமணர்களை திட்டுவது ‘” சகிப்புத்தன்மை”.
Karuna Karan: ஐயா இது வியாபாரி ஒருத்தனின் வியாபார யுக்தி ….இதுல பார்பனர்களின் பங்கு எதுவுமில்லை. ஹலால் செய்யப்பட்டது என போர்டு வைப்பது இஸ்லாமியரை கவர்வதற்கான யுக்தி. அதுபோலவே இதுவும். பதிவு செய்த நண்பர் இப்போதான் தமிழ்நாட்டுப்பக்கம் வர்றார் போல..ஐயங்கார் பேக்கரி, கவுண்டர் மெஸ், செட்டிநாடு ஓட்டல், தேவர் டீக்கடை, முதலியார் மெஸ் எல்லாம் நண்பர் பார்த்தது இல்லையோ?
Swami Sushantha: இது ஜாதி குறித்து அல்ல ஒவ்வொரு வழக்கப்படி தயாரிப்பை குறிப்பது திண்டுக்கல் தலப்பா கட்டி பிரியாணி என்பது அவர்களது தயாரிப்பு முறை , செட்டி நாட்டு குழம்பு என்பது இன்னொரு வகையான ஸ்பெசல் அன்னபூரணா மசாலா என்பது ட்ரேட் மார்க்.
Jabar Batcha: கத்தார் ல அய்யங்கார் பிராண்ட் காராபூந்தி கிடைக்குது.