தமிழ் ஆதவன்
சுப வீரபாண்டியனின் விவாதம் சிறுத்தைகள் அருந்ததியருக்கு போட்டியிட வாய்ப்புத் தரவில்லை என்ற பொய்யான செய்தியை பதிவு செய்வதோடு நிற்கவில்லை. நாம் அதை அந்த அளவோடு நிறுத்திப் பார்ப்பதும் சரியானதல்ல. தலித்கள் அதிகாரத்திற்கு வந்தாலும் மாற்றம் வராது, இன்னமும் இழிவை சுமக்கும் போது தலித்கள் அதிகாரம் குறித்து சிந்திக்க கூடாது. சிறுத்தைகள் அனைத்து பட்டியலினப் பிரிவினருக்குமான கட்சி அல்ல போன்ற செய்தியைகளை பல வார்த்தை ஜாலங்களில் பதிவு செய்தார் சுப வீரபாண்டியன். சுபவீ சிறுத்தைகளை குற்றம் சொல்லிவிட்டார் என்கிற அளவோடு அதை நிறுத்திக் கொள்ளக் கூடாது. அவரின் பேச்சில் இருந்த உள்நோக்கத்தை மிக நுட்பமாகவே கவனிக்க வேண்டும்.
ஒரு வேளை சிறுத்தைகள் அருந்ததியருக்கு போட்டியிட வாய்ப்பு தந்திருக்காவிட்டாலும் , அவர் அதை ஏன் பொது வெளியில் பதிவு செய்ய வேண்டும் ? அவரின் நோக்கமே ….
1.சிறுத்தைகள் பட்டியலினத்தின் அனைத்துப் பிரிவினருக்குமான கட்சி அல்ல என்கிற தோற்றத்தை உருவாக்குவது ,
2.தலித் கட்சிகளின் அரசியல் எழுச்சியை உள்சாதி பிரிவுகளுக்குள் இருக்கும் சில முரண்களை முன் வைத்து வீழ்த்துவது..
- தலித் அரசியலை ஏற்று பட்டியலினப் பிரிவுகளின் ஒருங்கிணைப்பை விரும்பும் , களமாடும் தலித்களை உள்சாதி அரசியல் சிந்தனைக்குள் தள்ளுவது ..
-
பட்டியலின பிரிவுகளின் பொதுத் தலைமையையும் கூட , தனி ஒரு பிரிவுக்கான தலைமையாக முன்னிறுத்துவது.. இது போன்ற மிக நுட்பாமான , அபாயகரமான கருத்துக்களை சுபவீ போன்றவர்கள் தலித் ஆதரவு நிலைபாட்டிலேயே முன்வைப்பது அவர்களின் சாதுர்யாமான அணுகுமுறை .. ஒரு வேளை சிறுத்தைகள் அருந்ததியருக்கு போட்டியிட வாய்ப்பு தந்திருக்கா விட்டால் , சுபவீ யின் விஷமக் கருத்து வீரியம் பெற்று இருக்கும்.
10 ஆண்டுகளுக்கு முன்னால் கலைஞர் ஒரு பேட்டியில் சொல்லும் போது திருமாவளவன் PR தலைவர் , கிருஷ்ணசாமி PL தலைவர் என சொன்னார். இதை அவர் சொன்னதன் நோக்கம் ஒரு பிரித்தாளும் சூழ்ச்சி. தலித் அரசியல் வலிமை பெறக் கூடாது , தலித் தலைமை வலிமை பெறக் கூடாது , பட்டியலினப் பிரிவுகளின் ஒருங்கிணைப்பு ஏற்படக் கூடாது என்பதுதான் அவர் கருத்தின் நோக்கம் . கலைஞர் அவர்கள் தலித் இயக்க எதிர்ப்பு நிலையில் இருந்து சொல்லும்போது இரண்டு பிரிவுகளும் அதை ஓரளவு முறியடிக்க முடிந்தது. ஆனால் ஆதரவு நிலையில் இருந்து ஒரு பிரிவினரை இன்னொரு பிரிவினருக்கு எதிராக கொம்பு சீவி விடுவது அவர்களுக்கான பொது அரசியலை வீழ்த்தும் நோக்கம் கொண்டது. இதைதான் சுபவீரபண்டியன் இப்போது செய்கிறார், இதை மதிமாறன் போன்றவர்களும் கூட செய்கிறார்கள். பெரியாரிஸ்ட்கள் பலரும் இதை செய்கிறார்கள். காவிகள் தலித் இயக்க எதிர்ப்பு நிலையில் இருந்து செய்வதை , கருப்பு சட்டைகள் தலித் ஆதரவு நிலையில் இருந்து செய்கிறார்கள்.
தலித்கள் மீது கரிசனம் காட்டுகிறோம் , இரக்கப் படுகிறோம் , சலுகை கூட செய்கிறோம் , குரல் கொடுக்கிறோம் , ஆதரவு கூட்டம் நடத்துகிறோம் ஆனால் அதிகாரம் பற்றி மட்டும் சிந்திக்காதீர்கள் சுப வீ போன்றவர்கள் சொல்லாமல் சொல்கிறார்கள். அன்புமணி முதல்வர் வேட்பாளர் என அறிவித்தால் அமைதியாய் இருக்கும் சுபவீ உள்ளிட்ட திராவிட இயக்கத்தினர் திருமாவளவன் முதல்வர் வேட்பாளர் என ஒரு வாதத்திற்கு சொன்னால் கூட ஏற்க முடியாததற்கு அவர்களின் உள்ளார்ந்த சூட்சம அரசியலே காரணம். சுவீ யின் விளக்கத்தை , மறுப்பை ஏற்கும் அளவிற்கு நாம் பலவீனமான மனநிலையில் இல்லை.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் தமிழ் ஆதவன். அண்மையில் தலித்தை முதல்வராக ஏற்பது குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் விவாதம் நடந்தது. அந்த விவாவத்தில் பேசிய சுப.வீரபாண்டியனின் கருத்தையொட்டி எழுதப்பட்டிருக்கிறது இந்தக் கட்டுரை.
திராவிடம் ஊர்த் தெருவோடு
நின்று விட்டது என்பதற்கு
சாட்சியம் அவருடைய பேச்சு…
LikeLike